மூவரும் எங்களுக்கு பிடித்தமான உடைகளை அணிந்து கொண்டோம் . நான் வெள்ளை நிற சூட் , வயோ அவளே வடிவமைத்த ஒரு ஆடையை அணிந்திருந்தாள். டாக்டர் கொடுத்த மாத்திரையில் வயோ இப்போது குனமடைந்திருந்தாள். வினோத் ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்டில் இருந்தான் .
என்ன கைஸ்... ரெடி யா ??? என நான் கேட்கவும் மணி சரியாக ஆறு ஆகி இருந்தது. எல்லாரும் வீட்டை விட்டு வெளியே வர, பழைய பென்ஸ் அழாகாக ரீமாடல் செய்து நான் விரும்பியபடி ஷெட்டிலிருந்து அனுப்பி வைத்திருந்தான் நண்பன் . ஏற்கனவே கொடுத்த வேன் அங்கேயே பத்திரமாக இருக்கிறது .
எல்லோரும் வண்டியில் ஏற, நான் ஓட்ட தொடங்கி பார்ட்டி நடக்கும் இடத்தை அடைந்தோம் . காரை பார்க் செய்ய இடம் கூட இல்லாமல் அவ்வளவு கூட்டமாய் தவித்து போய் ஒரு வழியாக பார்க் செயும் பொது தான் கவனித்தோம் , வான வேடிக்கைகள் ஆரம்பித்து வானமே வர்ணஜாலமாய் ஜொலித்தது . சிகப்பு கம்பள விரிப்புக்குள் காலடி எடுத்து முற்பட்ட போது அந்த காவலாளி தடுத்து எங்களிடம் இன்விடேஷன் கேட்டான் .
“ ஹே ... நான் யாரு தெரியும்ல... சங்கரபாண்டியோட பையன் . “ என வினோத், காவலாளியை முறைத்த போது முனுசாமி ஓடி வந்து காவலாளியை கண்டித்து “ வினோத் ஐயா ... மன்னிச்சிடுங்க.. அவன் புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கான். இன்விடேஷன் இல்லதாவங்கள உள்ளே விட கூடாதுனு பெரிய ஐயா சொல்லி இருக்காங்க . நீங்க உள்ளே போங்க .”
“ ம்ம்ம் ...” அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு மூவரும் உள்ளே செல்ல, கூட்டம் அலை மோதியது . முனுசாமி தான் வினோத்துக்கு எல்லாம் . வீட்டில் நடக்கும் எல்லா விஷயங்களும் அவனுக்கு சொல்வது அவர் தான். ஊரில் உள்ள அனைத்து பெருந்தலைகள், தொழிலதிபர்கள், அவர் பிள்ளைகள், பத்திரிக்கையாளர்கள் என பலதரப்பட்ட பெரிய மனிதர்கள் உள்ளே உலவி கொண்டிருந்தார்கள் .
“ யாக்கை திரி காதல் சுடர் அன்பே ... “ என பாட்டில் வரும் காட்சிகள் போல அந்த இடமே கூத்தும் கும்மாளமாய் இருந்தது .
“ சார் ... ட்ரிங்க்ஸ் ??? “ என வைட்டர் கைகளில் கண்ணாடி கோப்பைகளில் மது ஊற்றப்பட்டு இளித்து கொண்டிருந்தது .
“ சாரி ... நோ தேங்க்ஸ் ...” என அங்கிருந்த வேறொரு வைட்டர் கோப்பையில் இருந்த பழரசத்தை குடித்துக்கொண்டு பொறுமையாய் உள்ளே சுற்றி நடக்க ஆரம்பித்தேன்.
வினோத்தும் வயோவும் அந்த தருணத்தில் மிகவும் சந்தோஷமாக இருக்கவே, இருவரும் நடனமாட தொடங்கி இருந்தார்கள்.
“ ஹே கைஸ் .. ஹாவ் திஸ் ... என அவர்களிடம் இரண்டு மைக்ரோபோனை திணித்தேன் .”
எங்களை வித்தியாசமாய் பார்த்தனர் இருவரும் .
“ பார்ட்டில ஜாலியா இருக்கலாம்னு வந்துட்டு , இங்கயும் வேவு பார்க்க போறோமோ ?? ” “ ஒ மை காட் ! “ என சலித்து கொண்டாள் வயோ.
