Skip to main content

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் - 6



அந்த கயிற்றின் பிடியில் இருந்து தப்பிக்க எமி முயற்சி செய்தாலும் , அந்த கயிறு அவளை விடுவதாய்  இல்லை. மெல்ல அவள் உடல் முழுவதும் சுற்றி கொள்ள தொடங்கியிருந்தது. எப்படியாவது இதிலிருந்து தப்பிக்க வேண்டும்..... மார்க்கை காப்பாற்ற வேண்டும் என்பதே எமி மனதில் இப்போது  ஓடி கொண்டிருந்தது .

திடீரென்று ஞாபகம் வந்தவளாய் தன் கையிலிருந்த தகடை பார்த்தாள். ஒரு பக்கம் கிங் ஆப் ஹார்டினும்... மறு புறம் ஒரு இயேசு கிறிஸ்து படமும் இருந்தது . அடுத்து என்னவென்பதை அவள் ஒருவாறு யூகித்து விட்டாள்.

“ ஆனால் இந்த பிடிலிருந்து எவ்வாறு தப்பிப்பது ...?? “ என்று யோசித்து கொண்டிருக்கும் போது ஒரு அம்பு நேராக எமியை நோக்கி பாய்ந்தது .

தொலைந்தோம் என நினைத்தவளுக்கு அதிர்ச்சி!

 அந்த அம்பு அவளை சுற்றி இருந்த கயிற்றின் மீது பாய்ந்து , மெல்ல அந்த கயிற்றின் பிடியிலிருந்து வெளி வர தொடங்கினாள். அதே நேரத்தில் அம்பு வந்த திசையை நோக்கி பார்த்த பொழுது அங்கே யாரும் இருப்பதாய் தோன்ற வில்லை . அதை யார் எய்து இருப்பார்கள் என யோசிக்கவும் எமிக்கு நேரமில்லை. மெல்ல நடந்து அந்த தொங்கு பாலத்தை கடந்தவளுக்கு புதுமையாய் நிறைய வீடுகள் தென்பட தொடங்கின .

மகிழ்ச்சியில் ஒவ்வொரு வீடாக  சென்று பார்க்க , அங்கே மனிதர்கள் இருப்பதற்கான சுவடு தெரிய வில்லை . சுற்றி முற்றி பார்த்து விட்டு மீண்டும் நடக்க துவங்கினாள். தனக்கும் அந்த தகடில் இருக்கும் படத்திற்கும்  என்ன சம்மந்தம் ?? .. அதில் மறைக்க பட்ட விஷயம் என்ன ?? என ஒருவாறு தனக்குள் யோசித்து கொண்டிருந்த போது மழை வர தொடங்கியது.

மெதுவாக ஒரு வீட்டின் ஓரம் ஒதுங்கினாள்.

மழை நிற்கும் வரை அந்த வீட்டின் ஓரத்தில் தங்கி செல்லலாம் என எண்ணியவளுக்கு உள்ளே யாரோ இறும்பும் சத்தம் கேட்டது . மெதுவாக வீட்டின் உள்ளே சென்று யாராவது இருக்கிறார்களா என தேடி பார்த்தாள்.

“ ஹெலோ .... யாராவது உள்ள இருக்கிங்களா ..?? “

“ .............”

“ இருக்கீங்களா .....?? “

 மீண்டும் இருமல் சத்தம் .

சத்தம் வந்த திசையை நோக்கி சென்றவள் அங்கே ஒரு நடக்க முடியாத வயதான கிழவன் உட்கார்ந்து இருப்பதை பார்த்தாள் .

“ அய்யா ...நான் இந்த பக்கமா என்னோட நண்பன தேடி வந்தேன் , வர நேரத்துல மழை வந்துடுச்சு... நீங்க அனுமதி கொடுத்திங்கன்னா, நான் இங்க கொஞ்ச நேரம் தங்கிட்டு மழை நின்ற பிறகு கிளம்பி கொள்கிறேன் “

கிழவன் இருமிக்கொண்டே ஒரு அறையை கைகாட்டினான் .

அந்த அறையில் சென்று பார்த்த பொழுது ஒரு சுமாரான மெத்தைவிரிப்பும்,மழைத்துளி ஒழுகும் மேற் கூரையும் இருந்தது . ஆபத்துக்கு பாவமில்லை என அதில் படுத்து இளைப்பாறினாள் எமி . மழை தன் முழு பலத்தை காட்ட , அங்கே மின்னலும் அதனுடன் போட்டி போட்டு கொண்டிருந்தது . மெத்தையில் கண்மூடி படுத்திருந்தவள் புரண்டு படுக்கும் பொழுது மழை நீர் சொட்டவே எரிச்சலாகி கண்ணை திறந்தவளுக்கு ஒரு நிமிடம் உயிர் உறைந்து விட்டது .

சரியாக அவள் நெற்றிக்கு நேராக ஒரு கோடரி, ரத்தத்துடன் அவளை பதம் பார்க்க தொங்கி கொண்டிருந்தது .

