Skip to main content

மெல்ல கொல்வேன் - E02

மூவருக்கும் ஒருநிமிடம் இதயம் வாய் வழியாக வெளியே வந்துவிடும் போலிருந்தது . போனை நீ எடு ... நீ எடு என கண்களிலே சண்டைபோட்டு கொண்டு கடைசியில் பலியாடாக என்னை தள்ளிவிட , நான் செல்போனை காதோடு பேச வைத்தேன் .
“ ஹலோ ... மிஸ்டர் கார்த்திக் .. நான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் பேசுறேன். கொஞ்சம் மரியா பேங்க் வரைக்கும் வர முடியுமா ?? “
“ ஏன் னு தெரிஞ்சிக்கலாமா சார் ?? “
“சும்மா ஒரு என்கொயரி தான் . உங்க நண்பர்களையும் கூட்டிட்டு வாங்க . “
“ ஓகே சார் . இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க இருப்பேன். “
போனை காதிலிருந்து விடைகொடுத்து திரும்பிய போது வினோத்தும் வயோவும் என் முக பாவனைகளை வெறித்து பார்த்து கொண்டிருந்தனர்..மெல்ல வராத சிரிப்பை வரவழைத்து அவர்களை சமாளிக்க முயன்றபோது,
“ அவ்ளோ தான் போச்சி ... “ என்றாள் வயோ.
“ ஹே ரிலாக்ஸ்... எல்லாரும் ரெடி ஆகுங்க ... நாம மரியா பேங்க் வரைக்கும் போகணும் . ” என்றேன் .
“ ஆண்டவா நீ தான் காப்பாத்தனும் “ என கண்ணாடியை கழற்றி பெருமூச்சு விட்டான் வினோ.
“ தப்பு செய்யும் போது பயந்தா மட்டும் தான் மாட்டுவோம். அதுவும் இல்லாம நாம அந்த கொலைய செய்யல . சோ அதனால யாரும் பயப்பட வேண்டாம் “. என நான் முடிக்கும் முன்பே  “ ஆனா நாம கொள்ளை அடிச்சிருக்கோமே...?? “ என மிரட்டும் தொனியில் வயோ என்னை பார்க்கவே, நான் இருவரையும் அருகில் அழைத்து தெளிவாக என் முடிவை கூறினேன் .
“ ஓகே ...ம்ம்ம்ம்.... நாம கொண்டு வந்த பணத்தை அன்னிக்கே நம்மளோட பழைய நோட்டோட கலந்து  இந்த மரத்தடி கிழ ஒளிச்சி வச்சிட்டோம் . நாம வந்த வேனையும் எனக்கு தெரிஞ்ச ஒரு ஷெட்ல விட்டு ஆல்ட்டர் பண்ண சொல்லிட்டேன் .  அதுவும் இல்லாம நாம திருடங்க கிடையாது அதனால போலிஸ் கிட்ட செக் பண்ணி மேட்ச் பண்ண நம்ம கைரேகையும் கிடைக்காது . சோ இப்போ நமக்கு எதுவும் தெரியாது ... நடக்கல அப்பிடின்னு நெனச்சிகிட்டு போவோம். டூ யு கெட் மீ ?? “
“ம்ம்ம்ம்ம்... சரி “ என அவர்கள் உதடுகள் சொன்னாலும் மனதில் கவலைகள் ஊஞ்சலாடுவதை அவர்கள் கண்கள் சொல்லியது .
நேராக மூவரும் மரியா பேங்க் முன்னால் நின்றுகொண்டிருந்த போது அந்த கைகள் என் முதுகை தொட்டவுடன் அதிர்ச்சியடைந்து மெதுவாக திரும்பினேன் . மீசையில் முகத்தை மறைத்து வைத்த உருவத்தை, அவரின் காக்கி சட்டையும் , யூனிபார்மில் இருந்த நக்ஷத்திரமும், பெயரும் அவர் தான் இன்ஸ்பெக்டர்  மாதவ் என சொல்லியது .
“ம்ம்ம்ம் .... குட்...” எங்களை பார்த்து சிரித்தார் .
மூவருக்கும் சிரிப்பு வரவில்லை . சிலை போல் அவரை பார்த்து நின்று கொண்டிருந்தோம் .
