மெல்ல மார்க்கை நோக்கி நடந்து வந்த லீமர் வான்ட் , தன் சாத்தான்
படைகளை கை காட்டி சைகையில் நிறுத்தினான் . இருவருக்கும் பயத்தில் இதய துடிப்பு
உசேன் போல்டுடன் போட்டி போட்டு கொண்டு ஓடியது . லீமர் வான்ட் மெதுவாக தன் கைகளை
மார்க்கின் கழுத்தின் மீது வைத்து அவனை தூக்க ஆரம்பித்த போது மார்க் அலறினான் !!
“ என்ன விட்டுடு ....” லீமர் .
“ ஆமா ... அவன விடு “ என கதறினாள் எமி.
“ ஹாஹஹாஹாஹா..... “ என லீமர் சிரித்த போது அங்கே அந்த மின்னல் வெளிச்சத்தில் அவன் கொடூரமாய்
தெரிந்தான் .
“ விட்டுடறேன்..... ஆனா நீ எனக்கு வேணும் எமி ...” என மீண்டும்
வில்லத்தனமாக சிரித்தான் லீமர். அவனின் இறுக்கமான பிடியிலும் அந்த மழையிலும்
மார்க்கால் வாயை திறக்க முடியவில்லை .
“ சரி ... அவன விட்டுடு ... என்ன எடுத்துக்கோ ...”
“ தட்ஸ் மை கேர்ள் ....கம் டு பாப்பா “ என மறு கையால் எமியை கழுத்தோடு
தொட்டு தூக்கினான் லீமர் . அப்படி தூக்கும் பொழுது லீமரின் நகம் பட்டு எமிக்கு
லேசாக கீறி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது .
இருவரையும் ஒரே மூச்சில் தின்றுவிட தன்
நீண்ட நாக்கை தொங்க போட்டு எமியை நெருங்க பொழுது சரியாக அந்த சொட்டி கொண்டிருந்த ரத்தம் தரையில் விழுந்தது .
இப்போது அங்கே மழை நின்று அந்த இடம் ஒரு நொடி அமைதியாய் மாறுகிற அந்த தருணத்தில் லட்ச கணக்கில் சிறு சிறு ரத்தம்
உறிஞ்சும் தும்பிகள் லீமரையும் அவன் படைகளையும் நோக்கி வந்து கொண்டிருந்தன .
லீமர் ஒரு நிமிடம் உறைந்து போனான். அவனின் மொத்த உயிரும் தான்
எழுப்பிய படைகளில் மட்டுமே உள்ளது , தன்னிடம் இல்லை என்கிற ரகசியம் அந்த ரத்தம்
உறிஞ்சும் தும்பிகளுக்கு மட்டுமே தெரியும் .
இப்பொழுதுதான் அந்த ரத்தம் சொட்டுவதை
கவனித்தான் லீமர். தன் கோபத்தை கட்டுபடுத்த முடியாமல் அவர்களை நோக்கி கர்ஜித்து
விட்டு தன் படைகளை மீண்டும் எரிக்கே அனுப்ப முயற்சி செய்து ஏரியை நோக்கி ஓடினான் .
அங்க என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து சுதாரித்து கொள்ளவே எமிக்கும்
மார்க்கும் நேரம் பிடித்தது. ஆனால் அந்த ரத்தம் உறியும் தும்பிகள் அதுவரைக்கும் பொறுக்க
வில்லை. அந்த தும்பிகள் அவர்களை நெருங்கியவுடன் மார்க் தன் சட்டை பையில்
வைத்திருந்த ஒரு வகை பொடியை தூவினான் .
“ மார்க் ... என்னது இது ...?? “
“ இது ஒரு வகை பொடி... இதை தூவினா இந்த தும்பிகளுக்கு நுகரும் வாசனை
சில நிமிடம் செயலிழந்து போய்டும் ”.
