Skip to main content

மெல்ல கொல்வேன் - E01

                 “ மெல்ல கொல்வேன் ”


மெதுவாக காற்று வீசும் இதமான நள்ளிரவில் அந்த கருப்பு நிற வேன், சிறுத்தைப்போல் சீறி பாய்ந்து கொண்டிருந்தது . நாய்களும் கத்தி ஓய்ந்த வேளையில் அந்த வேகம் அவைகளை மேலும் அச்சுறுத்தியது. நான் தான் வண்டியை செலுத்தி கொண்டிருக்கிறேன்.
“ மணி..... மணி...... மணி....   உம்மா ....” என மங்காத்தா அஜித் பாணியில் வயோலினா  தன் முன்னே இருந்த பேக்கில் இருந்து ஒரு சில நோட்டுக்கட்டுகளை எடுத்து முகர்ந்து சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருந்தாள் .
நான் கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்து மெலிதாக புன்னைகத்து கொண்டேன் .
“ வி ஹாவ் டன் இட் ....”.... என சந்தோஷத்தில் கத்திக்கொண்டே வயோலினாவை கட்டிபிடித்தான் வினோத்.
“ என்னால நம்பவே முடியல கார்த்தி ... யு ஆர் ரியல்லி ப்ரில்லியன்ட்..”.. என  என்னை பார்த்து சந்தோஷத்தில் கத்தினாள் வயோலினா.
மீண்டும் கண்ணாடியை பார்த்தபடி சிரித்துக்கொண்டே அவர்களுக்கு ஒரு சின்ன சல்யுட் வைத்தேன் .மொத்தமாக எவ்வளவு பணம் என்று எனக்கு தெரியாது , ஆனால் அவைகளை எங்கள் தேவைக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் உதவும்படியாகவும் இருக்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன் .
“ வாட் தி .... “....  என வினோத்தின் அலறல் சத்தம், கெட்ட வார்த்தையோடு  இப்போது என்னை நிலைகுலைய செய்தது .திரும்பி பார்த்த பொழுது ஒரு பேக்கை பார்த்து கத்தி கொண்டிருந்தான் . வயோலினாவும் தன் பங்கிற்கு பயந்து வினோத்தோடு ஒட்டி கொண்டாள்.
வண்டியை வேகத்துக்கு நங்கூரம் போட்டுவிட்டு .“ என்னாச்சி ....?? “ என்றேன் ...
“ ப்...ப்ப.....பணம் ”  என குழறினான் வினோ .
“ பணம் இல்ல ... இது பொணம்....  இந்த ரெண்டாவது பேக்ல.... சீக்கிரம் வந்து பாரு கார்த்தி “  என ஒரு நிமிடம் தன்னை பயத்தில் இருந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு அந்த பிணத்தை பார்த்தபடி என்னிடம் கூறினாள்.
தூக்கிவாரி போட்டது எனக்கு. என்ன நடக்கும் என்பதே பிரதானமாய் என மனதில் ஓடி கொண்டிருக்க அவர்கள் சொன்னபடி வேனின் பின்னால் என் கால்கள் புல்லட் டிரைனாக அடைந்து அங்கே நான் கண்ட காட்சி என்னை மேலும் பதட்டப்படுதியது
ஒரு பெரிய பேக்கில் புதிதாய் அச்சிட்ட ரூபாய் நோட்டுகளும் மற்றறொரு பேக்கில் சில நோட்டுகள் சிதறி ,அதன் உள்ளே ரத்த கரைகள் படிந்த நோட்டுகளும் ஒரு நாற்பத்தி ஐந்து வயது மதிப்புள்ள ஒரு பெண்மணியின் பிணம் இருந்தது .
“ இதுக்கு தான் நான் மொதல்லயே சொன்னேன் இந்த மாதிரி விஷயமெல்லாம் வேணாம்னு...” என தலையில் அடித்து கொண்டான் வினோத்.
“ த்ரில் த்ரில் னு சொல்லி நாமளே நாம வாழ்க்கைய அழிச்சிக்க போறோமா ??... சின்ன விஷயம்னா  சரி... இப்போ இதுக்கு நாம என்ன சொல்ல போறோம் ... சார் ... நாங்க பாங்க்ல திருட போனோம்.... திருடிட்டு வர வழியில இந்த பிணம் இருக்கு ...ஆனா நாங்க இத கொல்லலனு .”
“சரி ...சரி] ... போதும்... இதை என்ன பண்ணலாம் னு யோசிங்க ...” என்றேன் . என்னால் அதற்க்கு மேல் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
“ சரி ...கைய்ஸ் ..யாரும் பேணிக் ஆக வேண்டாம் ... இந்த பாடிய நாம பேங்க் பக்கத்துலயே  போட்டுட்டு போய்டலாம் “ என்றாள் வயோலினா.
“ அப்போ ...?? “........
எதுவா இருந்தாலும் வேன்ல போகும் போது பேசிக்கலாம் .... கம்ஆன்... பி பாஸ்ட் ...” என வேகமாக உள்ளே ஏறி வண்டியை பேங்கிடம் திருப்பினேன் . என் நினைவலையும் அப்படியே திரும்பி நீந்த தொடங்கியது .