“ சரி என் பின்னால வாங்க ...” என அவர் கூற மூவரும் மந்திரித்து விட்ட ஆடுகள் போல பின்னே சென்றோம் . கூட்டத்தை எல்லாம் பின்னே தள்ளி அன்று நாங்கள் விட்டு சென்ற பிணத்தை  காட்டினார் . பத்திரிக்கை கேமிராக்கள் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தது . பிணத்தை சுற்றி மார்க் செய்யப்பட்டு  அதை அம்புலன்சில் ஏற்றி போஸ்ட் மாடத்திற்கு அனுப்பினார்கள். கூட்டத்தை விட்டு தள்ளி வந்து எங்களிடம் இன்ஸ்பெக்டர் பேச தொடங்கினார் .
“உங்களுக்கு இந்த கொலையை பத்தி எதாவது தெரியுமா ?? ”
அவர்  “ கொலை “ என்றதும் தான் அந்த பெண்மணியின் தலையில் ரத்தம் கசிந்து இறந்து இருப்பது எனக்கு நினைவுக்கு வந்தது . ”
“ தெரியாது சார் ... எங்களை எதுக்கு கூப்பிடிங்கனு தெரிஞ்சிக்கலாமா??“ என்றேன்.
“ ஜஸ்ட் சும்மா தான் . உங்க காலேஜ் ப்ரொபசர் மிஸ்டர் குருமூர்த்தி என்னோட நண்பன் தான் . உங்களுக்கு இந்த மாதிரி விஷயங்களை ஆராய்ச்சி செய்வதில் அதிக ஆர்வமாமே ... அதான் நீங்க எனக்கு எதாவது ஹெல்ப் பண்ண முடியுமா உங்கள கேட்க வந்தேன்  . பை தே வே ... உங்க நம்பரை அவர் தான் கொடுத்தார் “.
இப்போது தான் பெருமூச்சின் மொத்த காற்றும் வெளியே வந்து எங்கள் பற்கள்,வாய் வழியாக எட்டிபார்த்து .
“ ஹெல்ப்னா ?? எந்த மாதிரி சார் ..?? “ என்றாள் வயோ இப்போது ரிலாக்சாக
“ ஒன்னும் இல்ல நீங்க ஏற்கனவே இந்த லைன்ல இருக்கறதுனால இந்த கேசோட எல்லா டிடைல்சும்  நான் தரேன் . நீங்க தனியாக உங்களால முடிஞ்சா விஷயத்த எனக்கு சொல்லுங்க . அதுவும் நீங்க இதுல ரொம்ப ஆர்வமா இருப்பிங்கனு உங்க ப்ரொபசர் அண்ட் மை பிரண்ட் குருமூர்த்தி சொன்னதுனால மட்டும் தான் நான் இதை செய்யுறேன் “ .
“ ரொம்ப நன்றி சார் . வீ ஆர் ஆல்வேஸ் ரெடி .” என்றான் வினோத் .
“ சரி உங்க மெயில் ஐடி குடுத்துட்டு போங்க ... நாளைக்கு நான் உங்களுக்கு எல்லாத்தையும் அனுப்புறேன் . அண்ட் தேங்க்ஸ் பார் கமிங் “.
“ ம்ம்ம் வித் ப்ளெஷர்... இந்தாங்க ..” என் மெயில் ஐடியை கொடுத்துவிட்டு மூவரும் பேருந்தில் சென்றோம் .
“ இது தான் நமக்கு பெரிய சான்ஸ் . இந்த கிக்க விடவே கூடாது ” என்றான் வினோ குதுகலமாக .
“ சரி .. இப்போ அந்த இன்ஸ்பெக்டர் நம்மள வேவு பார்க்க, இல்ல நம்மள பத்தி தெரிஞ்சிக்க, நம்மள பத்தி போட்டு வாங்க இந்த வேலைய நம்ம கிட்ட கொடுத்திருக்கலாம் இல்லையா ?? “ சந்தேகத்தோடு வினவினாள் வயோ.
நான் அமைதியாக யோசித்து கொண்டிருந்தேன். அந்த அமைதியை கண்டக்டர் டிக்கெட் கேட்டபடி கெடுத்தபோது தான் நான் சுய நினைவுக்கு வந்தேன் . இறங்க வேண்டிய இடம் வந்ததும் மெதுவாக இறங்கி நடக்க தொடங்கிய போது , மழை வரவே ஒரு ரெஸ்டாரண்ட் ஓரமாக ஒதுங்கினோம் .
“ ஹே கார்த்தி... எதாவது பேசுடா ...” என்றார்கள் என் நண்பர்கள் இருவரும் .
“என்னை பொருத்த வரைக்கும் அந்த இன்ஸ்பெக்டர் நம்மள சந்தேகப்படல.. அப்பிடிப்பட்டிருந்தா அவரோட போக்கே வேற மாதிரி இருந்திருக்கும் . சோ .. ஹி நீட்ஸ் அவர் ஹெல்ப். நாம கண்டிப்பா இதுல இறங்கி யார் அந்த பெண்மணிய கொலை செய்தாங்க னு கண்டுபிடிக்க போறோம் .” என நான் முடிக்க “ கார்த்தி “ என என் பெயர் கத்தி ஒலிக்கப்பட்டது.
