மார்க் தன்னை ஏமாற்ற விளையாட்டாய் தான் சொல்கிறான் என எமி
நினைத்தாலும் அதன் உள் அர்த்தம் உண்மையாகவே அவன் சொல்வது போல் தான் இருக்குமோ என அச்சமடைந்தாள்.
“ உன்னோட நல்ல நேரம் பாரு எமி ... உன்னோட நண்பன் கையாலயே சாக போற .. “
என அழகாக புன்னகைத்தான் .
“ ச்சீ... அந்த வார்த்தை சொல்லவே உனக்கு அருகதை கிடையாது “ !!
“ ஹாஹாஹா... வெல்... சாகறதுக்கு முன்னாடி நீ நிறைய விஷயம்
தெரிஞ்சக்ககனும் னு நான் ஆசைப்படுறேன். அதுல முதல் விஷயம் , நான் மிஸ்டர் எக்ஸால
அனுப்பப்பட்டவன் . என்னோட வேலையே இங்க வர மனிதர்களை திசை திருப்புறதும் அப்புறம் ஒரு
வேளை அவங்க மிஸ்டர் எக்ஸ்க்கு எதிரா உருவானா.......... அவங்கள அழிக்கறதும் தான். “
“ பை த பை ... உன்னோட
ரெண்டாவது க்ளுவும் நான் தான் செல்லம் “.
எமி அடுத்து அவன் என்ன ரகசியம் சொல்ல போகிறான் என்பதை எதிர்பார்த்து
கொண்டிருந்தாள்.
“ அதுவும் இல்லாம நீ என் கையால மட்டும் தான சாகனும் னு மனசுக்குள்ள எதோ
ஒரு ஆசை ... அதான் உன்னை என்னால முடிஞ்ச வரை கப்பாற்றிட்டு இருந்தேன். ஆனா இப்போ ......அது
நடக்க போகுது “.
ஒரு நிமிடம் எமிக்கு என்னசெய்வதென்று தெரியாவிட்டாலும் மார்க்குடன்
கடந்த நினைவுகள் அவள் மனதில் ஓடி கொண்டிருந்தது . இனிமேலும் இது வேலைக்கு ஆகாது .
இங்கே போராடினால் மட்டுமே உயிர் வாழ முடியும் . பார்த்து விடலாம் அவனா நானா என்று என்று பல்வேறு சிந்தனைகள் எமியின் மனதிற்குள்
ஓடி கொண்டிருந்தது .
“ என்ன யோசிக்கிற ...ரெடியா....??
“ என்றான் மார்க் வெறித்தனத்துடன்.
அப்பொழுது தான் எமிக்கு தான் ஒரு கராத்தே வீராங்கனை என்பது நினைவுக்கு
வந்தது . இது வரை அதை காட்ட சந்தர்ப்பம் இல்லையென்பதாலும் , தன்னை காப்பாற்ற மார்க் இருப்பதாலும், மேலும் அந்த உலகத்தில் இருந்து தப்பிப்பதே அவள் குறிக்கோளாய் இருந்ததாலும் எமிக்கு தன் கலையை காட்ட வேண்டிய நிலை இல்லாமல் போனது.
இப்போது மார்க் தனக்கு எதிரியாகிவிட்டான். அவனை தாண்டினால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும் என்பதால் அவனை தாக்க தயாராய் இருந்தாள்.
ஓடி சென்று கோபமாய் மார்க்கை தாக்க கால் தூக்கி அவன் கழுத்தில் அடிக்க
நெருங்க பொழுது அதை அழகாக தடுத்து வேகமாக எமியின் வயிற்றில் குத்த, ஒரு நிமிடம்
நிலை குலைந்து பின்னால் சென்றாள்.
“ நைஸ் மூவ்...” என கை கட்டி சிரித்தான் மார்க்.
சண்டை வலுக்குவே தன்னால் இயன்ற வரை போராடினாள் எமி. சண்டை வெகு நேரமாக சென்று கொண்டிருந்தாலும்
மார்க்கின் கையே ஓங்கி இருந்தது .ஒரு கட்டத்தில் எமி தன் எல்லா சக்தியையும்
மனதளவில் இழந்தாள். தன்னை ஏமாற்றிய மார்க்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என
நினைத்தது வீணாக போய் விடுமோ என பயந்தாள்.
“என்ன எமி ... முடியலையா .. ??. வாழ்க்கைல முக்காவாசி தடவை எலிக்கும்
பூனைக்கும் நடக்கற சண்டைல எலி தான் ஜெயிக்கும். ஏன் தெரியுமா ...?? பூனை தன்
தேவைக்காக ஓடுது , ஆனா எலி உயிருக்காக ஓடுது . நீ ஒரு சின்ன எலி எமி .... ஆனா இப்போ
ஜெயிக்க போறது இந்த பூனை தான் .என சொல்லி கொண்டே ஏமியிடம் பாய்ந்து எட்டி உதைத்தான்
.
அவள் அந்த ராக்க்ஷத கண்ணாடியில் விழுந்து உடைந்து
எமியின் உடம்பெல்லாம் காயமாக மாறியது இதற்கு மேலும் எமியால் சண்டை போட முடியவில்லை..
