Skip to main content

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் - 2


                   
அங்க அந்த அறை இருட்டாகவதர்க்கும் எமி மயங்கி விழுவதற்கும் சரியாய் இருந்தது . சில நிமிடம் கழித்து மெதுவாக மூடி இருந்த கண்களை திறக்க முயற்சித்தாள். ஒருவாரு தனிமையும் வெறுப்பும் சூழ்ந்த மன அயர்ச்சி அவளுள் தோன்றியது . தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவளுக்கு அதிர்ச்சி !

எங்கே இருக்கிறாள் அவள் ??.. ரெட்டை பெரிய நிலாக்களும்,நெடிதுரயந்த எரிந்து போன மரங்களும் அதன் மேல ராக்க்ஷத வௌவ்வால்களும் பறந்து கொண்டு இருக்க ,சுற்றி  கண்ணுக்கெட்டிய தூரம் ஆறடி வளர்ந்த புற்கள் மட்டுமே எல்லா திசையிலும் கண்ணில் தென்பட்டன . இரவு பொழுதை எப்பொழுதுமே ரம்மியமாய் நினைக்கும் எமி , இன்று அது மரணத்தின் ஓலம் கேட்கும் திசையாய் பார்த்து கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.

இரண்டி எடுத்து வைத்திருக்கும் பொழுது பின்னால் எதோ சல சலப்பு சத்தம் கேட்டது .

எமி பயந்தபடியே திரும்பி பார்த்த பொழுது அந்த புற்கள் அமைதியாய் இருந்தன.

மீதும் பயத்துடனே நடக்க ஆரம்பித்தாள்.

மீண்டும் சல சலப்பு சத்தம். திரும்பி பார்த்த பொழுது அதே அமைதியான புற்கள் .

இந்த முறை திரும்பி சத்தம் வந்த திசையை பார்த்தபடியே தன் வழியில்  பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.

திடீரென்று ஒரு கை அவள் வாய் பொத்தி வேகமாக இழுத்து செல்ல ஆரம்பித்தது . எமி தன் மொத்த வலுவை கொண்டு அந்த பிடியில் இருந்து விலகி செல்ல முயற்சித்தாலும்,அவளால் முடியவில்லை. அவளால் திரும்பி அந்த உருவத்தையும் பார்க்க இயலவில்லை . இருப்பினும் அவன் கையை கடித்துவிட்டு உதவிக்காக கத்தினாள்.

“காப்பாத்துங்க .. காப்பாத்துங்க ... சம்படி ஹெல்ப் மீ !!” என தன் திராணி முழுவதையும் ஒன்று திரட்டி கத்தினாள்.

“ ப்ளார் ” என அவள் கன்னத்தில் அறை விழுந்தவுடன் அவள் மயங்கிவிட்டாள் . 

சில நேரம் கழித்து  மெல்ல கண்களை திறந்த போது  தான் ஒரு குகையில் இருப்பதாய் உணர்ந்தாள். அவள் வயது ஒத்த  ஒரு ஆண் அங்கே கொள்ளி விறகுகளை ஒன்று சேர்த்து தீமூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தான் .  வசீகரமான முகம் ,  அவன் தான் தன்னை அழைத்து வந்திருக்க வேண்டும். இருந்தும் ஒரு பெண்ணை கை நீட்டி அடித்தது எமிக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை . அவள் எழுந்ததை கவனித்த அவன் மெதுவாக அவளிடம் நெருப்பில் சுட்ட இறைச்சியை நீட்டவும் , பசியில் இருந்த அவள் அதை வெடுக்கென பிடுங்கி உண்ண ஆரம்பித்தபோது அவனே பேச்சை ஆரம்பித்தான் .

 “ இதோ பார் ... நம்மக்கு பேச நேரம் கிடையாது . உடனடியா நாம ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்துக்கு போகணும் . அதுல்ல பிரச்சனை என்னன்னா அந்த இடம் எங்க இருக்குனு எனக்கு தெரியாது “

“ எனக்கு நீங்க சொல்றது ஒன்னும்மே புரியல ... நான் எங்க இருக்கேன் ... அண்ட் நீங்க யாரு ?? “

“ ம்ம்ம்... இன்னிக்கு நீ யாருகிட்டயாவது புத்தகம் வாங்குனயா ?? “

“ அ... ஆமா... ஒரு கிழ... “

“ ஆமா கிழவன்... நான் நினச்சது சரியா போச்சு . நாம இப்போ அந்த புத்தகத்துல மாட்டிகிட்டு  இருக்கோம் மிஸ் ....?? “

“ எமி ... எமி ஜாக்சன் “

“ என் பேரு மார்க் ... பால் மார்க். “

“ ஒ மை காட் ... இப்போ நாம என்ன பண்றது ...?? “ என பயந்தாள்.