அது ஜோஸ்பின்.... அரசு மருத்துவமனையில் இருக்கும் பெரிய மருத்துவர். எதோ ஒரு காரணத்தால் எங்கள் கல்லூரிக்கு சொற்பொழிவு நடத்த வந்திருந்த போது பழக்கம். ஒரு சகோதரியை போன்று பழகுபவர்.
“ ஹே என்ன பசங்களா .. இந்த பக்கம் ..?? ”
“ இல்ல அக்கா ... சும்மா தான் “. நான் அவரை அக்கா என்றழைப்பது தான் வழக்கம் .” என்று நான் சொல்லி இயல்பாக சிரிக்கும் போதே அவர் தும்பினார் .
“என்னாச்சி அக்கா... ??” என்றாள் வயோ.
“ ஒண்ணுமில்மா ... ஒரு வாரமா ஜுரமாகவும் சளி பிடிச்சிருக்கு “.
சரி எல்லாரும் உள்ள வாங்க எதாவது சாப்பிடலாம் என்று அந்த ரெஸ்டாரண்ட் உள்ளே அழைத்து செல்ல , நாங்களும் மறுப்பு சொல்லாமல் உள்ளே சென்று ஆளுக்கு ஒரு சூப் ஆர்டர் செய்து குடிக்க ஆரம்பித்தோம் .
“ அப்பறம் வேலை எல்லாம் எப்படி போகுது அக்கா ?? “
“ ம்ம்ம்.. நல்லா தான் போகுது வினோ . இப்போ புதுசா டி.என்.ஏ னு சொல்லப்படுகிற உடம்பில் உள்ள மிகவும் முக்கியமான மூலக்கூறு பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன் .அதுவும் இல்லாம நேத்து மரியா பேங்க் பக்கத்துலே ஏதோ ஒரு பிணம் கிடந்துதாமே ??
குடித்து கொண்டிருந்த சூப் டக் என அதிர்ச்சியில் வயோக்கு புரைக்கேறியது.
“ ம்ம்ம்... கேள்விப்பட்டோம் .... “ என நான் அமைதியாக சூப்பை ஒரு சிப் செய்தேன் .
ஒரு ஒருமணி நேர வெட்டி பேச்சிகள் அந்த சூப் பவுலை காலி செய்த நேரத்தில் மழை நின்று விட்டது .
“ அப்போ சரி ... நான் கிளம்புறேன் .. பாத்துகங்க..” என புன்னகைத்துவிட்டு தன் ஸ்கூட்டியில் பறந்தார் டாக்டர் அக்கா.
நாங்களும் அவரிடம் விடைபெற்று எங்கள் மர வீட்டிற்கு வர இரவு ஒன்பதை தொட்டது . வயோ மற்றும் வினோ வீட்டில் நாங்கள் மூவரும் தனியாக இருக்கிறோம் என அவர்களுக்கு தெரியும் . ஏற்கனவே அவர்கள் எங்கள் மதிப்பதில்லை என்பதால் நாங்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு கவலை இல்லை . கேட்கும் போது காசு அக்கௌண்டில் போட்டு விடுவார்கள் . அவர்களுக்கு எந்நேரமும் அவர்களின் பிஸ்னஸ் பற்றிய கனவுகள் தான் . என்னுடைய அப்பா அம்மா கிராமத்தில் இருப்பதால் எனக்கும் கவலை இல்லை .
“ ஹே ... எதாவது மெயில் வந்துருக்கா பாரு ...” என்றான் வினோ .
“ ம்ம்ம்... “ கணினியை ஆன் செய்து மின்னஞ்சல்களை ஒவ்வொன்றாக கண்களால் ஸ்கேன் செய்து கொண்டிருந்தாள்.
“ கார்த்தி ... இன்ஸ்பெக்டர் கிட்ட இருந்து மெயில் வந்துருக்கு. .நாளைக்கு  பக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அந்த போஸ்ட் மாடம் பற்றிய ரிப்போர்டை ஏட்டு கிட்ட ஒரு காப்பி வாங்கிக்க சொன்னாரு.” என்று தும்பினாள்.
“ நாளைக்கு நீயும் டாக்டர் கிட்ட போகணும் போல ?? “ என சிரித்தான் வினோ .
“ சரி எல்லாரும் நாளைக்கு தயாரா இருங்க ... முடிக்க வேலை நிறைய இருக்கு ...என என் மனதில் பல கேள்விகளோடு விளக்கை அணைத்து அன்றைய தினத்திற்கு முற்றுபுள்ளி வைத்தேன் .

