உடலலெல்லாம் காயம் மற்றும்
கண்ணாடி செதில் குத்தல்கள் என எல்லா வகையிலும் சக்தி இழந்த எமி , “ முடிந்து விட்டது , இன்னும் சற்று தூரம் தான்“ என தன்னை ஆசுவாசப்படுத்திகொண்டு
முன்னேறி சென்று கொண்டிருந்தாள்.
அந்த மூன்றாவது க்ளு என்னவென்பதை கண்டுபிடித்து
விட்டால் , அதன் தேடலின் முடிவில் ஜானி ஆகிய மிஸ்டர் எக்சை கண்டுபிடித்துவிடலாம்.
ஆனால் அவனை எப்படி அழிப்பது ?? உண்மையில் அந்த ஜானி யார் ?? என்ற கேள்வியை
நெடுநேரமாக தன்னுள் வைத்து கொண்டு சென்று கொண்டிருந்தாள் .
மார்க்கை தன் பாதுகாப்பிற்காகவும் தனக்கு இழைத்த நம்பிக்கை
துரோகத்தாலும் தான் அவனை கொன்றாலும்
எமிக்கு மார்க்கின் நினைவாகவே இருந்தது .
இதை எல்லாம் தனது புத்தகத்தில் காட்சிகளாய் ரசித்து கொண்டிருந்த ஜானி தனது
அரண்மனைக்கு எமிக்காக காத்து கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் மிக பொறுமையாக சென்று கொண்டிருந்த எமிக்கு கண்கள் கூச
ஆரம்பித்து குளிரவும் ஆரம்பித்தது . மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள். இளஞ்சூரிய
வெளிச்சம் மற்றும் பனி படர்ந்த பிரேதேசமாக அது காட்சி அளித்தது . இதுவரை இருட்டு
உலகத்திலே இருந்து வந்த எமி இப்பொழுது தான் முதல் முறையாக சூரியனை காண்கிறாள்.
அதற்கு அவள் மகிழ்ச்சியடைந்தாலும் அவள் உள்ளுணர்வு எதையோ தேடிப்போக சொல்கிறது .
மீண்டும் நடக்க ஆரம்பித்த பொழுது அவளால் முடியவில்லை . உடலெங்கும் காயமானதால் அவள் சிறிது நேரம் அந்த பனி பூக்கள்
கொட்டும் மரத்தின் அடியே அமர்ந்து இளைப்பாறினாள். அந்த சூழலே மிகவும் ரம்மியமாய் தென்பட
ஆரம்பித்தது .
அதன் அழகை ரசித்து கொண்டே தாகம் தீர்க்கவும் காயங்களை சுத்தப்படுத்தவும் எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா என சுற்றி பார்த்து கொண்டிருந்த போது ஒரு அழகான ஓடையை கண்டு அதில் முகம் கழுவ அதில் குனிந்து தண்ணீர் எடுக்கும் சமயம் , நீரோடை உள்ளிருந்து இரு கைகள் அவளை உள்ளே இழுத்து சென்றது . என்ன செய்வதென்று அறியாமல் அதனுள் அகப்பட்டு கொண்ட எமி, தான் நினைவுக்கு வரும் பொழுது ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தாள். அந்த அந்த அறையின் உட்புறத்தில் வானவில்லின் எழு வண்ணங்கள் நிறம் கொண்டிருந்தது. எமிக்கு எதுவும் புரியவில்லை . மெதுவாக அந்த சுவற்றை தொட அது அவளை இழுத்து கொண்டு வேறு அறையில் விட்டது . அந்த அறையில் மூன்று சுவர்களும் வெறும் வெள்ளையாகவும் மற்றும் புத்தகங்கள் நிரம்பிய ஷெல்ப்பாக காணப்பட்டது . நான்காவது சுவரில் கலர் கலரான பேனாக்கள் அழகாக அடுக்கிக் வைக்க பட்டிருந்தது .