எமி பதறியடித்து கொண்டு எழுத்து வேகமாக அந்த கிழவனை விசாரிக்க 
எண்ணி  வெளியே வந்த போது அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் பார்க்கும்போது அவன் இல்லை . சிறிது பயந்தவள் , இனிமேலும் இங்கிருந்தால் ஆபத்து என கருதி அந்த மழையில் வேகமாக பயணிக்க ஆரம்பித்தாள்.

பயணிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் மழை நின்றுவிடவே , பெருமூச்சுவிட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். அப்போது தனக்கு பின்னால் தூரத்தில் எதோ கும்பலாக அதிரும் சத்தம் கேட்டது. கைகள் உதறி கொண்டே  திரும்பி பார்கையில் அங்கே கூட்டமாக சில பேர் தன் தலைகளை மறைத்து கொண்டு கோடரியை கையில் ஏந்தி கொண்டு எமியை நோக்கி வந்ததனர் .

அமானுஷ்யமும் சூன்யமும் நிரம்பிய அந்த இடத்தில் தான் எவ்வாறு தப்பிக்க போகிறோம் என்ற உணர்வு எமியை மிகவும் பாதித்தது . தன்னால் முடிந்த வேகத்தில் ஓட ஆரம்பித்தவளுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி . எல்லா திசையிலிருந்தும் அதே போன்று தன்னை கொலை செய்ய கோடரியுடன் அந்த உருவங்கள் துரத்தி வரவே அவள் அந்த பொறியில் மாட்டிகொண்டாள்.  அந்த கூட்டம் எமியை நெருங்க நெருங்க அவள் மெதுவாய் பின்னால் சென்றாள் . ஒரு கட்டத்தில் பின்னால் செல்ல தன் கால்களை  எடுத்துவைக்க முயற்சிக்க அது ஒரு மலையின் உச்சி என்பதை அறிந்து அதிர்ந்தாள் . அவர்கள் அவளை நெருங்கி விட்டனர் .

“ என்ன செய்ய போகிறாய் எமி ...?? ”

“ குதித்து விடலாம் “

“ நீ இறந்து விடுவாய் ...”

“ இல்லை... எனக்கு நம்பிக்கை இருக்கிறது “

“ ம்ம்ம்ம்....  “ 

இவ்வாறு தன் மனதோடு போராடி, அந்த மலையிலிருந்து கண்மூடி எகிறி குதித்தவள் ஒரு ஆள் அரவமற்ற நான்காய் பிரியும் ரோட்டில் விழுந்து கிடந்தாள்.

“ எந்த வழியை தேர்ந்தெடுப்பது...?? ” என் நினைத்து கொண்டிருந்தவளுக்கு அங்கே நான்கு பாதைகளிலும் நான்கு பெரிய கதவுகள் தோன்றின . அதில் ஒவ்வொரு கதவிலும் கிங் குயின் ஜாக் ஜோக்கர்  என தனியாக பொறிக்க பட்டிருந்தது .

எமிக்கு ஒரு நிமிடம் புரிவில்லை என்றாலும் , அந்த தகடில் உள்ள கிங் ஆப் ஹார்டின் ஞாபகம் வரவவே , சந்தோஷமாய் அந்த முதல் கிங் கதவின் அருகே நின்றவுடன் அது திறந்து கொண்டது . பொறுமையாக நடக்க ஆரம்பித்தாள் எமி . ஆனால் அந்த கார்டின் பின்னல் இயேசு கிறிஸ்து படம் இருப்பது என்னவகையான குறியீடு என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை .

முன்னேறி சென்றவளுக்கு மிகவும் பசியும் தாகமும் எடுக்கவே எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா என தேடினாள். சுற்றி முற்றி பார்த்தவளுக்கு தூரத்தில் ஒரு குட்டை தென்பட்டது . அதில் தன் தாகத்தை தீர்த்து கொண்டு திரும்பி செல்ல முயற்ச்சித்தவள் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி திரும்பி பார்த்தாள்.

அங்கே ஒரு இடிந்து போன தேவாலயம் கண்ணில் பட்டது .  அப்போ, அந்த இயேசு கிறிஸ்துவின் படம்  தேவாலயத்தை உணர்த்தியது என யூகித்து கொண்டாள்.மிஸ்டர் எக்ஸின் முதல் க்ளுவை கண்டுபிடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்த எமி, அந்த இடிந்துப்போன தேவாலயத்தை நெருங்கியபோது அவளின் சிரிப்பும் சந்தோஷங்களும் நொறுங்கின !!!!!   

