நெடிய உயரம் , கூர்மையான பார்வை , உடல் மொழிகளில் ஒரு வித்தியாசம் ,
ஒருவித புது வாசம். யார் இவன் ?? நம்மை என்ன செய்ய காத்திருக்கிறான் ?? நம்மை
காப்பற்றுவனா ?? அல்லது வேறு ஏதாவது....??? பயத்தில் யோசிப்பதை
கட்டுபடுத்திக்கொண்டாள்.
“ எமி ... மார்க் ... நான் சொல்வது சரிதானே “ என புன்னகைத்தது அந்த உருவம்.
“...............................”
“ வாங்க கிளம்புவோம் .....”
“ நாங்க ஏன் உன் கூட வரணும்...?? ”
“ ஹாஹாஹா..... ஏனென்றால் உங்களுக்கு வேறு வழி இல்லை . நீங்க என்னை
நம்பி தான் ஆகணும் . நான் உங்கள பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிட்டு போறேன் .”
“............................”
எமியும் மார்க்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“ ம்ம்ம்ம்.... யோசிங்க ..நல்லா யோசிங்க ... ஆனா, அந்த ரெட்டை
நிலாக்கள் ஒரே நேர்கோட்டில் வரும் போது இங்க டிராகுலாகளுக்கு நீங்க இரையாகி
இருப்பிங்க . ”
இவனை நம்புவதை தவிர வேறு வழி இல்லை என நினைத்தனர் எமியும் மார்க்கும் .
“ என்ன போலாமா ...?? “
“ ம்ம்ம்ம் சரி ... உங்க பேரு ...?? ”
“ லீமர் வான்ட் “
இருவரும் அவன் கட்டளைக்கு ஏற்ப அவன் பின்னால் நடக்க தொடங்கினர் .
எமி எதுவும் கேட்காமலே
அவளுக்கு, தான் அணிந்திருந்த ஸ்வட்டரை போர்த்தினான் மார்க் .
ஆச்சிரியப்பட்டு ஒரு வித புன்னகையோடு அவனை பார்த்தாள்.
அவன் லேசாக கண்ணடித்து சிரித்தான் .
கண்டதும் காதலில் நம்பிக்கை இல்லை எமிக்கு , ஆனால் இது ஈர்ப்பும்
கிடையாது காதலும் கிடையாது . ஒருவாரு தனக்கும்
மார்க்குக்கும் எதோ ஒரு இடைவெளி நீக்கி ஒன்று சேர்த்து இணைக்கப்பட்ட பிணைப்பு போல்
தோன்றியது . இது போல் ஓர் உணர்வு
யாரிடமும் அவளுக்கு முன்பு தோன்றியதில்லை .
கல்லூரியில் படிக்கும் பொழுது மார்க் முக அமைப்பை ஒத்த ஒருவனை விரும்பி
கொண்டிருந்தாள் அவள், இருந்தும் அதை அவனிடம் தெரிவிக்கவில்லை .
இப்போது மார்க்கிடமும்
அதே ஒரு வித உணர்வுக்கு அவள் உள்ளிழுக்கப்பட்டாலும் அந்த நிலையில் தன்னை பாதுகாக்க
ஒரு ஜீவன் இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டாள்.
மழை வர தொடங்கிய நேரம், மயான அமைதியை, அந்த இடத்தை மேலும் ஒரு வித
பயங்கரமாய் தோற்றமளித்து. அங்கே எந்நேரமும் இரவென்பதால் ஒரு வித சூன்யமயமாக்கப்பட்ட
பிம்பமாய் அந்த இடத்தில் உள்ள காட்சிகள் தெரிவித்தன.
“ சரி .. நாம பாதுகாப்பான இடத்துக்கு வந்துட்டோம் ...” என்றான் லீமர்.
அந்த இடம் , நெருங்கி வளந்த மரங்களை சுற்றி கொடிகளும், நீண்டு வளர்ந்த
கோரை புற்களும் , சிறு சிறு மண் குன்றுகளும் அதற்க்கு பின்னால் சின்ன ஏரியும் ஓடி
கொண்டி இருந்தது .