அதன் அழகை ரசித்து கொண்டே தாகம் தீர்க்கவும் காயங்களை சுத்தப்படுத்தவும் எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா என சுற்றி பார்த்து கொண்டிருந்த போது ஒரு அழகான ஓடையை கண்டு அதில் முகம் கழுவ அதில் குனிந்து தண்ணீர் எடுக்கும் சமயம் , நீரோடை உள்ளிருந்து இரு கைகள் அவளை உள்ளே இழுத்து சென்றது . என்ன செய்வதென்று அறியாமல் அதனுள் அகப்பட்டு கொண்ட எமி, தான் நினைவுக்கு வரும் பொழுது ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தாள். அந்த அந்த அறையின் உட்புறத்தில் வானவில்லின் எழு வண்ணங்கள் நிறம் கொண்டிருந்தது. எமிக்கு எதுவும் புரியவில்லை . மெதுவாக அந்த சுவற்றை தொட அது அவளை இழுத்து கொண்டு வேறு அறையில் விட்டது . அந்த அறையில் மூன்று சுவர்களும் வெறும் வெள்ளையாகவும் மற்றும் புத்தகங்கள் நிரம்பிய ஷெல்ப்பாக காணப்பட்டது . நான்காவது சுவரில் கலர் கலரான பேனாக்கள் அழகாக அடுக்கிக் வைக்க பட்டிருந்தது .
ஒருவேளை அந்த மூன்றாவது க்ளு இந்த
ஏதேனும் ஒரு புத்தகத்தில் இருக்குமோ என எண்ணினாள். அங்கிருந்த ஒரு புத்தகத்தை திறந்து பார்க்க அது
வெற்று தாள்களாக இருந்தது . அடுத்த புத்தகத்தை திறந்து பார்த்த பொழுதும் அதே போல் அதுவும்
வெற்று தாள்களாக இருக்கவே அந்த அறை முழுவதும் தேடிப்பார்க்க எல்லாம் அப்படியே
இருந்தது .
அந்த பேனாக்களை தொட்டு ஆச்சிரியமாக பார்த்த எமி , ஒரு புத்தகத்தை
எடுத்து “ கண்ணாடி நிழல்கள் “ என திடீரென்று மனதில் தோன்றி, அதை எழுத , அந்த இடம்
உடனே ஒரு கண்ணாடி அறையாய் மாறியது . நேரம் ஆக ஆக எமிக்கு பயமும் சோர்வும் அதிகமாகி
கொண்டிருந்தது. தனது மூன்றாவது க்ளு இது தான் என யூகித்த எமி அந்த புத்தகத்தில்
ஜானி என பெயர் எழுத, அந்த இடம் எல்லாம் பொடியாய் பொடியாய் உதிர்ந்து ஒரு மிகப்பெரிய
சூன்யமயமாக்கப்பட்ட இடத்தில் மீண்டும் அதே இரவுகளுமாய் ஒரு மிகப்பெரிய சீட்டு
கட்டு அரண்மனை தெரிந்தது . வந்து விட்டோம் , ஜானியை காண போகிறோம் என்கிற ஆவல்
மேலும் எமிக்கு அதிகமாகியது .
மெல்ல அந்த மிகப்பெரிய அரண்மனையை அடைந்து அந்த உள்ளே சென்ற போது அந்த
கதவு தானாக திறந்து கொண்டது. இப்போது ஜானியின் அசீரிரி ஒலிக்க ஆரம்பித்தது .
“ வெரி குட் எமி ..... சீக்கிரம் வா ..ஐயம் வைட்டிங்...” என வெறியோடு சிரித்தான் .
“ இன்னிக்கு நீ.... இல்ல நான் .. ரெண்டுல ஒன்னு பார்த்துடனும். “
“ ஹாஹஹாஹா.... யாரு ... நீ ..என்னை அழிக்கலாம்னு பார்க்கிறாயா ??
முடிஞ்சா உள்ளே தாண்டி வந்து என்னை பாரு ...ஹாஹஹாஹாஹா...” என ஜானி முடிக்கும்
முன்பே அந்த இடத்தில் சீட்டு கட்டு ஐம்பத்தி இரண்டு கதவுகளாக அவள் முன் காட்சியளித்தது.
