அந்த பாழடைந்த தேவாலயத்தின் உள்ளே மணி அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எமிக்கு
சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை . உள்ளே யாரிடமாவது உதவி கேட்டு இதில் இருந்து
தப்பித்து கொள்ளலாம் என எண்ணி உள்ளே சென்ற போது, அங்கே யாரும் இருப்பதாக
தெரியவில்லை .
எமி மெல்ல பதட்டம் அடைய தொடங்கினாள். அந்த தேவாலயம் மிகவும் அழுக்கு
படிந்தும் உடைந்தும் காணப்பட்டது. எதை நோக்கி போகிறோம் ?? போகும் பாதை சரி தானா ..
இதிலிருந்து தப்பிக்க முடியுமா ...?? என்ற பல்வேறு எண்ண வலைக்குள் அவள் சிக்கி
தவித்து கொண்டிருந்தபோது அவள் பெயர் ஒரு மென்மையான குரலால் அழைக்கப்பட்டது !
அது அந்த தேவாலயத்தின் வயது
முதிர்ந்த பாதர் .
எமி வேகமாக ஓடி போய் அவரை கட்டி
பிடித்து அழ தொடங்கினாள் . பின்பு ஓவ்வொரு விஷயமாக அவரிடம் கூற தொடங்கியபொழுது
பாதர் அவளுக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார் .
“ பாதர் ... இந்த மாயைல இருந்து நான் விடுபடனும் பாதர் ... நீங்க தான்
எப்படியாவது என்னை காப்பாத்தனும். இதுல என் நண்பனும் மாட்டிக்கிட்டு இருக்கான்
பாதர் “ .
“ கவலைப்படாதமா... எல்லாம் அந்த கர்த்தர் பார்த்துகொள்வார் “.
“ சரிங்க பாதர் . அந்த முதல் க்ளுபடி நான் இங்க வந்துட்டேன் , ஆனா
மார்க் இன்னும் வரலயே பாதர் “.
“ எல்லாத்துக்கும் நேரம்னு ஒன்னு இருக்கு எமி “,...... “ என் பின்னாடி
வா...” என்று கூறி அந்த தேவாலயத்தின் ஒரு அறைக்கு எமியை அழைத்து சென்றார் .
அந்த அறையில் ஒரு வில் மற்றும் அம்புகளை கவனித்த எமியை பார்த்த பாதர் ..
“ இப்போ உனக்கு புரிஞ்சி இருக்குமே “ என சிரித்தார்.
அப்பொழுது அந்த தொங்கு பாலத்தில் என்னை காப்பாற்றியது பாதர் தான்
போலும் என எண்ணி பெருமூச்சு விட்டு கொண்டாள் எமி . ஆனாலும்
இது முடியவில்லை , கடக்க
வேண்டிய விஷயங்களை நிறைய இருக்கிறது என அவள் யோசித்து கொண்டிருக்கும் போது ராக்க்ஷத அளவில் ஒரு திரைசீலை சுவற்றை மறைத்து
கொண்டிருப்பதை கவனித்தாள்.
அவள் மிகவும் களைப்பாய் இருப்பதை உணர்ந்த பாதர் அவளுக்கு அப்பமும் கண்ணாடி
கோப்பையில் பழரசமும் கொடுக்க , எமி குடித்தாள்.
“ எமி நாம கொஞ்ச நேரம் ஜபம் பண்ணுவோம் , நடுவில் நான் எது சொன்னாலும் நீ
வாய் திறக்க கூடாது . என்னை பின் தொடர்ந்து மட்டும் வா“
எமிக்கும் ஜெபம் செய்து கடவுளிடம் தன் குறைகளை கூறுவது தான் சரி என்று பட்டது . இருவரும் தேவாலயத்தின் உள்ளே
இருக்கும் இயேசு கிறிஸ்து சிலைக்கு முன்னால் மண்டியிட்டு ஜெபம் செய்ய ஆரம்பித்தனர்.
“ பரமபிதாவே .. இந்த குழந்தைக்கு உன்னோட பரிசுத்த ஆவியை அளியும், “
அப்படியே நான் செய்யவிருக்கும் பாவத்தையும் மன்னித்தருளும் ஆண்டவரே !! ” என பாதர்
முடிக்க அங்கே தேவாலயத்தில் இருந்த சுவற்றுகளில் ரத்தம் வழிந்து கொண்டும் அதில்
புதைக்கபட்டிருந்த காட்டேரிகள் வெளி வர தொடங்கின.
கண்மூடி ஜெபம் செய்து கொண்டிருந்தவளுக்கு வித்தியாசமான சத்தம் கேட்கவே கண்ணை திறந்தபொழுது
, அங்கே பாதருக்கு இரு கோரமான பற்கள் முளைத்து ரத்ததிற்காக ஏங்கிய காட்டேரியாய்
எமியை பார்த்து கொண்டிருந்தார் .
