“த்தா...டேய் ... அது யாரா இருந்தாலும் அவங்கள சாகடிக்காம விட மாட்டேண்டா , இங்க நான் தான் ராஜா , என்னை எதிர்த்து எவன் போட்டி போட்டாலும் அவனுக்கு சங்கு தான் .அது உன் தலைவனா இருந்தாலும் !! “ என அச்சில் வராத சில தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தப்பட்டு அந்த வாட்சப் ஆடியோ பரப்பரப்பாகியது. இந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆறுமுகம் என தெரிய வர , போலிஸ் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டது . மேலும் கொல்லப்பட்டவர் ஆளுங்ககட்சி என்பதால் அந்த கொலை வழக்கிற்கான விசாரிப்பும் தீர்ப்பும் வேகமாக வழங்கப்பட வேண்டும் என்று உறுதியாக அந்த கட்சிகாரர்கள் வலியுறுத்த ,அதற்கான பணிகள் துரிதமாக நடந்துக்கொண்டிருந்தன. இந்த விடுமுறை நாட்கள் இவ்வளவு வேகமாக , கணிக்க முடியாத விஷயங்கள் நடப்பது எங்களுக்கு அதுவே முதல் முறை .காவல்துறையிடம் வேண்டிய தகவலை கொடுத்துவிட்டு ,எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வருவோம் என உறுதி திரும்பினோம் . ஆனால் எங்கள் மூவருக்கும் ஒரே சிந்தனை . நாங்கள் கடந்துவந்த கொலைகள் யாவும் தற்செயலாக நடக்கிறதா அல்லது இதற்க்கு பின்னால் காரணம் இருக்கிறதா, அப்படி இருந்தால், யார் அது ?? , இனிமேலும் இது போன்ற கொலைக...
புது அத்தியாயத்தின் தொடக்கமாய் அந்த ஊட்டி பயணம் ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும் என நினைத்துகொண்டிருக்கும் வேளையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பாலா எங்களை அவருடன் ஊட்டியில் தங்குமாறு கேட்டுக்கொண்டார். அப்பாவின் நெருங்கிய நண்பர் என்பதாலும் , தற்போதைய சூழ்நிலை அவர் அறிந்ததாலும் அவர் எங்களை அழைத்திருப்பார் என யூகித்தேன். பொதுவாக பாலா அண்ணன் தன் கட்சி விஷயங்களை பெருமபலும் வீட்டில் பேச மாட்டார் , அது மிகவும் முக்கியமாக இருப்பின் மட்டுமே. மேலும் அவர் தன்னை சுற்றி யாரும் இருப்பதை விரும்பவும் மாட்டார் . அது தனக்கான ஆபத்தை தேடி போவது போல என்பது அவர் அனுமானம் . தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் மும்மரமாக இருந்த அவர் , அவர் உதவியாளரின் மூலம் எங்களுக்கு அந்த தகவலை தெரிவிக்க, ஒரு வாரம் பயணமாக ஊட்டி சென்றோம் . பாலா அண்ணன் மிகவும் கோபக்காரர் என்று நாங்கள் ஊடங்கங்கள் மூலம் அறிந்திருந்தாலும் எங்களை உபசரித்து நன்றாகவே கவனித்துக்கொண்டார் . எங்களுக்கு என தனித்தனி அறை அவர் ஒதுக்க ஏற்பாடு செய்து அவர் பிள்ளைகள் போல கவனித்துக்கொண்டார் . கட்சியின் தீவிர தொண்டரும் தலைவரும் அவரே என்பதால் தன் அரசியல் வாழ்க்கையில் கல்...