“ எல்லா நம்ம நல்லதுக்கு தான் சொல்றேன் . ஹாவ் திஸ் ஆன் யுவர் இயர்ஸ் “.
“ சரி...நான் அப்பிடியே உள்ள ஒரு ரவுண்ட் போயிட்டு வரேன் . நான் கேட்கும் போது பதில் சொல்ல தயாரா இருங்க .” என்று நான் கிளம்பினேன் .
“ ம்ம்ம்... கமான் வயோ லெட்ஸ் டான்ஸ்... என இருவரும் ஆட ஆரம்பித்தார்கள் “.
நான் என்னுடைய வேலையை ஆரம்பித்தேன். எல்லாவற்றையும் நோட்டமிட ஆரம்பித்தேன் . என் உள்ளுணர்வு என்றுமே தப்பாது. அது ஏதோ நடக்கும் என என் மூளைக்குள் மணியடித்து கொண்டிருந்தது . எல்லாரும் ஒருப்பக்கம் கோப்பைகளோடு மது அருந்தி பேசி கொண்டிருக்க அவர்களின் வாரிசுகள் நடனம் என ஒரு பக்கத்தில் பெண்களோடு குதித்து கொண்டிருந்தன .
அங்கே ஒரு இடத்ததில் சங்கரபாண்டியும் கிருஷ்ணனும் மெயின் சோபாவில் உட்கார்ந்து நிறைய பேருடன் பேசிக்கொண்டிருந்தார் .
வினோத் சொல்வது சரி தான் . தன் மகனை பற்றி கவலையும் படுவதில்லை . முதலில் அவன் இங்கு வந்திருக்கிறான் என்பது கூட அவருக்கு தெரியாது போலும். எந்நேரமும் பிஸ்னஸ் பிஸ்னஸ் என்று பணத்தின் பின்னாலே அலைகின்றார் . வாழ்கையில் அப்படி என்ன சாதித்து விட போகிறார் என எண்ணி கொண்டிருந்தேன் . அவர்கள் பேசுவதை பார்த்தால் ஏதோ முக்கியமான விஷயம் பேசுவது போல் தோன்றியது .
அருகே சென்று கேட்கலாம் என்றாலும் அந்த வான வேடிக்கை சத்தமும் உள்ளே கத்தி கொண்டிருக்கும் மட்டுமே சத்தமும் நின்றால் மட்டுமே சாத்தியம். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என தெரியாவிட்டாலும் சங்கரபாண்டியுடன் பேசிக்கொண்டிருக்கும் ஆட்கள் யார் என தெரிய ஆவலாய் இருந்தேன் .
“ ஹெலோ .. மச்சி ...நான்.. தான் ... “ மைக்ரோபோனில் வினோத்தை தொடர்பு கொண்டேன் .
“ மச்சி... சரியா கேக்கல ... நீ ரெஸ்ட் ரூம் வா..” இதுவும் எனக்கு அந்த சத்தத்தில் ஒரு மாதிரியாக தான் கேட்டது .இருவரும் ரெஸ்ட் ரூமில் குழுமினோம் .
“ என்னடா ?? “
“ மச்சி .. உங்க அப்பா பக்கத்துல உக்கார்ந்துக்கிட்டு இருக்க மூணு பேர் யாரு?? “
“ ஏன் கேக்குற ..?? “
“ மரியா பேங்க் கொலை விஷயமா எதாவது க்ளூ கிடைக்குமானு தான் . “
“ லூசு ஆகிட்டியா நீ ... அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?? அண்ட் எனக்கு யாரையும் தெரியாது அங்க இருக்க என் சித்தப்பாவ தவிர... மத்த ரெண்டு பேரு ...?? நீ வேணா முனுசாமி கிட்ட கேளு அவன் சொல்லுவான் . என்ன ஆள விடு.” என்று மீண்டும் ஜோதியில் ஐக்கியமாக ஆரம்பித்தான் . தவிர இன்று சற்று ஓவராக குடித்திருந்தான் .