- தொடரும்

மேலும் அத்தியாயங்களை படிக்க சுட்டியை சொடுக்கவும் 

    

Comments

Popular posts from this blog

பாடல்கள் பலவிதம் - Songs i love

" பாடல்கள் பலவிதம் “  இசை என்பது உலகின் மொழி . அத்தகைய மொழியில் குறிப்பாக தமிழ் பாடல்கள்  நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. அவை யாவும் மனநிலை மாற்றும் போதை வஸ்துக்கள் . நாம் பெரும்பாலும் ரசித்த , சிலர் ரசிக்க தவறிய பாடல்களின் உணர்வுகளை வெளியே எடுத்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.   பாடல்கள் பலவிதம் #1 Song link - https://www.youtube.com/watch?v=v8eUuzElvX4 “ தென்றல் வந்து தீண்டும் போது “ - அவதாரம் முதல் பாடல் இசைஞானியின் பாடல் . எத்தனையோ பாடல்கள் அவர் கடந்து வந்திருந்தாலும் இந்த பாடல் ஒரு பிளாட்டினம் கிரீடம் . இந்த பாடலை சிலாகிக்க, வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் வறட்சி ஆகி இதயம் அந்த பாடலில் லயித்துவிட்டது .  அது தான் “ தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ, மனசுல “ பாடல்.   கண் பார்வை அற்ற நாயகி ,தனக்காக நாயகனும் கண்ணைக்கட்டி கொண்டு கஷ்டப்படுவதை அறிந்து , அவளுக்கு கண்ணாக இருந்து தன்னை வழிநடத்தும்படி கேட்க , அந்த ஒரு பரிவின், ஆசையின் புள்ளியில் தொடங்குகிறது பாடல். ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையின் சாரம்சத்தை கொண்டு  அன்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் -1

அன்று மாலை எமிக்கு எதுவுமே சரியாய் நடப்பதாய் தெரியவில்லை.சிறிது நேரம் யோசித்தவள் தலை வலிக்கவே  யோசிப்பதை நிறுத்திவிட்டு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு கிளம்பி சென்று கொண்டிருந்தாள் . “ மேடம் இந்த புக்கு ரொம்ப நல்லா இருக்கும் ... வாங்கி படிங்க எல்லாருடைய விருப்பத்துக்கு ஏத்தா மாதிரியும் இங்க கம்மி விலையில் புத்தகம் கிடைக்கும் “ என எமியை மட்டுமே ஒருவாறு உற்று நோக்கி கொண்டே தன் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தான் அந்த வியாபாரி கிழவன். அந்த கிழவனை கடந்து சென்றவள் , ஒரு நிமிடம் நின்று அவனை திரும்பி பார்த்தாள். அவன் கண்கள் அவளை " வா வா "  என்றது . அவளும் அவனிடம் வசியப்பட்டது போல அவனிடம் ஈர்க்கப்பட்டு அவனருகே சென்றாள் . வானிலை கருப்பு மேகங்களாய் மாற , மற்ற பறவைகள் எல்லா இடத்திலும் பறந்து செல்லும் போது அங்கே வித்தியாசமாய் கூட்டமான அண்டங்காக்கைகள் வட்டமிட்டு அமர்ந்து கொண்டு எமியை உற்று நோக்கி சூழ்நிலையை மோசமாக போவதை உணர்த்தியது. “ வா எமி ...” “ என் பெயர் அவனுக்கெப்படி தெரியும் ?? ” என அதிர்ந்தாள் . “ எனக்கு எல்லாம் தெரியும் எமி ...! “ என சிரித்தான் அந்த நரைத்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் - 4

மெல்ல மார்க்கை நோக்கி நடந்து வந்த லீமர் வான்ட் , தன் சாத்தான் படைகளை கை காட்டி சைகையில் நிறுத்தினான் . இருவருக்கும் பயத்தில் இதய துடிப்பு உசேன் போல்டுடன் போட்டி போட்டு கொண்டு ஓடியது . லீமர் வான்ட் மெதுவாக தன் கைகளை மார்க்கின் கழுத்தின் மீது வைத்து அவனை தூக்க ஆரம்பித்த போது  மார்க் அலறினான் !! “ என்ன விட்டுடு ....” லீமர் . “ ஆமா ... அவன விடு “ என கதறினாள் எமி. “ ஹாஹஹாஹாஹா..... “ என லீமர் சிரித்த போது அங்கே  அந்த மின்னல் வெளிச்சத்தில் அவன் கொடூரமாய் தெரிந்தான் . “ விட்டுடறேன்..... ஆனா நீ எனக்கு வேணும் எமி ...” என மீண்டும் வில்லத்தனமாக சிரித்தான் லீமர். அவனின் இறுக்கமான பிடியிலும் அந்த மழையிலும் மார்க்கால் வாயை திறக்க முடியவில்லை . “ சரி ... அவன விட்டுடு ... என்ன எடுத்துக்கோ ...” “ தட்ஸ் மை கேர்ள் ....கம் டு பாப்பா “ என மறு கையால் எமியை கழுத்தோடு தொட்டு தூக்கினான் லீமர் . அப்படி தூக்கும் பொழுது லீமரின் நகம் பட்டு எமிக்கு லேசாக கீறி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது .  இருவரையும் ஒரே மூச்சில் தின்றுவிட தன் நீண்ட நாக்கை தொங்க போட்டு எமியை நெருங்க ...