Skip to main content

மெல்ல கொல்வேன் - E06

வாழ்க்கை மிகவும் சிறியது . அதில் எதிர்ப்பாராத திருப்பங்களோடு நம்மை பயணிக்க தூண்டுகிறது . இந்த நாள் எப்படி என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இது முடிவல்ல தொடக்கம் என்றே என் மனம் பதைபதைத்த வேளை, செல்போன் தன் கதறலை ஆரம்பித்திருந்தது.
“ ஹெலோ ... கார்த்திக் ?? “
“ சொல்லுங்க இன்ஸ்பெக்டர் ... என்ன இவ்வளவு காலையில கால் பண்ணி இருக்கீங்க ?? “
“வினோத் இருக்கிறாரா ? “
“ம்ம்ம்... இருங்க கொடுக்கிறேன்  என தூங்கி கொண்டிருந்த வினோத்தை தட்டி எழுப்பி அவனிடம் செல்லை கொடுத்து ,சைகையில் இன்ஸ்பெக்டர் பேசுகிறார் என்றேன். “
“ சொல்லுங்க சார் . என்ன விஷயம் ??“
“ ஐ யாம் சாரி டு டெல் திஸ் . உங்க அப்பா இறந்து விட்டார் . நீங்க கொஞ்சம் சீக்கிரம் உங்க அப்பா வீட்டுக்கு வாங்க. “
“ ச...ச..சரி ... “
அழைப்பு துண்டிக்கப்பட்டதும் வினோத்திடம் விசாரித்தேன் . விஷயத்தை சொன்னதும் எனக்கு பகிர் என்று தூக்கி வாரி போட்டது . வயோவையும் எழுப்பி விஷயத்தை சொல்லி உடனடியாக சங்கரப்பாண்டி வீட்டை அடைந்தோம் .
நேற்று அவ்வளவு கூத்தும் கும்மாளமாய் இருந்த அவர் வீடு இன்று சுடுகாடாய் மாறியிருந்தது. வீட்டின் உள்ளே முனுசாமியும் இன்ஸ்பெக்டரும் பேசிக்கொண்டிருந்தனர். இடையில் கிருஷ்ணனும் ஏதோ சொன்னான் .
நாங்கள் வருவதைப்பார்த்து அவர்கள் பேசுவதை நிறுத்தி வினோத்திடம் பேச ஆரம்பித்தனர்.
“ என்ன தம்பி அப்பா இப்பிடி செய்துகிட்டாறே ?? என அடக்கமுடியாமல் அழுதான் முனுசாமி . “
“ கிருஷ்ணன் தான் முதலில் எங்களுக்கு தகவல் சொன்னார் . பின்பு தான் நான் உங்களை விசாரிக்க அழைத்தேன் . “
“ அப்பா எங்க ?? “ என்றான் வினோத் . சிறு வயது முதலே அப்பாவின் மீதுள்ள வெறுப்பினால் ஆசாபாசங்கள் அற்று தன் அம்மா இருக்கும் வரை மட்டும்  அந்த வீட்டில் இருந்தான் . பின்பு அவன் அம்மா இறந்தவுடன் அப்பாவின் கோபமும் வன்மும் பிடிக்காமல் ஹாஸ்டலில் தங்கிவிட்டான் . இருந்தாலும் இப்போது அப்பாவின் தீடீர் இறப்பு அவனுக்குள் லேசாக  வலிக்க தொடங்கியது .
எல்லோரும் ரெஸ்ட் ரூமை நோக்கி உள்ளே செல்ல சங்கரபண்டியின்  ரகசிய அறைக்கு எங்களை அழைத்து சென்றான் . காலையில் ஆபிசுக்கு சங்கரன் வரவில்லை என்பதாலும் போன் செய்தால் பதில் இல்லை என்பதாலும் கிருஷ்ணன் , சந்தேகப்பட்டு , சங்கரனின் ரகசிய அறையில் சென்று பார்க்க முற்பட்டபோது தான் அங்கே பிணமாய் கிடந்த விஷயம் புரிந்தது .
“ அப்பா ....???... “ என அவர் உடலை பார்த்ததும் கண்கள் கலங்கினாலும் அவர் அருகே செல்ல வினோத்தின் கால்கள் மறுத்தது .
சங்கரபாண்டி போதைக்கு தன் கையில் ஊசி போடபட்டிருந்து ரிவால்ரில் தலையை துளையாக்கி இறந்து கிடந்திருந்தார். மேலும் என பார்த்ததும் அது தற்கொலை தான் என யாவரும் கண்டுபிடிக்கும் வண்ணம் இருந்தது .  .
