கிழவன் எமியை நோக்கி பேச ஆரம்பித்தான் .
“ இந்த எல்லா குழப்பத்துக்கும் காரணம் “ மிஸ்டர் எக்ஸ் “.
“ மிஸ்டர் எக்ஸா...?? யாரு அது ?? “
“ நீங்க இப்போ உள்ள இருக்கற புத்தகத்தோட கதை ஆசிரியர் . அவரோட
உண்மையான பெயர் எனக்கு தெரியாது . அவரோட கற்பனையில தான் இந்த கதை உருவாச்சி. இங்க
ஏற்கனவே டிராகுலாக்களும் சாத்தான்களும் மற்றும் ஏராளமான யூகிக்க முடியாத மர்மமான விஷயங்கள்
இருக்கு “.
“ ஆனா எங்கள எதுக்கு ...?? “
“ இங்க எல்லாமே எக்ஸோட கற்பைனையில் இருந்தாலும் சில நிஜமான மற்றும்
அந்த கதையில் வரும் கதாப்பாத்திரத்துக்கான மனிதர்கள் நிஜ உலகில் இருந்து அவனுக்கு தேவைப்பட்டது .
அதனால தான் என்னை அனுப்பி உங்கள அந்த வலையில் விழ செய்ய வைத்தான் “.
“ நீங்க எக்ஸ பார்த்து இருக்கிங்களா ...?? “.
“ இல்ல ...ஆனா அவனோட கட்டளைகள் எனக்கு எந்த ரூபத்திலாவது வரும்.. அதை
நான் மீறி போகும் போதே அதுக்கான தண்டனைய நான் அனுபவிக்கனும் ....அதே நேரத்தில உன்னை
காப்பாத்தனும்னு நினைத்து தான் அந்த
புத்தகத்தின் முதல் பக்கத்தில் “ இதை படிக்க வேண்டாம்னு எழுதி இருந்தேன் “ . அதை மீறி நீ அந்த புத்தகத்தை புரட்டி பார்த்தப்போ தான் நீ இதுக்குள்ள சிக்கிக்கிட்ட !!
ஒரு வித பயம் கலந்த மன குழப்பத்தோடு அந்த கிழவனை உற்று நோக்கினாள்
எமி.
“ சரி இப்போ நாங்க எப்படி தான் இதிலிருந்து தப்பிக்கிறது ?? “
“ ஒரே வழி...... மிஸ்டர் எக்சையும் அவன் கற்பனையையும் அழிக்கிறது தான் “
“ சரி ... அதான் எப்படி ...??
“
“ அது எனக்கு தெரியாது...
நீங்க தான் கண்டு பிடிக்கணும் ...” என்றான் கிழவன்.
“ ம்ம்ம்... நாங்க பார்த்து கொள்கிறோம்...” என்றான் மார்க்.
“ கடைசியா ஒரு விஷயம் ... நல்லா ஞாபக வச்சிக்கங்க... நீங்க எது
செஞ்சாலும் அந்த எக்சுக்கு தெரியாம இருக்காது !!”
“ அப்போ நாங்க கிளம்புறோம் ... முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு
..” என சிரித்தான் மார்க் .
இருவரும் அந்த குடிலை விட்டு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தனர்.
மிகவும் களைத்து போய் ஒரு இடத்தில இளைப்பாறிய போது மென்மையான ஆண் குரலில் நயவஞ்சகமான தொனியில் ஓர் அசரீரி ஒலித்தது .
“ என்ன பசங்களா...??... எப்பிடி இருக்கு என் உலகம் .. ?? ” என
சிரித்தது .
எமியும் மார்க்கும் சுற்றி முற்றி பார்த்தும் யாரும் யவரும் தென் படவில்லை . மீண்டும் அந்த ஒலியை
எதிர்ப்பார்த்த வண்ணம் இருந்தனர் .
“ யார் நீ ...?? “ என்று கத்தினான் மார்க்.
“ இன்னுமா தெரியல ... “ என்று மேலும் கொடூரமாக சிரித்தது.
“ மிஸ்டர் எக்ஸ்....?? “
“ நானே தான் . நீங்க
என்ன என்ன விஷயங்கள் பண்றீங்கனு எல்லாம்
எனக்கு தெரியும் ... ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு ... எனக்கு உங்கள உடனே பார்க்கணும்
..”