CLICK HERE TO GO TO NEXT EPISODE -http://karthikanavugal.blogspot.in/2017/09/e03.html

Comments

Popular posts from this blog

பாடல்கள் பலவிதம் - Songs i love

" பாடல்கள் பலவிதம் “  இசை என்பது உலகின் மொழி . அத்தகைய மொழியில் குறிப்பாக தமிழ் பாடல்கள்  நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. அவை யாவும் மனநிலை மாற்றும் போதை வஸ்துக்கள் . நாம் பெரும்பாலும் ரசித்த , சிலர் ரசிக்க தவறிய பாடல்களின் உணர்வுகளை வெளியே எடுத்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.   பாடல்கள் பலவிதம் #1 Song link - https://www.youtube.com/watch?v=v8eUuzElvX4 “ தென்றல் வந்து தீண்டும் போது “ - அவதாரம் முதல் பாடல் இசைஞானியின் பாடல் . எத்தனையோ பாடல்கள் அவர் கடந்து வந்திருந்தாலும் இந்த பாடல் ஒரு பிளாட்டினம் கிரீடம் . இந்த பாடலை சிலாகிக்க, வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் வறட்சி ஆகி இதயம் அந்த பாடலில் லயித்துவிட்டது .  அது தான் “ தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ, மனசுல “ பாடல்.   கண் பார்வை அற்ற நாயகி ,தனக்காக நாயகனும் கண்ணைக்கட்டி கொண்டு கஷ்டப்படுவதை அறிந்து , அவளுக்கு கண்ணாக இருந்து தன்னை வழிநடத்தும்படி கேட்க , அந்த ஒரு பரிவின், ஆசையின் புள்ளியில் தொடங்குகிறது பாடல். ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையின் சாரம்சத்தை கொண்டு  அன்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் -1