“ சரி சொல்லுங்க கிருஷ்ணன். சங்கரனோட ரகசிய அறை உங்களுக்கு மட்டும் தான் தெரியும் . மேலும் அவர் ஏன் தற்கொலை செய்துகிட்டார். அவருக்கு தொழில் ரீதியா யாராவது விரோதி இருக்காங்களா ??னு உங்களுக்கு தெரிந்த விவரங்களை எங்களுக்கு சொன்ன உதவியா இருக்கும் “
என் மனது ஏதோ கணக்கு போட ஆரம்பித்தது . அந்த அறையை சுற்றி ஆராய ஆரம்பித்தேன் .
இன்ஸ்பெக்டரின்  போன் மணி அலறியது
“ ஹெலோ .. “.
“ சார் நான் ஏட்டு சந்தானம் பேசுறேன் சார் . சங்கரபாண்டி கொலை விஷயமா பத்திரிக்கையிலிருந்து நிறைய பேரு உங்கள பார்க்கணும்னு சொல்றாங்க .”
“ யோவ் அவங்களுக்கு விஷயம் எப்பிடி யா தெரிஞ்சிது . “
“ தெரியல சார் . பட் உங்கள பாக்க தான் வராங்கனு நினைக்கிறேன் .”
“ அட என்னயா .... யோவ் ...ஏற்கனவே மரியா பேங்க் கொலை கொள்ளை விஷயத்துல நம்மளால எதவுமே பண்ண முடியல னு அவுனுங்க கிழிக்கிரானுங்க. இதுல இது வேறயா...?? எதையாவது பண்ணி இங்க வர முடியாத மாதிரி செய் .. “
“ யோவ் அந்த டிடக்டிவ் பேரு என்னையா ??? “
“ யாரு சார் . அதான்யா... போன தடவை கூட நமக்கு ஒரு பெரிய கேஸ்ல ஹெல்ப் பண்ணானே . அவன் தான் . “
“ஒ... ரிச்சர்டா ...சொல்லுங்க சார் “
“ உடனே அவனே சங்கரப்பாண்டி வீட்டுக்கு வரச்சொல்லு.... உடனே !! “
சிறிது நேரத்தில் வெளியே வண்டி சத்தம் கேட்டது . ரிச்சர்ட் தான். பப்பில்கம் மென்றுக்கொண்டே உள்ளே வந்தான் . முனுசாமி அவனை எல்லோரும் இருந்த ரகசிய அறையில் அழைத்து சென்றார் .
எதுவும் பேசாமல் அங்கு இருந்த எல்லோரையும் பிணத்தையும் மட்டுமே ஒரு இருபது நிமிடம் பபிள்கம்மோடு விளையாடிக்கொண்டிருந்தான் . தடவியல் நிபுணர்களை அழைக்கும்மாறு கேட்டு அந்த இடத்தில் கை ரேகை எதாவது கிடைக்குமா என சோதித்தான் .
அங்கிருந்த ஒரு காலி மதுக்கோப்பையில் ஒரு கைரேகை கண்டுப்பிடிக்கப்பட்டது . அந்த மதுக்கோப்பையை நன்றாக உற்றுப்பார்த்து விட்டு  அறையின் ஒரு பக்கத்தில் சங்கரப்பாண்டியும் வேறு ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து இது யார் என்று முனுசாமியிடம் கேட்டான் .
” அது தான் ஐயா சங்கரபாண்டியோட அண்ணேன் குமாரவேலு. ஆனா அவருக்கும் சங்கரனக்கும் ரெண்டு வருஷமாவே பகை . இருந்தாலும் அதை வெளிக்ககாட்டிக்காம ஒருத்தர் நிகழ்ச்சில இன்னொருத்தர் எப்போவாவது கலந்துக்குவாங்க .”
மேலும் எல்லாரிடமும் அவனுக்கு தேவையானதை விசாரித்து விட்டு பபிள்கம்மை ஓராமாக துப்பி, பேச ஆரம்பித்தான் .
