உடலலெல்லாம் காயம் மற்றும் கண்ணாடி செதில் குத்தல்கள் என எல்லா வகையிலும் சக்தி இழந்த எமி , “ முடிந்து விட்டது , இன்னும் சற்று தூரம் தான்“ என தன்னை ஆசுவாசப்படுத்திகொண்டு முன்னேறி சென்று கொண்டிருந்தாள். அந்த மூன்றாவது க்ளு என்னவென்பதை கண்டுபிடித்து விட்டால் , அதன் தேடலின் முடிவில் ஜானி ஆகிய மிஸ்டர் எக்சை கண்டுபிடித்துவிடலாம். ஆனால் அவனை எப்படி அழிப்பது ?? உண்மையில் அந்த ஜானி யார் ?? என்ற கேள்வியை நெடுநேரமாக தன்னுள் வைத்து கொண்டு சென்று கொண்டிருந்தாள் . மார்க்கை தன் பாதுகாப்பிற்காகவும் தனக்கு இழைத்த நம்பிக்கை துரோகத்தாலும் தான் அவனை கொன்றாலும் எமிக்கு மார்க்கின் நினைவாகவே இருந்தது . இதை எல்லாம் தனது புத்தகத்தில் காட்சிகளாய் ரசித்து கொண்டிருந்த ஜானி தனது அரண்மனைக்கு எமிக்காக காத்து கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் மிக பொறுமையாக சென்று கொண்டிருந்த எமிக்கு கண்கள் கூச ஆரம்பித்து குளிரவும் ஆரம்பித்தது . மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள் . இளஞ்சூரிய வெளிச்சம் மற்றும் பனி படர்ந்த பிரேதேசமாக அது காட்சி அளித்தது . இதுவரை இருட்டு உலகத்திலே இருந்து வந்த ...