“ இந்த ஐம்பத்தி இரண்டு கதவுகள்ல ஒண்ணுத்துல தான் நான் இருக்கேன்...
முடிஞ்சா என்னை கண்டு பிடிச்சிக்கோ !! ” என்று சொல்லி ஜானியின் அசீரிரி நின்று
விட்டது .
இந்த சீட்டு கட்டு கதவுகள் எமிக்கு எதையோ உணர்த்தியது போல இருந்ததுன .
அந்த கதவில் சீட்டு கட்டில் உள்ள குறியீடு பொறிக்க பட்டிருந்தது . பொறுமையாக முதல்
கதவை திறக்க அதில் இருந்து ஒரு சக்தி உள்ளே எமியை இழுக்க சடாரென்று கதவை மூடி
விட்டாள். இப்பொழுது வேறு கதவை திறக்கலாம் என முடிவு செய்து திறந்து பார்த்த
பொழுது . அவளை கொலை செய்ய வேகமாக தூக்கி எறியப்பட்ட கத்தி அவள் காதோரம் உரசி
கொண்டு செல்ல , அந்த கதவையும் மூடி விட்டாள் .
இதை எப்படி விளையாடுவது என்ற யோசனையில் ஆழ்ந்து யோசித்தபொழுது ,
மிகவும் சந்தோஷமடைந்தாள் எமி . அது ஒரு மெமரி கேம் போல விளையாடி கடைசியில் இருக்கு
ஒரு ஜோடி கதவுகளில் தான் ஜானி இருக்க முடியும் என யூகித்து , ஒரே குறியீடு உள்ள
கதவுகளை அடுத்தடுத்து திறக்க முயற்சிக்க அழாக அந்த ஜோடிகள் மறைந்து விட்டன .
பொறுமையாக விளையாடி கொண்டே அனைத்து ஜோடிகளும் மறைய செய்து கடைசியில்
கிங் கார்ட் ஜோடிகளே மிச்சமிருந்தது. இந்த இரண்டில் ஒரு கதவின் உள்ளே மட்டுமே ஜானி
இருக்கிறான் . தவறான கதவை திறந்தால் அதன் உள்ளே மாட்டி கொள்வோம் என பயந்து கொண்டே
அவன் கொடுத்த முதல் க்ளுவாகிய கிங் ஒப் ஹார்டினை நினைவு கூர்ந்து அந்த கதவை திறக்க
, அதில் உள்ளே சென்றாள்.
அந்த இடம் அண்டார்டிக்கா போல எல்லாமே ஐஸ் கட்டியினால் செய்ய
பட்டிருந்தது .
“ ஜானி ... வெளிய வா ... நான் வந்துட்டேன் ” என எமி கத்தினாள்.
“ உன் பின்னாடி தான் இருக்கேன் .... எமி “ என மெல்ல சிரித்தான் .
திரும்பி பார்த்தால் , ஒரு மெலிதான கண்ணாடி போட்டு கொண்டு ஹாப் கை டீ
ஷர்ட் அண்ட் சார்ட்ஸ் போட்டு கொண்டு தனது இடது கையில் ஒரு தேள் டாட்டூவுடன் ஒரு உருவம் அவள் முன் தோன்றியது .
“ அப்பா ...??? “
“ நோ ... நோ ... நான் உங்க அப்பாவோட க்ரியேடிவிட்டி “
“ இங்க இருக்கற எல்லாமே என்னோட க்ரியேடிவிட்டி தான் . என்னோட கதையில
அடுத்து என்னனு தெரியாம இருக்கறது தான் சுவாரஸ்யமே. அதனால தான் நீங்க அடுத்தடுத்து
எதிர்பார்க்காத விஷயத்த உங்க பயணத்தின்போது நான் கொடுத்தேன். அதே மாதிரி இந்த கதையோட
முடிவு நான் நினைக்கற மாதிரி தான் நடக்கும் . அதனால என்ன யாராலையும் அழிக்க
முடியாது , ஹாஹாஹா “
இதை எதிர்பார்க்காத எமி ஒரு நிமிடம் அதிர்ந்தாள் .
