மழை நின்ற காலையாய் சூரியன் எட்டி பார்க்க, பொறுமையாக நான் எழுந்தேன். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பது தான் முதலில் என் நினைவில் தேங்கி நின்றது .
வினோத்தையும் வயோவையும் எழுப்பினேன் .
என்ன அதுக்குள்ளே விடிஞ்சிருச்சா...?? ஆஆஆ .. என கொட்டாவி விட்டான் வினோ .
“ ம்ம்ம்ம்... எழுந்துட்டேன் “ என மூன்றாவது முறையாவதாக அலாரமை ஆப் செய்துவிட்டு படுத்தாள்.
காப்பி கோப்பையோடு வெளியே வந்து நின்று மூச்சை நன்றாக இழுத்து வெளியே விட கீழே நியூஸ்பேப்பர் கிடந்தது . முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துடன் கீழ் கண்ட வாசகம் எழுதப்படிருந்தது .
“ அகில் இண்டஸ்ட்ரீஸ் vs எஸ்.பி இண்டஸ்ட்ரீஸ் பலப்பரிட்சை “
“ ம்ம்ம்.. என்னடா வினோத்... உங்க அப்பா கம்பனிக்கும் வேற ஏதோ கம்பனிக்கும் போட்டியாமே ??... “ என்றேன் .
“அவரை அப்பானு சொல்ல கூட என் வாய் கூசுதுடா ... எப்போ பார்த்தாலும் பிஸ்னஸ் பிஸ்னஸ்னு... ச்சை....”
“ சரி ... சரி... வா கிளம்புவோம் ”
எல்லோரும் குளித்து முடித்து மருத்துவமனையை அடைய சரியாய் மணி ஒன்பதை தொட்டது . வயோ வேறு தும்பிக்கொண்டிருந்தாள். அவளையும் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும் .
“ வயோ.... இன்ஸ்பெக்டர் மெயில்ல எந்த ப்ளோர் ல வந்து காபி வாங்கிக்க சொன்னாரு ?? “
“ ரெண்டாவது ப்ளோர்... “ “ஹச்“ என மீண்டும் தும்பினாள் . சீதோஷ்ணநிலை மாற்றம் காரணமாக அவளுக்கு சளி பிடித்திருந்தது .
போன் கத்தியது.
“ ஹெலோ கார்த்திக் ...?? “
“ ஆமா சொல்லுங்க ... நீங்க ...? “
“ நான் ஏட்டு சந்தானபாண்டி பேசுறேன்.. “.
“ சொல்லுங்க சார் ... அந்த போஸ்ட் மாடம் காப்பி என்கிட்ட ஒன்னு இருக்கு.... நான் இப்போ போர்த் ப்ளோர் ல இருக்கேன் . நீங்க வேற எங்கயாவது போக போறீங்கனு தான் கால் பண்ணேன் ... கொஞ்சம் சீக்கிரம் வாங்க .. எனக்கு வேலை இருக்கு “ .
“ சரி சார் .. நாங்க வந்துட்டே இருக்கோம் . “
மூவரும் லிப்டில் போர்த் ப்ளோர் சென்றவுடன் வயதான காக்கி சட்டை அணிந்த ஒருவர் திருத்திருவென முழித்து கொண்டிருந்தார் .
அவர் தான் என அடையாளம் கண்டு அவரிடம் அந்த போஸ்ட் மாடம் ரிபோர்ட் காபியை வாங்கிவிட்டு சென்று கொண்டிருந்தபோது ஒரு நர்ஸ் எங்களை இடைமறித்து
“ சார் .. நீங்க இப்போ எங்க போறீங்க ...? “
“ கிரௌண்ட் ப்ளோர் ...ஏன் ?? “
“ இல்ல சார் ... நான் அவசரமா பிப்த் ப்ளோர் போகணும் . ஒரு ஆபரேஷன்... டாக்டர் உடனடியா வர சொன்னார் . கீழ இந்த ரிபோர்ட்டை ரெண்டாவது ப்ளோரில் டாக்டர் ஜோஸ்பின் கிட்ட கொடுத்து விட முடியுமா ?? ப்ளீஸ் ... என கெஞ்சினாள்.