“ நானும் ஒருவகையில அப்பிடிதான் இங்க வந்தேன் .இந்த உலகம் ரொம்ப வித்தியாசமானது . இங்க பசிக்கும் ஆனா தூக்கம் வராது . இங்க பேய்களும் ட்ராகுலாக்களும் சாதாரணம் . 

“ ஆனா உங்க வயசு ...?? “

“ஆமா ....இங்க நேரம் ஓடாது . அதனால யாருக்கும் வயசாகாது . மத்தபடி எனக்கு எந்த விஷயமும் தெரியாது . சரி நாம சீக்கிரமா ஏதாவது பாதுகாப்பான  இடத்துக்கு போகணும் “ என்று அவளை வேகமாக கைபிடித்து ஓட ஆரம்பித்தான் மார்க்.

ஒரு இடத்தில் அவள் கால் தடுக்கி விழவே “ஓ” வென்று கத்தினாள் . “ எமி ப்ளிஸ் கத்தாதே.. அதுங்க வந்துடபோகுது !! “ என அவன் முடிக்கும் முன்பே அந்த  ராக்க்ஷத வௌவால் அவர்களை நோக்கி வர ஆரம்பித்தது .

“ இத பத்தி நீ சொல்லவே இல்லையே மார்க் ...?? ”

“இதுங்களுக்கு காது மட்டும் தான் கேக்கும் .. கண்ணு தெரியாது . நீ சத்தம் எதுவும் போடாத. அதனால தான்  நான் உன்னை கூட்டிட்டு வரும் போது நீ கத்துனப்ப அடிச்சேன் “ என மெல்ல கிசுகிசுத்தான் .

இப்போது அவன் அடித்தது மறந்து போய், அவனின் வசீகர முகத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவளாய் இருந்தாள்.

“ எமி... சீக்கிரம் தரைல படுத்துக்கோ....” என்று சொல்லவும் அந்த வௌவால் அவர்களை நெருங்கி விட்டது .

“ எமி ...சத்தம்.... சத்தம் மட்டும் போடாத ...” என அவள் காதோரம் கடித்தான்.

அவள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை விட அந்த நேரத்தில் அவன் அவள் காதோரம் கிசுகிசுக்கும் போது பட்ட மூச்சு காற்றை இன்னும் சுவாசிக்க ஏங்கி கொண்டிருந்தாள் .

இப்போது அங்கே ஒருவிதமான மயான அமைதி அந்த இடத்தில் நிலவியது . மெதுவாக அவர்களை நோக்கி நடந்து வந்த அந்த வௌவால்,அந்த ஆறடி வளர்ந்த புல்லில் அவர்கள் படுத்திருந்ததை கணிக்க முடியாமல் அந்த இடத்தை நோட்டமிட்டு மட்டும் சென்று விட்டது .

இருவரும் பின்பு மெதுவாக எழுந்தனர் . தப்பித்ததில் ஒரு வித மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தென்பட்டாலும் இனிமேல் எப்படி தப்பிக்க போகிறோம் என்பதே  அவர்கள் முகத்தில் பெருபான்மையாக இருந்தது .

“ சரி எமி .... நாம கிளம்புவோம் ..”

“ ம்ம்ம்...” என்றாள் சிரிப்பு கலந்த வெட்கத்தோடு !! 
இருவரும் கிளம்ப தயாரானார்கள்.

“ என்ன விட்டு அவ்ளோ சீக்கிரம் போயிடுவிங்களா  பசங்களா ?? ” என்ன சிரிக்கும் குரல் கேட்டது .

வெள்ளை சட்டையும் கருப்பு பேண்டும் ஒரு கையில் கோட்டை தோள்பட்டையில் சுமந்தபடி , மற்றொரு கையில் சின்ன தடி போன்றும் வைத்திருந்து அவர்களுக்கு அந்த உருவம் காட்சியளித்த போது அங்கே அந்த ரெட்டை நிலாக்கள் ஒரே நேர்கோட்டில் வந்து  சேர சில நிமிடங்களே இருந்தன.