நான் வயோலினா மற்றும் வினோத் மூவருமே சிறு வயது முதல் நண்பர்கள் . நாங்கள் எதையுமே புதிதாய் செய்ய விரும்பும் துடிப்பான இளைஞர்கள் கூட்டம். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு விதமான திறமைகள் . வயோலினாவுக்கு  எந்த வித கணினியையும் எளிதில் ஹாக் செய்ய தெரியும். வினோத்துக்கு எல்லாவற்றிற்கும் புது வடிவம் கொடுக்கும் க்ரியேடிவான மூளை . எனக்கு  எந்த மாதிரி திறமை என்று தெரியவில்லை .ஆனால் என்னை பொறுத்த வரையில் எனை சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு சரியான காரணம் வேண்டும் எங்களுக்குள் திறமை வேறுபட்டிருந்தாலும் நாங்கள் மூவரும் வேண்டுவது ஒரே விஷயம் தான் . அது தான் “ த்ரில் “. அதற்காக தான் எல்லாரும் இப்போது “ எம்.ஏ க்ரிமினலாஜி “ படித்து கொண்டிருக்கிறோம் .
அப்படி சின்ன சின்ன விஷயங்கள் த்ரில்க்காக செய்ய போய் இன்று அது பெரிதான விஷயமாய் ஆகிவிட்டது . மேலும் ஆங்கில படத்தின் அதீத தாக்கத்தாலும் , எடுத்துக்கொண்ட படிப்பு அப்படி என்பதாலும் மொத்தமாய் அதற்குள் நாங்கள் அடிமையாகி விட்டோம் .என்ன தான் வினோத் மற்றும் வயோலினாவின் பெற்றோர்கள் சமூகத்தில் பெரிய ஆட்களாக இருந்தாலும் எங்களை கண்டுகொள்வதில்லை. அதற்கு மற்றொரு பெயர் “எங்களை மதிப்பதில்லை“ . எங்களுக்கு பிடித்த, ஊருக்கு ஒதுக்குப்புறமான எப்போதும் சந்திக்கும் மரவீட்டில் வழக்கம் போல் ஒருநாள், ஒன்று கூடினோம். இன்று வரைக்கும் நாங்கள் எந்த விதமான செயல்கள் எப்போது எப்பிடி செய்கிறோம் என யாருக்கும் தெரியாது . ஆனால் இதுவரை எதிலும் சொதப்பியதில்லை இந்த நிமிடத்தை தவிர.
“ஹே ... வண்டி ... பாத்து ஒட்டு கார்த்தி ...” என ஒரு பதறல் சத்தம் என்னை தட்டி எழுப்பியது . ஒரு மரத்தில் இடிக்க போய் உடனே வண்டியை திருப்பி செலுத்தி கொண்டிருந்தேன் . திரும்பி வயோலினாவின் முகமும் வினோத்தின் முகமும் வழக்கத்திற்கு மாறாக வேர்த்து இருந்தது .
“ கொஞ்சம் பார்த்து ஒட்டு கார்த்தி ....”
“ ம்ம்ம்ம் “ என வெளியில் சொன்னாலும் மீண்டும் என் மனது எங்கே தவறு செய்தோம் என உணர்த்திகொள்ள ஒரு வாரம் முன் நடந்தை யோசிக்க ஆரம்பித்தது .  
அன்று  வயோலினா கம்ப்யுட்டரில் ஏதோ நொண்டி கொண்டிருந்தாள். வினோத் காபி குடித்தபடி ஏதோ புத்தகத்தை படித்து கொண்டிருந்தான்.
“ஹை பட்டிஸ்.... வாசப் ?? “
“சோ ... இந்த முறை என்ன செய்ய போறோம்...  ?” என்றாள் வையோ கணினி திரையை பார்த்து கொண்டே .
“ஐ ஹாவ் காட் சம்திங் இன்ட்ரெஸ்டிங்.... செக் திஸ் அவுட் ! “  என ஒரு இருபது ஆங்கில பட சிடிக்களை பறக்கவிட்டு சோபாவில் உக்கார்ந்தேன். எல்லாம் வங்கியில் திறமையாக  கொள்ளையடிப்பது போன்ற படங்கள் .
“ சோ ஆர் வீ கோன்னா பிரேக் இண்டு தி பேங்க் ?? “ என காபியை டேபிளில் வைத்து விட்டு கேட்டான் வினோத் .
“ உனக்கென்ன பைத்தியமா ...?? பேங்க்ல போய் கொள்ளையடிக்க போறோமா...?? அதுவும் நாம ....?? “ என நக்கலாய் என்னை பார்த்தாள் வயோ.
மெதுவாய் புன்னகைத்தேன்.
எனக்கு அழகே அந்த கன்னத்தில் குழி விழும் சிரிப்பு என வயோ அடிக்கடி சொல்லுவாள் . வயோ தான் அவளின் செல்ல பெயர் .
“ நத்திங் இஸ் இம்பாசிபல்....” முடிவு பண்ணி கரக்டா பண்ணா எல்லாம் பண்ணலாம் .
“ சரி .. நீ மொதல்ல கதவ மூடு....”
“ம்ம்ம்ம்...” கதவை மூடிவிட்டு திட்டத்தை நன்றாக விளக்கினேன் . முதலில் சில ஆங்கில படங்களை பார்த்து கொள்ளையடிக்கும் வழிமுறைகளை தெளிவாக புரிந்து கொண்டு அதற்காக தயாராகி ஒருவாரம் அந்த வங்கியை உள்ளேயும் வெளியேயும் நோட்டமிட்டு பின்பு அதன் உள்ளே வேலை செய்யும் ஒருத்தனை தாஜா செய்து எல்லா விஷயங்களையும் கறந்து  உள்ளே எல்லா பணத்தையும் கொள்ளையடிக்கும் வரை சரியாய் தானே இருந்தது . பின்பு எப்படி அந்த பிணம் அதுவும் நடு இரவில் ?? என நான் யோசித்து முடிப்பதற்குள் அந்த வங்கியின் பின்பக்கம் வந்து விட்டது . நானும் வினோத்தும் கையுறைகளை அணிந்து கொண்டு அந்த பிணத்தை மெதுவாக ஒரு ஓரத்தில் போட்டு விட்டு விருட்டென கிளம்பிவிட்டோம்.