“ ஒ .. குட்.. டாக்டர் ஜோஸ்பின் எங்களுக்கு தெரிஞ்சவங்க தான் . ஐ வில் டேக் கேர் . பை த வே... எந்த ரூம் ...?? “
“ டூ ஏ “
மூவரும் மகிழ்ச்சியாக லிப்டில் ரெண்டாவது ப்ளோரில் இறங்கி டாக்டர் ரூமை நோக்கி சென்று கொண்டிருந்தனர் .
மூவரும் டூ ஏ ரூமை அடைந்து கதவை திறந்தோம் . உள்ளே ஜோஸ்பின் எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தார் .
“ அக்கா ... “
எங்களை பார்த்து புன்னகைத்துவிட்டு உட்காரும்படி சைகை செய்து விட்டு அவரும் தன் நாற்காலியில் வந்து அமர்ந்தார் .
“ ம்ம்ம்ம் .. சொல்லுங்க என்ன விஷயம் ? “
“ ஹச் “ என தும்பினாள் வயோ.
“ ஒ... இதான் பிரச்சினையா ?? “
“ இதுவும் ஒரு பிரச்சனை தான் “ என மெல்ல சிரித்தேன் .
“ நாங்க ஒரு கேஸ் விஷயமா வந்தோம் . அண்ட் இந்த ரிபோர்ட்ட ஒரு நர்ஸ் உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க. ” என ரிப்போர்ட்டை நீட்டினேன் .
அதை வாங்கி பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார் .
“ ஒ மை காட் ! “
“ என்னாச்சி அக்கா ?? “ என்று பதறினோம் மூவரும் .
“ நான் ஒரு டி.என்.ஏ என்னும் உடம்பின் முக்கியமான மூலக்கூற்றை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன்னு உங்க கிட்ட சொன்னேன் அல்லவா??“
“ஆமா ...“ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
“ அதற்காக நான் நிறைய ரத்த சாம்பிள்கள் எடுத்து ஆராய்ச்சி செய்து வருகிறேன் . அதுல இறந்து போன அந்த பெண்மணியின் ரத்தத்தையும் சோதனை செய்தேன் . அன்னிக்கு உங்க கூட ரெஸ்ட்டாரண்ட்ல லைட்டா ஜுரமும் அடிக்கடி தும்பிக்கிட்டே இருந்ததுனால என்னோட சாம்பிள் ப்ளட் டெஸ்ட் ஒன்னு எடுத்தேன் . இப்போ .... “ என நிறுத்தினார்.
“ இப்போ ???“
சிறிது திகைத்து அவர் மேலே சொல்ல காத்திருந்து மௌனமானோம்.
“ இப்போ நீங்க கொண்டு வந்த ரிப்போர்ட்ல என்னோட ரத்த முடிவுகளும் டி.என்.ஏ கூற்று அமைப்பு முறைகளும் இருக்கு . நான் ஆராய்ச்சி பண்ண அந்த பெண்ணோட டி.என்.ஏ கூற்றும் ஒரே ஆர்டர்ல இருக்கு . இத்தனைக்கும் இறந்தவங்க ஒரு வட இந்திய பெண்.இட்ஸ் ய மெடிக்கல் மிராக்கள் இன் ஹிஸ்டரி. “
“ சோ ... இதானால உங்களுக்கு எதாவது பிரச்சனை வருமா அக்கா ??“
“ தெரியல ... ஆனா ... இது புதுசா இருக்கு. “
“ ம்ம்ம்ம் ... இதை பற்றி நான் இணையத்தில் படிச்சிருக்கேன் அக்கா . அதாவது நெல்சன் மண்டேலாவோட டி.என்.ஏ அமைப்பும் நம்ம நாட்டுல ஏதோ ஒரு கிராமத்துல இருக்கிற ஒரு அண்ணனுக்கும் ஒரே மாதிரி இருந்திருக்கு . இத்தனைக்கும் அவர் இதுவரையும் எந்த வெளியூருக்கும் போனதில்லையாம் ! “ என்றேன் .