“ உன்னை சாகடிக்கனும்னா அதை நான் ஈசியாகவும் எப்பவோ பண்ணி இருக்கலாம் .
ஆனா என்னோட கதையின் சுவாரஸ்யம் குறைய கூடாதுன்னு தான் மார்க்கை அனுப்பி வச்சேன். ஆனா
நீ புத்திசாலி. எனக்கே பல ஆச்சர்யமமும் , என்னோட கதையிலே எனக்கு ட்விஸ்ட் கொடுக்கற
... இப்போ இந்த கதையோட முடிவு , நீ சாகறது தான் . அதை நான் தான் பண்ணனும். என்னோட
புத்தகத்தோட கடைசி பக்கத்துல இப்போ நான் என்ன எழுதுறனோ அது தான் நடக்கும் . சாக
தயார இரு எமி “ என தன் கொடூரமான உருவமாக
உருமாறி ஏமியிடம் நடந்து வந்தான் ஜானி .
“ தி கேம் இஸ் ஓவர் எமி “...... என வேகமாக தன் ஈட்டி போன்ற கையால்
அவளை குத்த முற்பட்ட போது.....
“” எஸ், தி கேம் இஸ் ஓவர் .... நாட் மைன்.... யுவர்ஸ் ... அங்க பின்னாடி
கொஞ்சம் பாரு ....” என்றாள் எமி .
அங்கே மார்க் ஜானியின் புத்தகத்தை எடுத்து வைத்து கொண்டு சிரித்தான் .
“ ஹே ... எமி ... எனக்கே ட்விஸ்டா...?? “ என அதிர்ந்து குழம்பினான்
ஜானி.
“ நான் மார்க்கை கொல்லவில்லை...
நாங்க நடத்தியது எல்லாம் நாடகம் , இதை எல்லாம் அந்த கிழவன் வீட்டுலயே பேசியாச்சி, ஏன்னா
நீ எப்படியும் எங்களை கண்காணிச்சிட்டு இருப்ப , அந்த ரகசிய குடில்ல மட்டும் தான்
நீ எங்களை கண்காணிக்க முடியாது. ஒரு வேளை மார்க் என்னை சாகடிக்கலனா , நீ அவனை சாகடிச்சிருப்ப,
ஸோ இந்த கதை எப்படி முடியும்னு முடிவு பண்ண வேண்டியது நாங்க தான் , நீ இல்ல ஜானி “
“ உங்கள ... “ என கர்ஜித்து
கொண்டு மார்க்கை நோக்கி ஓடி அவனிடம் இருந்த தன் புத்தகத்தை வாங்க முயற்சிக்க,
மார்க் அதை எமியிடம் தூக்கி போட்டான்.
“ இந்த கேமை நான் முடிக்கிறேன் “ , என கடைசி பக்கத்தில் “ மார்க்கும்
எமியும் அந்த ஜானியை அழித்து தன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பினர்.” என தான் அந்த புத்தக அறையில் எடுத்த பேனாவை வைத்து எழுத, அது ஜானியை
ஜல்லடையாக்கி அழித்து அந்த அரண்மனையும் மற்ற இடங்களும் புயல் காற்றில் சூறையாடியது
போல எல்லாம் அள்ளி கொண்டு சென்றது .
சந்தோஷத்தில் மார்க்கும் எமியும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொள்ள நெருங்க பொழுது,
“ எமி ... எமி ... என தன்னை யாரோ எழுப்புவது போல் தோன்றியது .
“ என்னடி புத்தகத்த அப்பிடியே கையில வச்சிட்டு தூங்கிட்ட ?? “ என வெளியில் சென்று
திரும்பி வந்த எமியின் அம்மா கத்தினாள் .