“ இது தற்கொலை இல்லை ... கொலை “
எல்லோரும் அவனை ஆச்சிரியமாக பார்த்தனர் . எனக்கு பெரிதாய் சந்தேகம் அகிலன் மீதும் கிருஷ்ணன் மீதும் தான் . டெண்டருக்காக கொலை செய்யப்பட்ட தன்னுடைய பி.ஏகாக அகிலன் கொலை செய்திருக்கலாம் இல்லை. ரகசிய அறையின் வழி தெரிந்த கிருஷ்ணன் அதை செய்திருக்கலாம் . ஏன் இருவரும் ஒன்றாய் கூட அதை செய்திருக்கலாம் . இருப்பினும் ரிச்சர்டின் வியுகத்திற்காக காத்திருந்தேன் .
“ சங்கரப்பாண்டி தன்னை தானே மண்டையில் சுட்டுக்கொண்டிருந்தால், அந்த குண்டின் வெடி மருந்து துகள்கள் கிட்டதட்ட தலையை சுற்றி சிறிது சிதறி இருக்கும் . சோ .. அவர் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து சுடப்பட்டிருக்கிறார் . அண்ட் இது கொலை மாதிரி தெரிய அவுருக்கு போதை ஊசி போட்டிருக்காங்க .
“ எப்படி சொல்றிங்க ?? என்றான் வினோத். “
“ முதல்ல சங்கரனுக்கு போதை பழக்கம் இல்லை. இரண்டாவது அப்படி தற்கொலை செய்ய போறவங்க யாரும் கோட் சூட்டோட தான் சாகனும் னு இருக்கமாட்டங்க. சங்கரன் போதையலே தன்னை சுட்டுகிட்டாரு என்னும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த தான் இப்படி செய்யப்படிருக்கு.  இங்க இருக்கறவங்க கைரேகை எதுவும் அந்த கண்ணாடி கோப்பையில்  இருக்கும் கை ரேகையோட ஒத்து போகல. மேலும் கண்ணாடி கோப்பையில சின்ன ஸ்க்ராட்ச் இருக்கு. விச் மீன்ஸ்  கொலையாளி  சங்கரனுக்கு போதை ஊசி போட்டு தள்ளாட வச்சி பொறுமையா கண்ணாடி கோப்பையில மது அருந்துகிட்டே சங்கரபாண்டியை கொன்னுட்டு துப்பாக்கியை அவர் கையில தினுச்சிட்டு போயிருக்கான். இது தான் நடந்திருக்கும் . “
“ சரி , சங்கரபாண்டியோட அண்ணனையும் அகிலனையும்  வரச்சொல்லுங்க.“  
இன்ஸ்பெக்டர் உடனே குமாரவேலுக்கும் அகிலனுக்கும்  போன் செய்து வரவழைக்கப்பட்டார் . வந்தவுடன் அவருக்கு நிலவரம் விளக்கப்பட்டது .
ஆர்பாட்டம் இல்லாத நார்மலாக வந்திருந்தார் குமாரவேலு . தெலுங்கு பட ஹீரோ மாதிரி முகம் .
“ ஹெலோ ...ஐ யாம் ரிச்சர்ட் .. டிடக்டிவ் “  என கைகுலுக்கினான் .
“ ஐ யாம் குமாரவேலு ... தம்பி இறந்தது ரொம்ப தாங்கிக்க முடியாத சோகமாய் இருக்குது . நீங்க தான் சார் எப்படியாவது எங்க தம்பிய கொன்னவன கண்டுபிடிக்கனும்  “ என கண்ணீர் விட்டார் .
“ ஒன்னும் பிரச்சனை இல்லை சார் .. இப்படி உட்காருங்க.”
அவரின் கைரேகையை சோதனை செய்ய உத்தரவிட்டான் ரிச்சர்ட் .சோதனை முடிந்தது .
“ சார் அப்போ நான் ...?? “ என்றான் அகிலன்.
“ சும்மா உங்களை பார்க்கணும்னு தோன்றியது , அதான் . சரி உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை சொல்லுங்க என எல்லோரிடமும் தனக்கு தேவையான விஷயத்தை சேகரித்து கொண்டார் ரிச்சர்ட்.”.
“ அப்போ நீங்க கிளம்பலாம் . வந்ததுக்கு நன்றி. பாடிய போஸ்ட் மாடத்திற்கு அனுப்பிடுங்க. அப்போ நானும் கிளம்புறேன் என்றார் ரிச்சர்ட்.“
என்ன , அவ்வளவு தானா ரிச்சர்ட் ?? என்பது போல் இருந்தது எல்லோருடைய முகமும் . இன்ஸ்பெக்டர் உட்பட .
“ லேப் ரிசல்ட்ஸ் வந்ததும் நாளைக்கு நாம கொலையாளி முன்னாடி நிற்போம்.. என சிரித்தார் ரிச்சர்ட் “.