இப்போது எல்லோர் பார்வையும் விரிந்து என் மேல் இருந்தது . டாக்டர் அக்காவும் என்னை ஆச்சிரியமாய் என்னை பார்த்தார் .
“ ஆனா அதே சமயம் கொஞ்ச நாளாகவே எல்லாமே எனக்கு தேஜாவு மாதிரியே இருக்கு .” என கண்ணாடியை கழற்றினார்.
“ தேஜாவு “ னா என்ன ?? என்றாள் வையோ
“ தேஜாவுனா நம்ம புதுசா பார்க்கிற விஷயங்கள் எல்லாம் ஏற்கனவே கனவில் வந்த மாதிரியோ அல்லது நமக்கு பழக்கப்பட்டா மாதிரி தோன்றும் . இது பெரும்பாலும் சிலருக்கு இருக்க கூடியது தான் , ஆனாலும் கொஞ்ச நாளாவே என் கனவுல ஒரு மொட்டையான நிழல் உருவம் என்னை நெருங்கி வந்து தள்ளுகிற மாதிரி தோணுது . கரக்டா அந்த நிலை வரும் பொழுது நான் தூக்கத்தில் இருந்து விழித்து கொள்கிறேன் . ஒரு வேளை இரவு முழுவதும் சில நேரம் ஆராய்சிக்காக ஈடுபடுவதால் அப்பிடி தோன்றுகிறதோ என்னவோ !!! ஒன்றும் பிடி பட மாட்டுது !! “
மூவரும் டாக்டர் அக்காவை வித்தியாசமாய் திகைத்து பார்க்க ஆரம்பிதோம்.
“ ஹே .. பசங்களா ... என்ன ஆச்சி ??.... சும்மா எனக்கு நடந்ததை சொன்னேன் அவ்வளவு தான்.” “ ஐ யாம் ஆல்ரைட் . சரி வயோக்கு என்னாச்சி “ ??
இப்பொழுது தான் மூவரும் நார்மலானோம். வயோவை முழுவதும் செக் செய்து மாத்திரைகள் எழுதி கொடுத்தார் .
“ சாதாரண சீதோஷ்ணநிலை மற்றம் தான் . சீக்கிரம் சரி ஆகிடும் . சரி ஒரு நாள் வீட்டுக்கு வாங்க கண்டிப்பா ! “
“ டக் டக் .. “ கதவு தட்டும் சத்தம் கேட்டது.
“ எஸ் ... கம் இன் ... “என அக்கா சொன்னதும் நாங்கள் மூவரும் கதவை நோக்கி பார்த்தோம் .
கதவு திறந்து ஒரு நாற்பது வயதில் வழுக்கை விழாத நரைத்த முடியோடு அந்த பிரெஞ்சு தாடி வைத்த முகம் மட்டும் எட்டி பார்த்தது.
“ ஒ... ரிச்சர்ட்...எக்ஸ்க்யுஸ் மீ. ஐ யாம் சாரி . ஜஸ்ட் ஒரு பைவ் மினிட்ஸ் .. வெளிய வெயிட் பண்ணுங்க . “
ஏதும் பேசாமல் அந்த முகம் புன்னைகத்து விட்டு தலையை வெளியே எடுத்தது .
“ அக்கா... அவரை....... “ என யோசித்துகொண்டே இழுத்தேன் .