முனுசாமியிடம் விசாரித்ததில் மற்ற இரண்டு பேரில் ஒருத்தர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பாலா மற்றும் வேறொருத்தர் சுப்பிரமணி என தெரிய வந்தது. மூவரும் பால்ய சிநேகிதர்கள் என்பது கூடுதல் தகவல் .
பாட்டுச்சத்தமும் பட்டாசு சத்தமும் நிறைவைடைந்தது .
“ லேடிஸ் அண்ட் ஜென்டில் நம்முடைய சர்கிள்ல புதுசா என்னோட டெண்டரையும் பிடிச்சி திறமையா பிஸ்னஸ் செய்து கொண்டிருக்கிற யங் டேலன்ட் மிஸ்டர் அகில், அகில் இண்டஸ்ட்ரீசை பாராட்டவும் அதுமட்டுமில்லாம நாம எல்லாரும் சந்தோஷமா இருக்க நான் புதுசா தொடங்கவிருக்க கம்பனிக்கு உங்க பங்களிப்பு வேணும்னு தெரிவிக்க தான் இந்த பார்டி ...” “ சீயர்ஸ் “ ... என சந்தோஷமாய் மது கோப்பையை உயர்த்தி எல்லோரையும் பார்த்து கத்தினார் சங்கரபாண்டி.
அவரை அருகே பார்த்து எதையோ கேட்க வேண்டும் என பரபரத்தது என் கால்கள் . கையில் பழரச கோப்பையுடன் வேகமாக நான் அவரை பின் தொடர, கால் தடுக்கி அவர் மேல் விழும் சமயம் தப்பான நேரத்தில் சரியாக அவர் திரும்பினார் .
ஜூஸ் முழுவதும் கொட்டி இருவர் சட்டையும் கறையாகியது.
“ சாரி சார் ... சாரி .. ஐயம் டெரிப்பலி சாரி சார் “.
“ இட்ஸ் ஓகே .. “ என்றார் கூலாக “ஐ வில் வாஷ் இட்“..
என்னடா இப்படியாகி விட்டதே என என் மனம் பதைபதைக்க, அதைவிட கொடுமையாய் வினோத் ஓவராக குடித்திருந்து அங்கே வயோவிடம் பிரச்சனை செய்து கொண்டிருந்தான் .
“ ஒ ஷிட் .. “ .என அவர்களை நெருங்கி , “ வயோ நாம இருந்தது போதும் நீ வினோத்த கூட்டிட்டு கார்ல வெயிட் பண்ணு நான் ஷர்ட் வாஷ் பண்ணிட்டு வரேன்“.
சட்டையை வாஷ் செய்து விட்டு அந்த கூட்டத்திலிருந்து வெளியே வர பத்து நிமிடம் ஆனது .காரில் வினோத் எதோ புலம்பி கொண்டிருந்தான் . வையோ மிகவும் எரிச்சலடைந்தாள் . உள்ளே வந்து காரை ஸ்டார்ட் செய்து மூவரும் வீட்டிற்கு கிளம்பினோம்.
“ ச்ச... இப்பிடி நடக்கும் னு தெரிஞ்சா நான் வந்திருக்கவே மாட்டேன் .” என்றாள்
“ சொப்பர் பாழ்டி “ என குழறினான் வினோத் .
நான் எதுவும் பேசவில்லை நேராக வீட்டை அடைந்து மூவரும் குளித்துவிட்டு காபிகுடித்து தெளிவான போது மணி இரவு பத்தைத்தொட்டிருந்தது.
“ ஐ யாம் சாரி வயோ.... “
“ ம்ம்ம்ம் .... பரவாயில்லை.. ஆனா இந்த மாதிரி இன்னொரு தடவை அந்த சூழ்நிலைக்குள் என்னை தள்ளாதே .”
நான் அமைதியாக படுத்தப்படி யோசித்து கொண்டிருந்தேன் .
“ ஹே கார்த்தி .. என்னாச்சி ... பார்ட்டியை என்ஜாய் பண்ணியா ?? “
பொறுமையாக எழுந்து பேச ஆரம்பித்தேன் .
“ இப்போ நான் சொல்ல போகுற விஷயம் கண்டிப்பா உங்களுக்கு அதிர்ச்சியா தான் இருக்கும். பட் நானும் இந்த மாதிரி இருக்க கூடாதுன்னு தான் நினைக்கிறேன் “.