கண் விழித்த எமி , ஒரு நிமிடம் தன்னை நிதானமாக்கி கொண்டு தான் கண்டது
எல்லாம் கனவு என்று புரிந்து கொள்ள சிறிது நேரம் எடுத்தது . இப்பொழுது தான்
எமிக்கு மூச்சே வந்தது . ஒரு வழியாக எல்லாத்திடமும் இருந்து தப்பித்து விட்டோம்
என்று நினைத்து கொண்டே கீழ இறங்கி தண்ணீர் குடிக்க சென்ற போது அவள் அப்பா எதையோ
எழுதி கொண்டிருந்தார் .
“ என்னப்பா ..?? புது புக்கா ?? ” என டாப்பில் தண்ணீர் பிடித்து
கொண்டே கேட்டாள். அவள் அம்மா அங்கே சமையல் செய்து கொண்டிருந்தாள்.
“ ஆமா மா .. ”
“ என்ன பெயர் ? “
“ கண்ணாடி நிழல்கள் ”
ஒரு நிமிடம் தண்ணீர் குடிக்க க்ளாசை வாயருகே எடுத்து சென்றவள் ,
நின்று விட்டாள்.
“ எமி , அப்பாக்கு கொஞ்சம் தண்ணி கொடும்மா..”
“ இந்தாங்க அப்பா ..” என கிளாசை நீட்டியவள் மேலும் அதிர்ந்தாள் . அவள்
அப்பா அந்த க்ளாசை வாங்கும் பொழுது அவர் இடது கையில் அதே தேள் டாட்டூ
ஒட்டியிருந்தது . எல்லாம் தனது மனப்ரம்மை என அவளை அவளே தேற்றி கொண்டாள்.
அந்த மாதமே எமி தன் கல்லூரி படிப்பை முடிக்க, அவர் பெற்றோர் அவளுக்கு கல்யாணம் செய்ய முடிவு செய்தனர்.
இதையெல்லாம் மறந்து சந்தோஷமாக தன் வாழ்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள் எமி . தான்
காதலித்தவனையே மணமுடித்து முடித்து ஹனிமூனுக்காக கலிபோர்னியா சென்று அங்கே ஒரு
ஹோட்டலில் தங்கி இருந்தனர்.
“ டோக்... டோக்.. ரூம் சர்விஸ் “
“ யா கம் இன் ..”
“ சார் .. எட்வின் அண்ட் எமி ...” உங்களுக்கு தெரிஞ்சவர் னு சொல்லி
ஒருத்தர் இதை கொடுத்தார் என ஒரு பேக்கை நீட்டினான் .
“ ஓகே, யு மே லீவ் நவ் “
“ ஹனி எட்வின் , என்னது அது ?? “
“ தெரியல எமி , லெட்ஸ் சி ” என அந்த பேக்கை திறந்த போது, எமி
அதிர்ந்தாள் . அதே சிகப்பு அட்டை போட்ட பெரிய புத்தகம் !!.
எட்வின் தயவு செய்து அதை
பிரிக்காத ! அந்த பேக்கை நாம் எரித்துவிடலாம் என தனக்கு இதற்கு முன்னால் நடந்ததையும்
சேர்த்து எட்வினிடம் கூறினாள்.
“ ஒ.... சரி ... அந்த பேக்கை ஓரமா வச்சிடுவோம் இப்போ நான் லைட்டை
அணைக்கவா ? “ என எட்வின் கேட்க, சிரித்துகொண்டே இருவரும் விளக்கை அணைத்தனர்.
மறுபுறம் அந்த ஹோட்டலின் கிழே அதே கிழவன் , புத்தகம் விற்று கொண்டிருந்தான் !!!
வாழ்கையின் அடுத்த கட்டத்தில் நமக்கு நடக்கும் எல்லாமே, அதிசயமும்
பாண்டசியும் தான் . இது நிழலா அல்லது நிஜமா.... ?? கண்ணாடி நிழல்கள் பதில் சொல்லும் !!!
Comments
Post a Comment