மறுநாள் காலையில் பேப்பரில் கொட்டை எழுத்தில் “ பிரபல வங்கியில் கொள்ளை மற்றும் கொலை “ என நான் செய்திதாளில் வினோத்திடமும் வயோவிடமும் காட்டிகொண்டிருக்கும் பொழுது அந்த ஏரியா இன்ஸ்பெக்டரிடம் அழைப்பு வந்தது !!.

CLICK HERE TO GO TO NEXT EPISODE - http://karthikanavugal.blogspot.in/2017/09/e02.html

Comments

Popular posts from this blog

பாடல்கள் பலவிதம் - Songs i love

" பாடல்கள் பலவிதம் “  இசை என்பது உலகின் மொழி . அத்தகைய மொழியில் குறிப்பாக தமிழ் பாடல்கள்  நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. அவை யாவும் மனநிலை மாற்றும் போதை வஸ்துக்கள் . நாம் பெரும்பாலும் ரசித்த , சிலர் ரசிக்க தவறிய பாடல்களின் உணர்வுகளை வெளியே எடுத்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.   பாடல்கள் பலவிதம் #1 Song link - https://www.youtube.com/watch?v=v8eUuzElvX4 “ தென்றல் வந்து தீண்டும் போது “ - அவதாரம் முதல் பாடல் இசைஞானியின் பாடல் . எத்தனையோ பாடல்கள் அவர் கடந்து வந்திருந்தாலும் இந்த பாடல் ஒரு பிளாட்டினம் கிரீடம் . இந்த பாடலை சிலாகிக்க, வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் வறட்சி ஆகி இதயம் அந்த பாடலில் லயித்துவிட்டது .  அது தான் “ தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ, மனசுல “ பாடல்.   கண் பார்வை அற்ற நாயகி ,தனக்காக நாயகனும் கண்ணைக்கட்டி கொண்டு கஷ்டப்படுவதை அறிந்து , அவளுக்கு கண்ணாக இருந்து தன்னை வழிநடத்தும்படி கேட்க , அந்த ஒரு பரிவின், ஆசையின் புள்ளியில் தொடங்குகிறது பாடல். ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையின் சாரம்சத்தை கொண்டு  அன்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் -1