“ அவர்தான் ரிச்சர்ட் . மிகப்பெரிய டிடக்டிவ். கிட்ட தட்ட ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி . ரொம்ப நேர்மையான மனுஷன் . பட் கொஞ்ச காலமா அவரோட பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பி எல்லா விஷயத்திலிருந்தும் தள்ளி இருக்கார் . அண்ட் நீங்க ஏதோ கேஸ் டீட்டைல்ஸ்க்காக வந்திங்களே.... இந்த மாதிரி விஷயங்கள அவர் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவார் . பை தி வே அவரு அவங்க அம்மாக்காக தான் இப்போ வந்திருக்கார் . “
“ ஏன் அவங்க அம்மாக்கு என்னாச்சி ?? “ இது வினோ .
“ எதோ ஒரு விபத்துல அவங்க அம்மா மனநிலை சரி இல்லாதவங்களா ஆகிட்டாங்க. அவங்களை இங்க வச்சி தான் நல்லா பாத்துகிட்டு இருக்காரு . அநேகமா இப்போ அவங்களுடைய மனநிலை முன்னேற்றத்த பற்றி கேக்க தான் வந்திருக்காருன்னு நினைக்கிறேன். “ “சோ .. இப் யு டோன்ட் மைன்ட்....“
அதை புரிந்து கொண்டு ... “ சரி அக்கா ... அப்போ நாங்க வரோம் “ என்றோம் .
“ வயோ... மாத்திரைய மறக்காம சாப்பிடு “ என்று சிரித்தார் .
நாங்கள் வெளியே வந்ததும் ரிச்சர்ட் உள்ளே சென்றபோது எங்களை பார்த்து புன்னகைத்தபடி சென்றார் . மூவரும் எங்கள் மரவீட்டை அடைந்தோம் . மனதில் நிறைய குழப்பத்தோடு அடுத்து என்ன செய்யபோகிறோம் என தோன்றிய வேளையில் இன்ஸ்பெக்டர் போன் செய்தார் . எல்லோருக்கும் கேட்கும் படி லவுட்ஸ்பீக்க்ரை ஆன் செய்தேன் .
“ ஹெலோ ... கார்த்திக் ... போஸ்ட் மாடம் காப்பி வாங்கிட்டீங்களா ??“
“ ம்ம்ம் வாங்கிட்டோம் சார். “
“ சரி... உங்களால முடிஞ்ச இன்பர்மேஷன கொஞ்சம் சீக்கிரமா கண்டுபிடிச்சி அனுப்ப பாருங்க “
“ ஓகே சார் .. கண்டிப்பா ... வி வில் டூ அவர் பெஸ்ட்.“
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அனைவரும் டையார்டாக சோபாவில் படுத்த வண்ணம் டிவியை ஆன் செய்து பார்த்து கொண்டிருந்தோம் .பேங்கில் நடந்த கொலை மற்றும் கொள்ளை பற்றியே செய்திகள் வந்தது .
“ மச்சா ... ஒரே டென்சனா இருக்குடா ... எப்ப பார்த்தாலும் கேஸ் கேஸ் னு... வீ நீட் ய ப்ரேக் “ என்றேன் .
வயோ என்னுடன் ஹைப்பைவ் செய்தாள்.
“ சரி ... சாயங்காலம் எங்க அப்பா ஒரு பார்ட்டி குடுக்கறார் . என்ன தான் எனக்கு அங்க அவரை பார்க்கவும் அதில் கலந்து கொல்ல விருப்பம் இல்லை என்றாலும், உங்களுக்காக எல்லாரும் போகலாம். “
“ சியர்ஸ்... “
எல்லோரும் சந்தோஷத்தில் கத்த......நான் மட்டும் வேறு சில திட்டங்கள் வைத்து கொண்டு கத்தினேன் .
CLICK HERE TO GO TO NEXT EPISODE - http://karthikanavugal.blogspot.in/2017/09/e05.html
CLICK HERE TO GO TO NEXT EPISODE - http://karthikanavugal.blogspot.in/2017/09/e05.html
Comments
Post a Comment