ஒரு நிமிடம் எமியின் உயிரின் ஓசை அடங்கிவிட்டது . பயத்தில் பேச்சே
வரவில்லை. பொறுமையாக அவரை பார்த்து பயந்து
கொண்டே பின்னால் நகர்ந்தாள். பாதரும் அவளை நோக்கி நகர்ந்தார்
“ ஹாஹஹா... பயப்படாத எமி ... நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன் .
எனக்கு தேவையானது எல்லாம் உன் ரத்தம் மட்டுமே. நான் உனக்கு வலிக்காத மாதிரி
கடிச்சி ரத்தத்த குடிக்கிறேன் “.
“ வா எமி வா ...“
“ இ..ல்ல .. இல்..ல ... நான்
வரமாட்டேன் ...” என மேலும் நடுங்கி கொண்டே பின்னால் சென்றாள்.
“ நீ என்னை நம்ப வில்லை என்றால்
, அந்த சுவற்றில் புதைக்க பட்டிருக்கும் மனித பிணங்களை கேள் ” !! “...ஹாஹஹா. !!
அவர்கள் சொல்வார்கள் !! “
“ அவ....ங்க...ளாம் யாரு....?? “ என திக்கினாள்.
“ அவங்களும் உன்னை மாதிரித்தான் இந்த உலகத்தில மாட்டிகிட்டாங்க ,
என்கிட்டே இருந்து தப்பிக்கணும் னு பாத்தாங்க .......... இப்பிடி ஆக்கிட்டாங்க !! “
என மீண்டும் ரத்த வெறியில் சிரித்தான் .
“ எனக்கு உன் கூட பேச நேரமில்லை ,வா சீக்கிரம் , எனக்கு பசி
அதிகமாகிடுச்சி !! “ என கர்ஜித்தான் பாதர் .
அவளை நெருங்கி தன் கட்டுக்குள் வைத்து அவள் கழுத்தை அந்த பாதர் கடிக்க
முற்படும் போது, இப்போது ஏதாவது அதிசயம் நடக்காதா என எமி எண்ணிய பொழுது அந்த
தேவாலயத்தின் மணி சத்தமாக அடித்தது .
“ யார் இதை அடித்திருப்பார்கள்
?? ” என கோபத்தில் கர்ஜித்துக்கொண்டு இருந்த பாதர் , அந்த மாடியிலிருந்து தன்னை
யாரோ நோக்குவதை பார்த்து ஆத்திரம்
அடைந்தான் . எமியும் அந்த திசை நோக்கி பார்த்த பொழுது, அவள் மிகவும் பரவசமடைந்தாள்.
“ அது ... மார்க் !! “ என்ன ஒரு சரியான தருணம் அது . இது போதும் இனி
யார் வந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என எமிக்குள் நம்பிக்கை ஆறாக ஓடி
கொண்டிருந்தது . கோபத்தில் மார்க்கை தாக்க பாதர் பறந்து அவனை நோக்கி வரும் பொழுது, சரியாக அந்த ராக்க்ஷத திரைசீலையை
நோக்கி மார்க் அம்பு எய்தினான். அப்போது
அது இரண்டாக கிழிந்து மறைக்கப்பட்டிருந்த பெரிய மேரி பட கண்ணாடி ஓவியத்தில்
சந்திரவொளி பட்டு பாதரும் அந்த சுவற்றில்
இருந்து வெளிவந்த மத்த ரத்த காட்டேரிகளும் பஸ்பமாயின .
இந்த விஷயம் எல்லாம் ஒரு நிமிடத்தில் நடந்து விடவே அந்த சந்தோஷத்தை
எமியால் வர்ணிக்க முடியவில்லை . தான் பிழைத்து
விட்டோம் என்ற விஷயம் மட்டுமல்லாமல் மார்க்கும் திரும்பி விட்டான் என்பது
அதில் அடங்கும் .
பாதர் பஸ்பமனவுடனே ... வேகமாக ஓடி சென்று மார்க்கை கட்டிபிடித்து அவன்
நெற்றியில் ஒரு முத்தமிட்டாள்.
“ ஹீரோ மாதிரி வந்து என்னை கப்பாற்றுன மார்க் ... “ என வெட்கத்தில் சிவந்தாள்.
“ யார் சொன்னா ??.... நான் ஹீரோனு..... ??
“ நான் வில்லன்... உத்தம வில்லன் !!!“ என மார்க் சிரித்த போது அதன்
அர்த்தம் தெரியாமல் எமி வாயடைத்து போனாள் !!
- தொடரும்
அடுத்த அத்தியாயத்திற்கு இங்கே சொடுக்கவும்
Comments
Post a Comment