“ நாங்களும் அதே ஆர்வத்துல்ல தான் இருக்கோம்...” என்றாள் எமி கோபத்தோடு.
“ ஆனா அவ்வளவு சீக்கிரம் கிடையாது மை லிட்டில் கேர்ள் !! ”
“ அப்போ ...?? “
“ இந்த விளையாட்ட இன்னும் சுவாரஸ்யமா ஆக்குவோம் .... நான் உன்கிட்ட
ஒரு கார்ட் கொடுக்கிறேன் . அது தான் நீ என்னை கண்டுப்பிடிக்க உதவும் முதல் க்ளு.
அதை வைத்து நீ சென்றாய் என்றால் அது உனக்கு ரெண்டாவது க்ளுவிற்கு வழி வகுக்கும் .
மூன்றாவது க்ளுவின் முடிவில் நீ என்னை சந்திக்கலாம் .”
“ ஓகே... எனக்கும் சுவாரஸ்யம் னா ரொம்ப பிடிக்கும் .... என்ன மார்க்
ரெடி யா...?? ” என்றாள் எமி .
“ அவ்வளவு சீக்கிரம் நான் உங்களை ஒண்ணா விட்டுடுவேனா ...?? எமி .. நீ ரெண்டாவது க்ளு கண்டுப்பிடிக்கும் பொழுது தான் மார்க்
உன்னிடம் வருவான் ... அது வரையில் .......“ என நிறுத்தி சிரித்தது மிஸ்டர் எக்ஸின்
அசரீரி .
“ மார்க்.... !! ” என எமி
கதறியபோது அவன் அங்கே கரைந்து கொண்டிருந்தான் .
“ இட்ஸ் ஆல் ஓவர் மை பேபி ... சீ யு சூன்....” என சிரித்து கொண்டே
அந்த அசரீரி நின்றுவிட்டது .
“ மார்க் ... மார்க் ... “ அழ ஆரம்பித்தாள் எமி . அழுதுகொண்டே அந்த
மரத்தின் மீது சாய்ந்து கொண்டு படுத்திருந்த போது வானத்திலிருந்து ஒரு மெலிதான
தகடு அவள் மேல் விழுந்தது .
அது தகடு அல்ல ... சீட்டு கட்டில் இருக்கும் ஒரு கார்ட் !! அதில் “ கிங்
ஆப் ஹார்டின் “ பொம்மை இருந்தது .
எப்படி இது விழுந்திருக்கும் என யோசித்து கொண்டிருந்தவள் , இது தான்
எக்ஸ் கொடுத்த முதல் க்ளுவாக இருக்குமோ என முடிவு செய்தாள். இது அழ வேண்டிய தருணம்
அல்ல !! தனக்கு இல்லை என்றாலும் மார்க்கை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற
எண்ணம் எமியின் மனதில் தீயாய் எரிந்து கொண்டிருந்தது .
யோசித்தாள்.... நன்றாக யோசித்தாள்... என்ன ஆனாலும் சரி ... இதில் பின்
வாங்க கூடாது ... அதில்.... தோற்றாலும் !!.
முன்னேறி நடந்து கொண்டு சென்றவளுக்கு ஒரு தொங்குபாலம் தடையாய்
இருந்தது. அது கணிக்க முடியாத அளவிற்கு நீளமாகவும், தரையிலிருந்து உயரமாகவும்
தென் பட்டது . இதுவும் ஒருவகை சுவாரஸ்யம் தான் என்ன எண்ணி கொண்டு பொறுமையாக அந்த
தொங்குபாலத்தின் கையிற்றை பிடித்து நடக்க தொடங்கி பாதி கடந்த வேளையில், அந்த
கயிறுகள் பாம்புகளாய் அவள் உடலை சுற்றி கொள்ள ஆரம்பித்தன !!
- தொடரும்
அடுத்த அத்தியாயத்திற்கு இங்கே சொடுக்கவும்
- தொடரும்
அடுத்த அத்தியாயத்திற்கு இங்கே சொடுக்கவும்
Comments
Post a Comment