Skip to main content

Posts

Showing posts from April, 2015

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் - 9

உடலலெல்லாம் காயம்  மற்றும் கண்ணாடி செதில் குத்தல்கள் என எல்லா வகையிலும் சக்தி இழந்த எமி , “ முடிந்து விட்டது , இன்னும் சற்று தூரம் தான்“ என தன்னை ஆசுவாசப்படுத்திகொண்டு முன்னேறி சென்று கொண்டிருந்தாள்.  அந்த மூன்றாவது க்ளு என்னவென்பதை கண்டுபிடித்து விட்டால் , அதன் தேடலின் முடிவில் ஜானி ஆகிய மிஸ்டர் எக்சை கண்டுபிடித்துவிடலாம். ஆனால் அவனை எப்படி அழிப்பது ?? உண்மையில் அந்த ஜானி யார் ?? என்ற கேள்வியை நெடுநேரமாக தன்னுள் வைத்து கொண்டு சென்று கொண்டிருந்தாள் . மார்க்கை தன் பாதுகாப்பிற்காகவும் தனக்கு இழைத்த நம்பிக்கை துரோகத்தாலும்  தான் அவனை கொன்றாலும் எமிக்கு மார்க்கின் நினைவாகவே இருந்தது . இதை எல்லாம் தனது புத்தகத்தில் காட்சிகளாய் ரசித்து கொண்டிருந்த ஜானி தனது அரண்மனைக்கு எமிக்காக காத்து கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் மிக பொறுமையாக சென்று கொண்டிருந்த எமிக்கு கண்கள் கூச ஆரம்பித்து குளிரவும் ஆரம்பித்தது .  மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள் . இளஞ்சூரிய வெளிச்சம் மற்றும் பனி படர்ந்த பிரேதேசமாக அது காட்சி அளித்தது . இதுவரை இருட்டு உலகத்திலே இருந்து வந்த ...

கண்ணாடிநிழல்கள்-அத்தியாயம்-8

மார்க் தன்னை ஏமாற்ற விளையாட்டாய் தான் சொல்கிறான் என எமி நினைத்தாலும் அதன் உள் அர்த்தம் உண்மையாகவே அவன் சொல்வது போல் தான் இருக்குமோ என அச்சமடைந்தாள். “ உன்னோட நல்ல நேரம் பாரு எமி ... உன்னோட நண்பன் கையாலயே சாக போற .. “ என அழகாக புன்னகைத்தான் . “ ச்சீ... அந்த வார்த்தை சொல்லவே உனக்கு அருகதை கிடையாது “ !! “ ஹாஹாஹா... வெல்... சாகறதுக்கு முன்னாடி நீ நிறைய விஷயம் தெரிஞ்சக்ககனும் னு நான் ஆசைப்படுறேன். அதுல முதல் விஷயம் , நான் மிஸ்டர் எக்ஸால அனுப்பப்பட்டவன் . என்னோட வேலையே இங்க வர மனிதர்களை திசை திருப்புறதும் அப்புறம் ஒரு வேளை அவங்க மிஸ்டர் எக்ஸ்க்கு எதிரா உருவானா.......... அவங்கள அழிக்கறதும் தான். “ “ பை த பை ... உன்னோட ரெண்டாவது க்ளுவும் நான் தான் செல்லம் “. எமி அடுத்து அவன் என்ன ரகசியம் சொல்ல போகிறான் என்பதை எதிர்பார்த்து கொண்டிருந்தாள். “ அதுவும் இல்லாம நீ என் கையால மட்டும் தான சாகனும் னு மனசுக்குள்ள எதோ ஒரு ஆசை ... அதான் உன்னை என்னால முடிஞ்ச வரை கப்பாற்றிட்டு இருந்தேன். ஆனா இப்போ ......அது நடக்க போகுது “. ஒரு நிமிடம் எமிக்கு என்னசெய்வதென்று தெரியாவிட...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் - 7

அந்த பாழடைந்த தேவாலயத்தின் உள்ளே  மணி அடிக்கும் சத்தம் கேட்டது . உடனே எமிக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை . உள்ளே யாரிடமாவது உதவி கேட்டு இதில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என எண்ணி உள்ளே சென்ற போது, அங்கே யாரும் இருப்பதாக தெரியவில்லை . எமி மெல்ல பதட்டம் அடைய தொடங்கினாள். அந்த தேவாலயம் மிகவும் அழுக்கு படிந்தும் உடைந்தும் காணப்பட்டது. எதை நோக்கி போகிறோம் ?? போகும் பாதை சரி தானா .. இதிலிருந்து தப்பிக்க முடியுமா ...?? என்ற பல்வேறு எண்ண வலைக்குள் அவள் சிக்கி தவித்து கொண்டிருந்தபோது அவள் பெயர் ஒரு மென்மையான குரலால் அழைக்கப்பட்டது ! அது அந்த தேவாலயத்தின்  வயது முதிர்ந்த பாதர் . எமி வேகமாக ஓடி போய் அவரை  கட்டி பிடித்து அழ தொடங்கினாள் . பின்பு ஓவ்வொரு விஷயமாக அவரிடம் கூற தொடங்கியபொழுது பாதர் அவளுக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார் . “ பாதர் ... இந்த மாயைல இருந்து நான் விடுபடனும் பாதர் ... நீங்க தான் எப்படியாவது என்னை காப்பாத்தனும். இதுல என் நண்பனும் மாட்டிக்கிட்டு இருக்கான் பாதர் “ . “ கவலைப்படாதமா... எல்லாம் அந்த கர்த்தர் பார்த்துகொள்வார் “. ...