“ நீங்க இங்கயே உக்காருங்க ... நான் உங்களுக்கு சாப்பிட ஏதாவது
எடுத்துட்டு வரேன் “ என்றான் லீமர்.
சரி என்பது போல் இருவரும் தலையாட்டினார்கள் .
லீமர் அந்த ஏரியில் மீன்
பிடிக்க சென்றவுடன் , எமியும் மார்க்கும் அந்த மரத்தின் அடியில் அந்த குன்றுகளின் மேல் அமர்ந்து இளைப்பாறி கொண்டு
இருந்தனர்.
“ உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் எமி...”
“ ம்ம்ம் .. ” சொல்லு என்றாள் ஆவலுடன்
“ ஐ யாம் சாரி ... “
“ ஏன் ..?? “
“ நான் உன்ன அடிச்சதுக்கு ....”
“ பரவால்ல, எல்லாம் நம்ம நல்லதுக்கு தான அடிச்ச...” என்று வெட்கத்தில்
சிவந்தாள்.
“ எமி ... இந்த மாதிரி இன்னும் எத்தன பேர் இந்த உலகத்துல மாட்டிகிட்டு
இருக்காங்கனு தெரியல.... அவங்க எல்லாரையும் கண்டுப்பிடிக்கணும் , காப்பாத்தனும் .அதுவும்
இல்லாம இதை யார் செஞ்சதுனு கண்டுபிடிச்சி அழிக்கனும் “
“ ம்ம்ம்ம்.. எனக்கு ரொம்ப பசிக்குது மார்க் ”
“ நான் போய் லீமர்க்கு ஹெல்ப்
பண்றேன். நீ இங்கயே இரு “. என கிளம்பினான்.
“ பத்திரமா போ ” என பதறினாள்.
இப்போதும் கண்ணடித்து அழகாய்
சிரித்தான்.
அந்த ஏரிக்கரையோரம் அவன் சென்று பார்த்த பொழுது அந்த காட்சி ஒரு
நிமிடம் அவன் ரத்தத்தை உறைய செய்து விட்டது. லீமர் மந்திரங்களை சொல்லி சாத்தான்களை , இறந்த
பிணங்களை எழ செய்து
கொண்டிருந்தான். அந்த ஏரியே சிவப்பாய் மாறி கொண்டிருந்தது .
இந்த விஷயத்தை உடனடியாக
ஏமியிடம் தெரிவிக்க வேண்டும் என்று வேகமாக ஓடியபோது அந்த குன்றின் மேல் இடறி விழுந்தான்.
விழுந்தவுக்கு பேரதிர்ச்சி . அது குன்று அல்ல......... இறந்தவர்கள் புதைக்கப்பட்ட
இடம் . அங்கே அதில் “ லீமர் வான்ட்” என கிறுக்க பட்டிருந்தது . அப்பிடி என்றால்
தன்னை சுற்றி உள்ள எல்லா குன்றுகளும்...??!. ஒரு நிமிடம் மார்க்குக்கு இதயம் நின்றுவிட்டது
.
ஒருபுறம் லீமர் அந்த ஏரியில் இருந்து சாத்தான்களை எழுப்ப மறுபுறம்
தன்னால் முடிந்த அளவில் வேகமாக ஏமியிடம் ஓடினான் மார்க்.
“ சீக்கிரம் கிளம்பு எமி ... ஒடனே இந்த இடத்த காலி செய்தாகனும் “
“ ஏன் மார்க் ...?? “
“ பதில் சொல்ல நேரமில்ல .. சீக்கிரம் பாஸ்ட் ... “ என அவள் கை பிடித்து ஓட திரும்பி , ஆரம்பித்த
உடன் நின்று விட்டான் மார்க்.
அங்கே லீமர் வான்ட் தன்னுடைய சாத்தான் ரூபத்தில் அவர்களை பார்த்து சிரித்து
கொண்டிருந்த வேளையில் அங்கே அந்த ரெட்டை நிலாக்களும், தூறல் போட்டு கொண்டிருந்த
மழை இப்போது இடியும் மின்னலுமாய் ஒன்று சேர்ந்து நிலைமை மேலும் மோசமாக்கின !!
- தொடரும்
அடுத்த அத்தியாயத்திற்கு இங்கே சொடுக்கவும்
Comments
Post a Comment