“ மார்க் .. நான் சாக போறேன் தெரியும் ... நீ ஜெயிச்சிட்ட... என்னால
இதுக்கும் மேலயும் முடியல... என்னை விட்டுடு என கதறினாள் எமி.
“ அப்படி வா வழிக்கு... “ என மீண்டும் சிரித்தான் மார்க்
“ என்னோட கடைசி ஆசையா உன்னை கட்டி பிடித்து உன் மடியில இறக்கணும் “ மார்க்
என அழுதாள்.
“ ம்ம்ம்ம்.... சரி ... பழகன தோஷத்துக்காக ஒத்துக்குறேன் “ என அவளை
பார்த்து ஏளனமாக சிரித்தான் .
“ ரொம்ப நன்றி மார்க் “ என நடக்க முடியாமல் உடம்பெல்லாம் காயமாய் அவனை
அழுது கொண்டே கட்டி பிடித்தாள் எமி .
“ சாக போற உன்னை பார்த்தா பாவமா இருக்கு எமி . என்னோட வேலை இப்போ முடிஞ்சிடுச்சி . கடைசியா
ஒரு விஷயம் ,உனக்கு மிஸ்டர் எக்ஸோட
உண்மையான பேர் தெரியுமா ...??
“ த்..த்..தெரி..யா..து “
எனத்தான் மீதமிருந்த சக்தியை பயன் படுத்தி பேசினாள்.
“ ஜானி “
ஒரு நிமிடம் அதிர்ச்சியின் அர்த்தத்தை அவள் உணர்ந்தாலும் , தான் விழுந்த போது போது உடம்பில் குத்திய கண்ணாடி
துண்டை எடுத்து மார்க்கின் வயிற்றிலயே குத்தினாள். பலத்தால் சாதிக்க முடியாததை மதியால்
வெல்லலாம் என மார்க்கிடம் காட்டினாள்.
“ உன்னோட ஆணவத்துக்கும்... நம்பிக்கை துரோகத்துக்கும் இது தாண்டா என்
பதில் “ என திராணியை முழுவதும் திரட்டி அவனை வசவி வேகமாக மூன்று நான்கு முறை
குத்தினாள்.
அதை சற்றும் எதிர்பாராத மார்க் நிலை குலைந்தான். எமியை குறைவாக
மதிப்பிட்டது தவறு என அவன் உணர்ந்தாலும் அவன் வயிற்றிலிருந்து ரத்தம் அதிகமாக
வெளியேறி விழுந்து இறந்தான்.
அந்த இடமே எல்லாம் உடைக்கப்பட்டு , களேபரமாய் இருக்க ,அவளும் இருந்த
எல்லா சக்தியையும் பயன்படுத்தியதால் மயக்கமடைந்து அந்த இடத்திலே வீழ்ந்து
கிடந்தாள் . ஆனால் மார்க் சொன்ன பெயர் மட்டும் அவள் உள்ளுணர்வில் ஒலித்து கொண்டது .
“ ஜானி.... “
“ ஜானி..... “
“ ஜானி..... “
தன்னுள் தானே பேசி கொண்டிருந்தாள் . எங்கேயோ கேட்ட பெயர் அது, என்றாலும் அந்த நொடியில் எமிக்கு அது பிடிபடவில்லை . மெல்ல வானிலை மாற தொடங்கியது .
மீண்டும் புயலுடன் மழை வர தொடங்கிய அந்த நேரத்தில், உடைந்த தேவாலயத்தின் உள்ளே மழை
ஒழுகி கொண்டு அது அவள் முகத்தில் படவே மயக்கத்தில் இருந்த அவள் மெல்ல எழுந்தாள்.
அவளுக்கு அந்த பெயர் மட்டுமே அவள் மனதில்
ஒலித்து கொண்டிருந்து.
“ ஜானி...”
ஜான்சன் – ஜானி .... அது .. அது .. என் அப்பா ..!! அவர் எழுதும்
தொடர்களில் அவர் புனைப்பெயர் தானே ஜானி !! அவர் இது போன்ற புத்தகத்தை எழுதியது இல்லையே ??.. என்னை ஏன் இதில் அழைத்து வர
வேண்டும் ?? இது எல்லாம் உண்மையா ..?? அல்லது கனவா ..?? அந்த நிமிடம் அவள் மூன்றாவது
க்ளுவை தேடிப்பிப்பிடிப்பதைவிட அந்த பெயரின் மீது தான் தனது முழு சிந்தனையும் செலுத்தி கொண்டிருந்தாள்.
உண்மையை கண்டுபிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, என எழுந்திருக்க
முடியாமல் எழுந்தாள் எமி .
மறுபக்கம், அங்கு நடக்கும் எல்லா விஷயமும் சந்தோஷமாக சிரித்து கொண்டே தன்
புத்தகத்தில் காட்சிகளாய் பார்த்து ரசித்து கொண்டிருந்தான் மிஸ்டர் எக்ஸ் ஆகிய
ஜானி !!!! .
Comments
Post a Comment