என்ன சொல்ல போகிறேன் என யோசித்து என் வாயை பார்த்து கொண்டிருந்தனர் வயோவும் வினோத்தும் .
“ மரியா பேங்ல இறந்து போன வட இந்திய பெண் அகில் இண்டஸ்ட்ரீஸ் ஓனர் மிஸ்டர் அகிலோட பி.ஏ. “
“ நேத்து டாக்டர் தன்னோட டி.என்.ஏ வும் இறந்து போன பெண்மணியோட டி.என்.ஏ வும் ஒரே மாதிரி இருக்குனு சொன்னங்க ஞாபகம் இருக்கா ? “
“ஆமா ... இப்போ எதுக்கு அது ?? “
“சொல்றேன் ...ஒரு வேளை ரெண்டு பேரோட நினைவலைகள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் டாக்டர் கனவில் வந்து தன்னை தள்ளிவிடுகிற ஒரு மொட்டையான நிழல் உருவம் தான் கொலையாளினு வச்சிப்போம். அதுக்கு ஏத்த மாதிரி போஸ்ட் மாடம் ரிபோர்ட்ல அந்த வட இந்திய பெண் பின் மண்டைல வெட்டுப்பட்டு ரத்தம் கசிந்து தான் இறந்து இருக்காங்க, விச் மீன்ஸ் கொலையாளி அவங்களை தள்ளிவிட்ட போது எதாவது மேல் மோதி இறந்திருக்க மட்டுமே வாய்ப்பு உண்டு “
“ சரி ... ஆனா அந்த கொலையாளி யாரு ??? “
“ வினோத் அப்பா சங்கரபாண்டியன் ! “ என்றதும் இருவர் கண்களும் விரிந்தன !
“ ஆர் யு மேட் ?? அவரு மொட்டையா இருக்கற காரணத்துக்காக மட்டுமல்ல , எப்படி சொல்ற ?? “ என்றாள் வயோ.
“ என்னோட கணிப்பு சரியா இருந்தா , அன்றைக்கு நாம மரியா வங்கியில கொள்ளையடிக்க திட்டம் போட்டுக்கிட்டு இருந்தப்போ , மழை வந்ததுனால நீ என்னை கதவை மூட சொன்ன ஞாபகம் இருக்கா ?? “
“ ஆமா ...அதுக்கும் ...இதுக்கும் ..? “
“ அப்படி நான் கதவை மூட வெளியே எட்டி பார்த்த போது பக்கத்துக்கு தெருவுல சங்கரபாண்டி அப்பத்தான் தன்னோட கார்ல ஏறி போனாரு . பொதுவா நம்ம மரவீட்டுக்கு ரெண்டு வழி இருக்கு , ஒன்னு நாம சீக்ரெட்டா உள்ள போகுற வழி , இன்னொன்னு நார்மலான வழி , அன்றைக்கு சாயங்காலமே நான் வீட்டை தொடச்சிக்கிட்டு இருக்கும் போது வெளிய சேரும் சகதியுமான ஷு காலடி தடங்களை பார்த்தேன் . அந்த தடங்கள் நம்மளோட ஷுஸ் கிடையாது , அதுவும் இல்லாம அது அழுத்தமா வைக்கப்பட்டிருந்து, அண்ட் இம்பார்டன்ட்லி அது ஈரமா இருந்தது . அகைன் விச் மீன்ஸ் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நம்ம பேசுறத ஒட்டு கேட்டுருக்காரு சங்கரபாண்டி “.
இருவரும் உறைந்து போய் என்னை பார்த்து கொண்டிருந்தனர்.
