Skip to main content

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் -1



அன்று மாலை எமிக்கு எதுவுமே சரியாய் நடப்பதாய் தெரியவில்லை.சிறிது நேரம் யோசித்தவள் தலை வலிக்கவே  யோசிப்பதை நிறுத்திவிட்டு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு கிளம்பி சென்று கொண்டிருந்தாள் .

“ மேடம் இந்த புக்கு ரொம்ப நல்லா இருக்கும் ... வாங்கி படிங்க எல்லாருடைய விருப்பத்துக்கு ஏத்தா மாதிரியும் இங்க கம்மி விலையில் புத்தகம் கிடைக்கும் “ என எமியை மட்டுமே ஒருவாறு உற்று நோக்கி கொண்டே தன் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தான் அந்த வியாபாரி கிழவன்.

அந்த கிழவனை கடந்து சென்றவள் , ஒரு நிமிடம் நின்று அவனை திரும்பி பார்த்தாள். அவன் கண்கள் அவளை " வா வா " என்றது . அவளும் அவனிடம் வசியப்பட்டது போல அவனிடம் ஈர்க்கப்பட்டு அவனருகே சென்றாள் . வானிலை கருப்பு மேகங்களாய் மாற, மற்ற பறவைகள் எல்லா இடத்திலும் பறந்து செல்லும் போது அங்கே வித்தியாசமாய் கூட்டமான அண்டங்காக்கைகள் வட்டமிட்டு அமர்ந்து கொண்டு எமியை உற்று நோக்கி சூழ்நிலையை மோசமாக போவதை உணர்த்தியது.

“ வா எமி ...”

“ என் பெயர் அவனுக்கெப்படி தெரியும் ?? ” என அதிர்ந்தாள் .

“ எனக்கு எல்லாம் தெரியும் எமி ...! “ என சிரித்தான் அந்த நரைத்து போன தாடியையும், உடைந்து போன கரை படிந்த பற்களை கொண்ட கிழவன்.

 “அவள் உறைந்து போனாள்.... பேசவில்லை”..... அவனே ஆரம்பித்தான்.
“உனக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியும் எமி ..”

“ ஹே ... அவனுக்கு எப்படி எனக்கு என்ன வேணும்னு தெரியும் ... அதுவும் இல்லாமல் நான் நினைப்பதை அப்படியே சொல்கிறான் “ என நினைத்தாள்.

“ மீண்டும் அவன் சிரித்தான் “... இப்போது காக்கைகள் அவன் அருகே வட்டமிட்டு உட்கார்ந்து கொண்டன .

“ இன்னிக்கு உனக்கு பிறந்தநாள்  சரியா ?? “

“ அ...அ... ஆமா ..”...உங்களுக்கு எப்படி ..??

“ எனக்கு தெரியும் ... நீ சீக்கிரமா வீட்டுக்கு போ ...இங்க ரொம்ப நேரம் இருக்காத ...”

“ச...ச...சரி.”

“ இந்தா ... உன் பிறந்த நாளுக்கு என்னோட பரிசு ...” என ஒரு சின்ன பெட்டியை கொடுத்தான் .

“ வேணா ... நான் கிளம்புறேன் ...” என பயந்தபடி அவசரமாக திரும்பி சென்றவள் , கிழவனின் கர்ஜிக்கும் தொனியில் அவள் பெயர் கேட்கவே அவள் அதிர்ந்து திரும்பினாள்.

மீண்டும் மெல்ல சிரித்தான் . மீண்டும் அந்த கரை படிந்த பற்கள் நன்றாக தெரிந்தது . பயத்தில் வீட்டிற்கு வேகமாக ஓடினாள். வீட்டுக்கு வந்தவள்  பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேக்கை தூக்கி பெட்டில் போட்டு விட்டு ஹாலுக்கு  வந்தாள்.  

“அம்மா.... அம்மா ... காபி போட்டு குடும்மா ... தலை பயங்கரமா வலிக்குது“.