பின்பு முறைப்படி செய்ய வேண்டிய எல்லா போலிஸ் விஷயமும் செய்யப்பட்டு எங்களை வீட்டிற்கு போக சொல்லிவிட்டனர்.   நாங்களும் கொலையாளி யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாய் விடியலை நோக்கி காத்துக்கொண்டிருந்தோம். ஆனால் வினோத் மட்டும் சிறிது வருத்தமாக காணப்பட்டான் .
“ ஹே என்னடா ஆச்சி ...?? “ என்றாள் வயோ.
“ அவரு கெட்டவரு தான் , இருந்தாலும் என் அப்பா .. “.என கலங்கினான் .
” ஹே ... கமான், நாங்க இருக்கோம், இதுக்கு மேல உங்க அப்பா கம்பனிய நல்ல விதமா நீ தான் ரன் பண்ண போற “
“ ம்ம்ம்....”  என்று சத்தம் இறங்கிய தொனியில் பேசினான் வினோத் .
என் மனதிற்குள் இப்போது அகிலன் மேல் மட்டுமே சந்தேகமாய் இருந்தது .  மறுநாள் செய்தித்தாளை புரட்டிபார்த்த போது மிகவும் அதிர்ச்சி
“ பிரபல தொழிலதிபர் சங்கரபண்டியை கொலை செய்த அவர் அண்ணன் குமாரவேலுவை  டிடக்டிவ் ரிச்சர்ட் மூலமாக போலிசார் பிடித்தனர் “
அடுத்த நிமிடம் நேரில் சென்று  இன்ஸ்பெக்டரிடம் விசாரித்த போது அவர் நடந்ததை விவரித்தார்.
“ க்ளாஸ்ல இருக்கற ஸ்க்ராட்ச்க்கு கண்டிப்பா கையில இருக்கும் மோதிரம் தான் காரணமா இருக்கும் னு ரிச்சர்ட் அனுமானிச்சது சரியா இருந்தது. மேலும் குமாரவேலுவுடன் கைகுலுக்கும் போது மோதிரம் தன்னை காயப்படுதியதாய் அவர் குறிப்பிட்டார் .அப்போ நம்மை சுத்தி இருந்தவங்க யார் கையிலும் மோதிரம் இல்ல , அகிலன் உட்பட . மேலும் குமாரவேலு கைரேகையும் அந்த கிளாசில் இருந்த கைரேகையும் ஒத்து போய் இருந்ததுனால , குமாரவேலு தான் இந்த கொலையை செய்திருப்பார்னு ஒரு முடிவாகியது .  
ரிச்சர்டின் வியுகத்தை கண்டு பிரமித்தேன் . சரி அவர் ஏன்  அவரோட சொந்த தம்பியவே கொல்லனும் ??
எல்லாம் ஒருத்தரோட ஒருத்தர் வளர்ச்சி பிடிக்காம தான் . கிருஷ்ணனும் முனுசாமியும் அதை தான் சொன்னார்கள் .என்று முற்றுபுள்ளி வைத்தார் இன்ஸ்பெக்டர் .
எல்லா சடங்கும் முடிந்தும் வினோத் ஒரு மாதிரியாக இருப்பதால் மூவரும் ஊட்டிக்கு செல்லலாம் என முடிவெடுத்து செல்ல ஆரம்பித்தோம் . ஆனால் ஆண்டவன் என்ன முடிவு செய்யவிருக்கிறான் என எங்களுக்கு தெரியவில்லை  !!