“ மழை காரணமா அவர் வரும் போது சேரும் சகதியுமா நம்ம வீட்டு முன்னாடி இருக்கவே அவர் ஒட்டு கேட்டதையும் அந்த ஷு காட்டி கொடுத்திடுச்சி.“
“ சரி, அது அவர் ஷு தான் எப்படி சொல்ற ?? “
“ இதுக்காக தான் நான் வேணும்னே இன்னிக்கு பார்ட்டில அவர் மேல ஜூஸ் ஊத்த அது அவர் ஷு ளையும் பட்டது . அவர் ரெஸ்ட் ரூம் நடந்து போகும் பொது அழகா ஈரமான அவர் காலடி தடங்கள்ள தெளிவா அந்த மார்பிள்ஸ் ல தெரிஞ்சிதது. ரெண்டும் ஒரே ஷுவோட காலடி தடங்கள் தான் . “
“ ஆனா இத வச்சி மட்டும் ?? “
“ ம்ம்ம்ம் ... உங்களை கார்ல வைட் பண்ண சொன்ன நேரத்துல நான் ரெஸ்ட் ரூம் பின்னாடி போய் சங்கர பாண்டி க்காக வெயிட் பண்ணேன் . அவர் வந்ததும் “மரியா பேங்க்ல கொலை பண்ணது நீ தான ?? அப்பிடின்னு சும்மா கத்தின்னேன். உடனே அவர் பதட்டமாகி சத்தம் எங்க வருதுன்னு தேட ஆரம்பிச்சிட்டார். கோபத்துல ஒரு கண்ணாடியும் உடைத்தார். இந்த கோபமே கொலைய அவர் தான் பண்ணாருனு காட்டி கொடுக்குது. “
“ சரி ... சங்கர பாண்டி ஏன் நம்ம இருக்கற இடத்துக்கு வரணும் ? “.
“ இன்னிக்கு நடக்கற பார்ட்டிக்கு நமக்கு இன்விடேஷன் கொடுக்கவா இருந்திருக்கலாம்.. “
“ சரி அந்த வட இந்திய பெண் ஏன் கொல்லப்படனும் ?? “
“ அகில் டெண்டர்ல இடத்தை பிடிச்சதும் மீடியா புல்லா அவர பத்தி கவர் பண்ணவே, இது பிடிக்காம அகில் பி.ஏ கிட்ட டெண்டருக்கான டாகுமென்ட்ஸ வாங்க நடந்த சண்டையப்போ அந்த பெண்ணை தள்ளிவிட அவங்க எதாவது கூரிய சுவர் முனையில் இடித்து இறந்திருக்கலாம் . உடனே அதை லாவகமா நம்ம தலைல கட்டுனா மாதிரி நம்ம திட்டத்த ஒட்டு கேட்டத நினைவுக்கு வந்து பாடிய நாம வேன் கிட்ட இருக்கும் போது , உள்ளே இருந்த பேக்ல பிணத்தை போட்டுட்டு மேல பணத்தை தூவி மூடி தப்பிச்சி இருக்காரு சங்கரபாண்டி.”
“ இப்பவும் அந்த கொலை விஷயம் தெரியாம மீடியா கிட்ட மறைக்க மறக்க வைக்க தான் இந்த பார்ட்டி !! “
“ ஆனா என்னோட கேள்வி என்னனா அவர் பையன் வினோத், பேங் திருட்டுல சம்பந்தப்பட்டு இருக்கானு தெரிஞ்சும் அவர் ஏன் பிணத்தை நம்ம தலைல கட்டனும்?? “ என்றேன் .
“ அவருக்கு காசு பிஸ்னஸ் காக ஏத வேணாலும் செய்வாரு டா .. இதுல ஆச்சிரியப்பட ஒன்னும் இல்லை , இந்த பைத்தியக்காரத்தனத்துனால தான் எங்க அம்மாவும் ரொம்ப வருஷம் முன்னாடி தற்கொலை செய்துகிட்டாங்க. “ என கண் கலங்கினான் வினோ .
“ சரி ... நாம இப்போ இதை இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லி எங்க அப்பாவ, ச்சை... அந்த பிஸ்னஸ் வெறி பிடிச்ச நாய பிடிச்சி கொடுக்கலாமா ?? “
“ பொறு ... வினோ .. ஏன்னா இதுல நம்ம திருட்டும் இருக்கு. “
“ நாளைக்கு எல்லாம் பேசிக்கலாம். தூங்குவோம் “ என விளக்கை அணைத்தேன் .மறுநாள் காலை நடக்க போகும் விஷயம் தெரியாமல் !
CLICK HERE TO GO TO NEXT EPISODE - http://karthikanavugal.blogspot.in/2017/09/e06.html
CLICK HERE TO GO TO NEXT EPISODE - http://karthikanavugal.blogspot.in/2017/09/e06.html
Comments
Post a Comment