“ம்ம்ம்ம் இந்தா ... சரி ... நானும் அப்பாவும் கடைக்கு போறோம் .. போயிட்டு நைட்டு லேட்டா தான் வருவோம்.  நைட்டு  பூரா டிவிய கட்டிக்கிட்டு அழுவாம ஒழுங்கா படி .”

வாயில் காபியை வைத்துகொண்டே சரி என்பது போல் தலை ஆட்டினாள். எமியின் அப்பாவும் அம்மாவும் வெளியே சென்றுவிட்டதும் தன் ரூமிற்கு  காபியை குடித்தவாரே சென்றாள் எமி.

ஜன்னலை  திறந்தபடி வெளியே தூறல் போடுவதை ரசித்து கொண்டே காபியை குடித்து கொண்டு இருந்தாள். அன்று மின்னலும் மேகமும் வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமான தன் முகத்தை காட்டி கொண்டிருந்த வேளையில் திடீரென்று எங்கிருந்தோ பறந்து வந்த அதே அண்டகாக்கை  ஜன்னலின் வெளிப்புறம் அமர்ந்து கொண்டு கண்ணாடி வழியாய் எமியை நோக்கியதும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் காபி கப்பை கிழ விட ,அது விழுந்து உடைந்து விட்டது .

வேகமாக ஜன்னலை மூடியவள் தன்னை பெருமூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். தன் கவனத்தை வேறு பக்கம் திருப்ப படிக்க முடிவு செய்து பேக்கை திறந்து புத்தகத்தை எடுத்தாள். ஆனால் உள்ளே வேறு எதோ தட்டுப்படுவதை போலவும் கனமாகவும் இருப்பதை உணர்ந்து பேக்கை உள்ளே நன்றாக துருவி பார்த்தவளுக்கு அதிர்ச்சி .

“அது... அந்த ... அந்த கிழவன் அளித்த பரிசு ... !!”

அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்துகொண்டு என்னசெய்வதென்று அறியாமல் அந்த பரிசை உற்று நோக்கி கொண்டிருந்தவளை திடீரென்று மணி அடித்த கடிகாரத்தின் சத்தம் மேலும் பயமூட்டியது .
மெதுவாக அந்த பரிசை திறந்து பார்த்தாள். ஒரு கனமான சிகப்பு அட்டை கொண்ட ஒரு புத்தகம். ப்பூ... இதற்க்கா இவ்வளவு பயந்தோம் என நினைத்து கொண்டு புத்தகத்தை திறந்தாள் .

“ என் குழந்தைக்கு இந்த பரிசு !! “ என அந்த அட்டையில் எழுதியிருந்தது.
முதல் பக்கத்தை பார்த்தாள் .

“ தயவு செய்து இந்த புத்தகத்தை படிக்காதிர்கள்...” என எழுதி இருந்தது . அவள் பயந்து கொண்டே மற்ற பக்ககங்களை புரட்டி பார்த்த போது அனைத்துமே வெற்று தாள்களாக மட்டுமே இருந்தது .

பயந்து புத்தகத்தை மூடி விட்டு மீண்டும் பெருமூச்சு விட்டாள். வீட்டின் விளக்குகள் விட்டு விட்டு எரிய தொடங்கின.

அவள் மேலும் பதட்டமாகி கீழ செல்ல எத்தனிக்கையில் புத்தகம் தவறி கிழ விழுந்து முதல் பக்கம் காற்றில் ஆடி திறந்து கொண்டிருந்தது .
அதை குனிந்து எடுக்க முற்பட்டவள் அந்த  வாசகத்தை படித்ததும் அதிர்சியானாள்

“ புத்தகத்தை வாசித்ததற்கு நன்றி .”