“ சரி இந்த பொடி உனக்கு
எப்படி கிடைத்தது மார்க் ...?? “
“ இதே மாதிரி முன்னாடி இந்த தும்பிகள் என்னை தாக்க வந்தபோது ஒரு
செடிக்கு பின்னால் ஒளிந்து கொண்டேன். அந்த தும்பிகளும் என்னை கண்டு கொள்ளாமல்
சென்று விட்டன . அப்போ தான் எனக்கு இந்த விஷயம் புரிந்த்தது.. உடனே அந்த இலைகளை
பொடியாக்கி சேர்த்து வச்சிக்கிட்டேன். “
“ ம்ம்ம்ம்... அப்போ சீக்கிரம் இந்த இடத்த காலி செய்வோம் வா ...”
என்றாள் எமி.
இருவரும் வேகமாக பயணிக்க ஆரம்பித்த சில நொடிகளில் தன்னை யாரோ பின்
தொடர்வது போல் தோன்றியது .மீண்டும் நடக்க ஆரம்பித்து திடீரென்று திரும்பினான்
மார்க் . எமி அவனுக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள் .
ஒரு குள்ளமான உருவம் அவர்களை பின் தொடர்வதை உணர்ந்து கொண்டான் மார்க் .
எமியும் ஒருவாறு யூகித்து கொண்டிருந்தாள்.
“ யாரது ...?.. முன்னாடி வாங்க ... “ என கத்தினான்.
அவர்கள் முன்னால் இருந்த செடி கொடிகள் மட்டும் அசைந்தன.
“ யாரா இருந்தாலும் வெளிய வாங்க ...”
மெதுவாக அந்த உருவம் தன் ரூபத்தை காட்டியதும் எமி அதிர்ந்தாள். அது
அந்த புத்தகம் விற்ற கிழவன்.
“ மார்க் .. அவன் தான் என்கிட்டே அந்த புத்தகத்த கொடுக்க முயற்சிதான்“
என்றாள் எமி.
அவனை ஓடி சென்று இருவரும் பிடித்து அடிக்க தொடங்கியபோது அந்த கிழவன்
அழ தொடங்கினான். எமியும் மார்க்கும் ஒரு நிமிடம் அடிப்பதை நிறுத்தி விட்டு அவனை
கவனிக்க தொடங்கினர்.
“ நான் எல்லாம் உன் நல்லதுக்காக தான் பண்ணேன் ... ஆனா நீ என்ன
அடிக்கிற ...?? “ என்று விசும்பினான் .
“ என்ன சொல்ற ...?? “
“ எல்லாத்தையும் இங்க விரிவா சொல்ல முடியாது , ஏன்னா அந்த நிலவுகள்
இப்போ நேர்கோட்டில் இருக்கு . இது டிராகுலாக்கள் உலவும் நேரம் . நான் சொல்றத
கேளுங்க . நான் உங்களை கண்டிப்பா ஏமாற்ற மாட்டேன் .” என்றான் கிழவன்.
எமியும் மார்க்கும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .
இருவரும் வேறு வழியில்லாமல் அவனை பின் தொடர்ந்து சென்ற போது ஒரு
இடத்தில் அந்த கிழவன் நின்று, ஒரு நெடிய மரத்திடம் தடவி கொடுத்த போது அங்கே ஒரு
சின்ன குடில் ஒன்று கண்ணுக்கு தெரிந்தது .
“ உள்ளே போங்க ...”
இருவரும் ஆச்சிரியமாய் அந்த குடிசையை பார்த்தனர்.
“ இது மத்தவங்க கண்ணுக்கு தெரியாதா ?? “ என்றாள் எமி
“ தெரியாது !! “
“ அதனால தான் நான் இங்க தைரியமா இருக்கேன் ... நாம உள்ள போய் பேசலாமா ??
“
“ ம்ம்ம்....”
எல்லோரும் அந்த குடிசைக்குள்
செல்ல அந்த குடில் தானாகவே மறைந்து விட்டது .
“ எமி ... நீ இப்போ பெரிய பிரச்சனைல
மாட்டிகிட்டு இருக்க ... அதை உணர்த்த தான் நான் உன்ன தொடர்ந்து வந்துகிட்டு
இருந்தேன் “
அந்த கிழவன். அடுத்தடுத்து சொல்ல போகும் உண்மைகளை அவர்களுக்கு ஏற்கும்
மன தைரியம் இருக்குமா என தெரியவில்லை !!!
- தொடரும்.
Comments
Post a Comment