- தொடரும்

அடுத்த அத்தியாயத்திற்கு இங்கே சொடுக்கவும்

         
 


Comments

Popular posts from this blog

பாடல்கள் பலவிதம் - Songs i love

" பாடல்கள் பலவிதம் “  இசை என்பது உலகின் மொழி . அத்தகைய மொழியில் குறிப்பாக தமிழ் பாடல்கள்  நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. அவை யாவும் மனநிலை மாற்றும் போதை வஸ்துக்கள் . நாம் பெரும்பாலும் ரசித்த , சிலர் ரசிக்க தவறிய பாடல்களின் உணர்வுகளை வெளியே எடுத்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.   பாடல்கள் பலவிதம் #1 Song link - https://www.youtube.com/watch?v=v8eUuzElvX4 “ தென்றல் வந்து தீண்டும் போது “ - அவதாரம் முதல் பாடல் இசைஞானியின் பாடல் . எத்தனையோ பாடல்கள் அவர் கடந்து வந்திருந்தாலும் இந்த பாடல் ஒரு பிளாட்டினம் கிரீடம் . இந்த பாடலை சிலாகிக்க, வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் வறட்சி ஆகி இதயம் அந்த பாடலில் லயித்துவிட்டது .  அது தான் “ தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ, மனசுல “ பாடல்.   கண் பார்வை அற்ற நாயகி ,தனக்காக நாயகனும் கண்ணைக்கட்டி கொண்டு கஷ்டப்படுவதை அறிந்து , அவளுக்கு கண்ணாக இருந்து தன்னை வழிநடத்தும்படி கேட்க , அந்த ஒரு பரிவின், ஆசையின் புள்ளியில் தொடங்குகிறது பாடல். ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையின் சாரம்சத்தை கொண்டு  அன்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் -1

அன்று மாலை எமிக்கு எதுவுமே சரியாய் நடப்பதாய் தெரியவில்லை.சிறிது நேரம் யோசித்தவள் தலை வலிக்கவே  யோசிப்பதை நிறுத்திவிட்டு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு கிளம்பி சென்று கொண்டிருந்தாள் . “ மேடம் இந்த புக்கு ரொம்ப நல்லா இருக்கும் ... வாங்கி படிங்க எல்லாருடைய விருப்பத்துக்கு ஏத்தா மாதிரியும் இங்க கம்மி விலையில் புத்தகம் கிடைக்கும் “ என எமியை மட்டுமே ஒருவாறு உற்று நோக்கி கொண்டே தன் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தான் அந்த வியாபாரி கிழவன். அந்த கிழவனை கடந்து சென்றவள் , ஒரு நிமிடம் நின்று அவனை திரும்பி பார்த்தாள். அவன் கண்கள் அவளை " வா வா "  என்றது . அவளும் அவனிடம் வசியப்பட்டது போல அவனிடம் ஈர்க்கப்பட்டு அவனருகே சென்றாள் . வானிலை கருப்பு மேகங்களாய் மாற , மற்ற பறவைகள் எல்லா இடத்திலும் பறந்து செல்லும் போது அங்கே வித்தியாசமாய் கூட்டமான அண்டங்காக்கைகள் வட்டமிட்டு அமர்ந்து கொண்டு எமியை உற்று நோக்கி சூழ்நிலையை மோசமாக போவதை உணர்த்தியது. “ வா எமி ...” “ என் பெயர் அவனுக்கெப்படி தெரியும் ?? ” என அதிர்ந்தாள் . “ எனக்கு எல்லாம் தெரியும் எமி ...! “ என சிரித்தான் அந்த நரைத்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் - 4

மெல்ல மார்க்கை நோக்கி நடந்து வந்த லீமர் வான்ட் , தன் சாத்தான் படைகளை கை காட்டி சைகையில் நிறுத்தினான் . இருவருக்கும் பயத்தில் இதய துடிப்பு உசேன் போல்டுடன் போட்டி போட்டு கொண்டு ஓடியது . லீமர் வான்ட் மெதுவாக தன் கைகளை மார்க்கின் கழுத்தின் மீது வைத்து அவனை தூக்க ஆரம்பித்த போது  மார்க் அலறினான் !! “ என்ன விட்டுடு ....” லீமர் . “ ஆமா ... அவன விடு “ என கதறினாள் எமி. “ ஹாஹஹாஹாஹா..... “ என லீமர் சிரித்த போது அங்கே  அந்த மின்னல் வெளிச்சத்தில் அவன் கொடூரமாய் தெரிந்தான் . “ விட்டுடறேன்..... ஆனா நீ எனக்கு வேணும் எமி ...” என மீண்டும் வில்லத்தனமாக சிரித்தான் லீமர். அவனின் இறுக்கமான பிடியிலும் அந்த மழையிலும் மார்க்கால் வாயை திறக்க முடியவில்லை . “ சரி ... அவன விட்டுடு ... என்ன எடுத்துக்கோ ...” “ தட்ஸ் மை கேர்ள் ....கம் டு பாப்பா “ என மறு கையால் எமியை கழுத்தோடு தொட்டு தூக்கினான் லீமர் . அப்படி தூக்கும் பொழுது லீமரின் நகம் பட்டு எமிக்கு லேசாக கீறி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது .  இருவரையும் ஒரே மூச்சில் தின்றுவிட தன் நீண்ட நாக்கை தொங்க போட்டு எமியை நெருங்க ...