CLICK HERE TO GO TO NEXT EPISODE - http://karthikanavugal.blogspot.in/2017/09/e07.html
 

Comments

Popular posts from this blog

பாடல்கள் பலவிதம் - Songs i love

" பாடல்கள் பலவிதம் “  இசை என்பது உலகின் மொழி . அத்தகைய மொழியில் குறிப்பாக தமிழ் பாடல்கள்  நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. அவை யாவும் மனநிலை மாற்றும் போதை வஸ்துக்கள் . நாம் பெரும்பாலும் ரசித்த , சிலர் ரசிக்க தவறிய பாடல்களின் உணர்வுகளை வெளியே எடுத்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.   பாடல்கள் பலவிதம் #1 Song link - https://www.youtube.com/watch?v=v8eUuzElvX4 “ தென்றல் வந்து தீண்டும் போது “ - அவதாரம் முதல் பாடல் இசைஞானியின் பாடல் . எத்தனையோ பாடல்கள் அவர் கடந்து வந்திருந்தாலும் இந்த பாடல் ஒரு பிளாட்டினம் கிரீடம் . இந்த பாடலை சிலாகிக்க, வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் வறட்சி ஆகி இதயம் அந்த பாடலில் லயித்துவிட்டது .  அது தான் “ தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ, மனசுல “ பாடல்.   கண் பார்வை அற்ற நாயகி ,தனக்காக நாயகனும் கண்ணைக்கட்டி கொண்டு கஷ்டப்படுவதை அறிந்து , அவளுக்கு கண்ணாக இருந்து தன்னை வழிநடத்தும்படி கேட்க , அந்த ஒரு பரிவின், ஆசையின் புள்ளியில் தொடங்குகிறது பாடல். ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையின் சாரம்சத்தை கொண்டு  அன்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் -1

அன்று மாலை எமிக்கு எதுவுமே சரியாய் நடப்பதாய் தெரியவில்லை.சிறிது நேரம் யோசித்தவள் தலை வலிக்கவே  யோசிப்பதை நிறுத்திவிட்டு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு கிளம்பி சென்று கொண்டிருந்தாள் . “ மேடம் இந்த புக்கு ரொம்ப நல்லா இருக்கும் ... வாங்கி படிங்க எல்லாருடைய விருப்பத்துக்கு ஏத்தா மாதிரியும் இங்க கம்மி விலையில் புத்தகம் கிடைக்கும் “ என எமியை மட்டுமே ஒருவாறு உற்று நோக்கி கொண்டே தன் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தான் அந்த வியாபாரி கிழவன். அந்த கிழவனை கடந்து சென்றவள் , ஒரு நிமிடம் நின்று அவனை திரும்பி பார்த்தாள். அவன் கண்கள் அவளை " வா வா "  என்றது . அவளும் அவனிடம் வசியப்பட்டது போல அவனிடம் ஈர்க்கப்பட்டு அவனருகே சென்றாள் . வானிலை கருப்பு மேகங்களாய் மாற , மற்ற பறவைகள் எல்லா இடத்திலும் பறந்து செல்லும் போது அங்கே வித்தியாசமாய் கூட்டமான அண்டங்காக்கைகள் வட்டமிட்டு அமர்ந்து கொண்டு எமியை உற்று நோக்கி சூழ்நிலையை மோசமாக போவதை உணர்த்தியது. “ வா எமி ...” “ என் பெயர் அவனுக்கெப்படி தெரியும் ?? ” என அதிர்ந்தாள் . “ எனக்கு எல்லாம் தெரியும் எமி ...! “ என சிரித்தான் அந்த நரைத்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் - 4

மெல்ல மார்க்கை நோக்கி நடந்து வந்த லீமர் வான்ட் , தன் சாத்தான் படைகளை கை காட்டி சைகையில் நிறுத்தினான் . இருவருக்கும் பயத்தில் இதய துடிப்பு உசேன் போல்டுடன் போட்டி போட்டு கொண்டு ஓடியது . லீமர் வான்ட் மெதுவாக தன் கைகளை மார்க்கின் கழுத்தின் மீது வைத்து அவனை தூக்க ஆரம்பித்த போது  மார்க் அலறினான் !! “ என்ன விட்டுடு ....” லீமர் . “ ஆமா ... அவன விடு “ என கதறினாள் எமி. “ ஹாஹஹாஹாஹா..... “ என லீமர் சிரித்த போது அங்கே  அந்த மின்னல் வெளிச்சத்தில் அவன் கொடூரமாய் தெரிந்தான் . “ விட்டுடறேன்..... ஆனா நீ எனக்கு வேணும் எமி ...” என மீண்டும் வில்லத்தனமாக சிரித்தான் லீமர். அவனின் இறுக்கமான பிடியிலும் அந்த மழையிலும் மார்க்கால் வாயை திறக்க முடியவில்லை . “ சரி ... அவன விட்டுடு ... என்ன எடுத்துக்கோ ...” “ தட்ஸ் மை கேர்ள் ....கம் டு பாப்பா “ என மறு கையால் எமியை கழுத்தோடு தொட்டு தூக்கினான் லீமர் . அப்படி தூக்கும் பொழுது லீமரின் நகம் பட்டு எமிக்கு லேசாக கீறி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது .  இருவரையும் ஒரே மூச்சில் தின்றுவிட தன் நீண்ட நாக்கை தொங்க போட்டு எமியை நெருங்க ...