அன்று மாலை எமிக்கு எதுவுமே சரியாய் நடப்பதாய் தெரியவில்லை.சிறிது நேரம் யோசித்தவள் தலை வலிக்கவே  யோசிப்பதை நிறுத்திவிட்டு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு கிளம்பி சென்று கொண்டிருந்தாள் . “ மேடம் இந்த புக்கு ரொம்ப நல்லா இருக்கும் ... வாங்கி படிங்க எல்லாருடைய விருப்பத்துக்கு ஏத்தா மாதிரியும் இங்க கம்மி விலையில் புத்தகம் கிடைக்கும் “ என எமியை மட்டுமே ஒருவாறு உற்று நோக்கி கொண்டே தன் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தான் அந்த வியாபாரி கிழவன். அந்த கிழவனை கடந்து சென்றவள் , ஒரு நிமிடம் நின்று அவனை திரும்பி பார்த்தாள். அவன் கண்கள் அவளை " வா வா "  என்றது . அவளும் அவனிடம் வசியப்பட்டது போல அவனிடம் ஈர்க்கப்பட்டு அவனருகே சென்றாள் . வானிலை கருப்பு மேகங்களாய் மாற , மற்ற பறவைகள் எல்லா இடத்திலும் பறந்து செல்லும் போது அங்கே வித்தியாசமாய் கூட்டமான அண்டங்காக்கைகள் வட்டமிட்டு அமர்ந்து கொண்டு எமியை உற்று நோக்கி சூழ்நிலையை மோசமாக போவதை உணர்த்தியது. “ வா எமி ...” “ என் பெயர் அவனுக்கெப்படி தெரியும் ?? ” என அதிர்ந்தாள் . “ எனக்கு எல்லாம் தெரியும் எமி ...! “ என சிரித்தான் அந்த நரைத்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் - 4

மெல்ல மார்க்கை நோக்கி நடந்து வந்த லீமர் வான்ட் , தன் சாத்தான் படைகளை கை காட்டி சைகையில் நிறுத்தினான் . இருவருக்கும் பயத்தில் இதய துடிப்பு உசேன் போல்டுடன் போட்டி போட்டு கொண்டு ஓடியது . லீமர் வான்ட் மெதுவாக தன் கைகளை மார்க்கின் கழுத்தின் மீது வைத்து அவனை தூக்க ஆரம்பித்த போது  மார்க் அலறினான் !! “ என்ன விட்டுடு ....” லீமர் . “ ஆமா ... அவன விடு “ என கதறினாள் எமி. “ ஹாஹஹாஹாஹா..... “ என லீமர் சிரித்த போது அங்கே  அந்த மின்னல் வெளிச்சத்தில் அவன் கொடூரமாய் தெரிந்தான் . “ விட்டுடறேன்..... ஆனா நீ எனக்கு வேணும் எமி ...” என மீண்டும் வில்லத்தனமாக சிரித்தான் லீமர். அவனின் இறுக்கமான பிடியிலும் அந்த மழையிலும் மார்க்கால் வாயை திறக்க முடியவில்லை . “ சரி ... அவன விட்டுடு ... என்ன எடுத்துக்கோ ...” “ தட்ஸ் மை கேர்ள் ....கம் டு பாப்பா “ என மறு கையால் எமியை கழுத்தோடு தொட்டு தூக்கினான் லீமர் . அப்படி தூக்கும் பொழுது லீமரின் நகம் பட்டு எமிக்கு லேசாக கீறி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது .  இருவரையும் ஒரே மூச்சில் தின்றுவிட தன் நீண்ட நாக்கை தொங்க போட்டு எமியை நெருங்க ...