அன்று மாலை எமிக்கு எதுவுமே சரியாய் நடப்பதாய் தெரியவில்லை.சிறிது நேரம் யோசித்தவள் தலை வலிக்கவே  யோசிப்பதை நிறுத்திவிட்டு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு கிளம்பி சென்று கொண்டிருந்தாள் . “ மேடம் இந்த புக்கு ரொம்ப நல்லா இருக்கும் ... வாங்கி படிங்க எல்லாருடைய விருப்பத்துக்கு ஏத்தா மாதிரியும் இங்க கம்மி விலையில் புத்தகம் கிடைக்கும் “ என எமியை மட்டுமே ஒருவாறு உற்று நோக்கி கொண்டே தன் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தான் அந்த வியாபாரி கிழவன். அந்த கிழவனை கடந்து சென்றவள் , ஒரு நிமிடம் நின்று அவனை திரும்பி பார்த்தாள். அவன் கண்கள் அவளை " வா வா "  என்றது . அவளும் அவனிடம் வசியப்பட்டது போல அவனிடம் ஈர்க்கப்பட்டு அவனருகே சென்றாள் . வானிலை கருப்பு மேகங்களாய் மாற , மற்ற பறவைகள் எல்லா இடத்திலும் பறந்து செல்லும் போது அங்கே வித்தியாசமாய் கூட்டமான அண்டங்காக்கைகள் வட்டமிட்டு அமர்ந்து கொண்டு எமியை உற்று நோக்கி சூழ்நிலையை மோசமாக போவதை உணர்த்தியது. “ வா எமி ...” “ என் பெயர் அவனுக்கெப்படி தெரியும் ?? ” என அதிர்ந்தாள் . “ எனக்கு எல்லாம் தெரியும் எமி ...! “ என சிரித்தான் அந்த நரைத்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் - 4

மெல்ல மார்க்கை நோக்கி நடந்து வந்த லீமர் வான்ட் , தன் சாத்தான் படைகளை கை காட்டி சைகையில் நிறுத்தினான் . இருவருக்கும் பயத்தில் இதய துடிப்பு உசேன் போல்டுடன் போட்டி போட்டு கொண்டு ஓடியது . லீமர் வான்ட் மெதுவாக தன் கைகளை மார்க்கின் கழுத்தின் மீது வைத்து அவனை தூக்க ஆரம்பித்த போது  மார்க் அலறினான் !! “ என்ன விட்டுடு ....” லீமர் . “ ஆமா ... அவன விடு “ என கதறினாள் எமி. “ ஹாஹஹாஹாஹா..... “ என லீமர் சிரித்த போது அங்கே  அந்த மின்னல் வெளிச்சத்தில் அவன் கொடூரமாய் தெரிந்தான் . “ விட்டுடறேன்..... ஆனா நீ எனக்கு வேணும் எமி ...” என மீண்டும் வில்லத்தனமாக சிரித்தான் லீமர். அவனின் இறுக்கமான பிடியிலும் அந்த மழையிலும் மார்க்கால் வாயை திறக்க முடியவில்லை . “ சரி ... அவன விட்டுடு ... என்ன எடுத்துக்கோ ...” “ தட்ஸ் மை கேர்ள் ....கம் டு பாப்பா “ என மறு கையால் எமியை கழுத்தோடு தொட்டு தூக்கினான் லீமர் . அப்படி தூக்கும் பொழுது லீமரின் நகம் பட்டு எமிக்கு லேசாக கீறி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது .  இருவரையும் ஒரே மூச்சில் தின்றுவிட தன் நீண்ட நாக்கை தொங்க போட்டு எமியை நெருங்க ...