“ இந்த வாசகம் முதல் பக்கத்தில் இல்லையே ?!! “ ...என நினைத்து கொண்டே அந்த புத்தகத்தை எடுத்து முதல் பக்கத்தை திருப்பும் போது அங்கே பவர் கட் ஆகி அந்த அறையே இருட்டாகி இருந்தை பார்த்து கத்தியது வீட்டின் கூரையின் மேல் பறந்து கொண்டு இருந்த அந்த அண்டங்காக்கை.

- தொடரும்

அடுத்த அத்தியாத்திற்கு இங்கே சொடுக்கவும்
    

Comments

Popular posts from this blog

பாடல்கள் பலவிதம் - Songs i love

" பாடல்கள் பலவிதம் “  இசை என்பது உலகின் மொழி . அத்தகைய மொழியில் குறிப்பாக தமிழ் பாடல்கள்  நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. அவை யாவும் மனநிலை மாற்றும் போதை வஸ்துக்கள் . நாம் பெரும்பாலும் ரசித்த , சிலர் ரசிக்க தவறிய பாடல்களின் உணர்வுகளை வெளியே எடுத்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.   பாடல்கள் பலவிதம் #1 Song link - https://www.youtube.com/watch?v=v8eUuzElvX4 “ தென்றல் வந்து தீண்டும் போது “ - அவதாரம் முதல் பாடல் இசைஞானியின் பாடல் . எத்தனையோ பாடல்கள் அவர் கடந்து வந்திருந்தாலும் இந்த பாடல் ஒரு பிளாட்டினம் கிரீடம் . இந்த பாடலை சிலாகிக்க, வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் வறட்சி ஆகி இதயம் அந்த பாடலில் லயித்துவிட்டது .  அது தான் “ தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ, மனசுல “ பாடல்.   கண் பார்வை அற்ற நாயகி ,தனக்காக நாயகனும் கண்ணைக்கட்டி கொண்டு கஷ்டப்படுவதை அறிந்து , அவளுக்கு கண்ணாக இருந்து தன்னை வழிநடத்தும்படி கேட்க , அந்த ஒரு பரிவின், ஆசையின் புள்ளியில் தொடங்குகிறது பாடல். ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையின் சாரம்சத்தை கொண்டு  அன்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் - 4

மெல்ல மார்க்கை நோக்கி நடந்து வந்த லீமர் வான்ட் , தன் சாத்தான் படைகளை கை காட்டி சைகையில் நிறுத்தினான் . இருவருக்கும் பயத்தில் இதய துடிப்பு உசேன் போல்டுடன் போட்டி போட்டு கொண்டு ஓடியது . லீமர் வான்ட் மெதுவாக தன் கைகளை மார்க்கின் கழுத்தின் மீது வைத்து அவனை தூக்க ஆரம்பித்த போது  மார்க் அலறினான் !! “ என்ன விட்டுடு ....” லீமர் . “ ஆமா ... அவன விடு “ என கதறினாள் எமி. “ ஹாஹஹாஹாஹா..... “ என லீமர் சிரித்த போது அங்கே  அந்த மின்னல் வெளிச்சத்தில் அவன் கொடூரமாய் தெரிந்தான் . “ விட்டுடறேன்..... ஆனா நீ எனக்கு வேணும் எமி ...” என மீண்டும் வில்லத்தனமாக சிரித்தான் லீமர். அவனின் இறுக்கமான பிடியிலும் அந்த மழையிலும் மார்க்கால் வாயை திறக்க முடியவில்லை . “ சரி ... அவன விட்டுடு ... என்ன எடுத்துக்கோ ...” “ தட்ஸ் மை கேர்ள் ....கம் டு பாப்பா “ என மறு கையால் எமியை கழுத்தோடு தொட்டு தூக்கினான் லீமர் . அப்படி தூக்கும் பொழுது லீமரின் நகம் பட்டு எமிக்கு லேசாக கீறி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது .  இருவரையும் ஒரே மூச்சில் தின்றுவிட தன் நீண்ட நாக்கை தொங்க போட்டு எமியை நெருங்க ...