“த்தா...டேய் ... அது யாரா இருந்தாலும் அவங்கள சாகடிக்காம விட மாட்டேண்டா , இங்க நான் தான் ராஜா , என்னை எதிர்த்து எவன் போட்டி போட்டாலும் அவனுக்கு சங்கு தான் .அது உன் தலைவனா இருந்தாலும் !! “ என அச்சில் வராத சில தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தப்பட்டு அந்த வாட்சப் ஆடியோ பரப்பரப்பாகியது.
இந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆறுமுகம் என தெரிய வர , போலிஸ் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டது . மேலும் கொல்லப்பட்டவர் ஆளுங்ககட்சி என்பதால் அந்த கொலை வழக்கிற்கான விசாரிப்பும் தீர்ப்பும் வேகமாக வழங்கப்பட வேண்டும் என்று உறுதியாக அந்த கட்சிகாரர்கள் வலியுறுத்த ,அதற்கான பணிகள் துரிதமாக நடந்துக்கொண்டிருந்தன.
இந்த விடுமுறை நாட்கள் இவ்வளவு வேகமாக , கணிக்க முடியாத விஷயங்கள் நடப்பது எங்களுக்கு அதுவே முதல் முறை .காவல்துறையிடம் வேண்டிய தகவலை கொடுத்துவிட்டு ,எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வருவோம் என உறுதி திரும்பினோம் . ஆனால் எங்கள் மூவருக்கும் ஒரே சிந்தனை . நாங்கள் கடந்துவந்த கொலைகள் யாவும் தற்செயலாக நடக்கிறதா அல்லது இதற்க்கு பின்னால் காரணம் இருக்கிறதா, அப்படி இருந்தால், யார் அது ?? , இனிமேலும் இது போன்ற கொலைகள் நிகழுமா ?? நிகழ்ந்தால் அடுத்தது யார் ?? என்ற கேள்விகள் எங்கள் மூளையை சுற்றி ஓடிக்கொண்டிருந்தன.
ஒருவாரத்திற்கு பிறகு .....................
வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு லேசு பட்டது அல்ல , அது ஒரு கடல் பயணத்தின் பொழுது வரும் சூறாவளி போன்றது , திறமையான மாலுமிகள் மட்டுமே அதில் பயணிக்க முடியும். ஒருவேளை அகில் தான் தன்னுடைய பி.ஏ வை கொன்றதற்காக சங்கரனை கொன்று அந்த பழியை அவர் அண்ணன் மேல் தூக்கி போட்டுவிட்டரா ?? அல்லது உண்மையாகவே அவர் அண்ணன் தான் சங்கரனின் வளர்ச்சி பிடிக்காமல் கொன்று விட்டாரா ?? இடையில் ஆறுமுகம் பாலா அண்ணனை கொல்ல வேண்டிய சூழ்நிலை என்ன ?? காரணம் என்ன ?? ஐயோ ... நான் யோசிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.
எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன். வினோத் இதிலிருந்து தான் ஓய்வு பெறப்போவதாக கூறினான் . படிப்பை முடித்துவிட்டு தன்னுடைய அப்பாவின் கம்பனி பொறுப்புகளை ஏற்க அவன் மனதளவில் தயாராக இருப்பதாக கூறினான். வயோ தன் வீட்டில் காதலை பற்றி சொல்லவிருக்கிறாள் என என்னிடம் கூறினாள் .
எனக்கு மனதில் அவர்கள் சொல்வது எதுவுமே ஒட்டவில்லை. ஏதோ தப்பாக நடப்பது போல எனக்கு தோன்றியது . ஆனால் அது என்னவென்று தெரியவில்லை என் உள்ளுணர்வு என்றுமே தவறியதில்லை.
அன்று இரவு வினோவும் வயோவும் சாப்பிட வெளியே சென்று விட நான் தனிமையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன் . தீடீரென தோன்றிய ஒரு விஷயம் , ரிச்சர்டுக்கு கால் செய்து வெளியில் செல்லலாமா என்று கேட்டேன் . சரி என்று சிரித்தார் . இந்த மர்மமான கொலைகளை கையாள்வது பற்றி இணையத்தில் சில கட்டுரைகளை படித்திருக்கிறேன் . இந்த முறை அதை உணரப்போகிறேன் என நினைத்தேன் .
ரிச்சர்ட் இது போன்ற விஷயத்தில் கில்லி. மேலும் நானும் அவரும் சேர்ந்து இதில் போடப்பட்ட மர்ம முடிச்சிகளை அவிழ்க்க போகிறோம் என நினைக்கையில் மனது பரவசமடைந்தது. முதலில் அவரை சந்தித்து எல்லா விஷயமும் சொல்லவேண்டும் என என் மனம் பதைபதைத்தது .சொன்னபடி சென்னையின் அந்த பிரபல ஹோடல்லில் இருவரும் சந்தித்து டேபிளில் அமர்ந்தோம் .
வழக்கம் போல தனது கேஷுவலான லுக்கில் எனை கட்டி இழுத்தார் . மொத்த விஷயத்தையும் ஒன்று விடாமல் கூறினேன் . இதில் நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என்றேன் . புன்னைகைத்து தலையாட்டினார். சர்வர் டேபிளில் உணவு எடுத்துவைக்க அதை சாப்பிட ஆரம்பித்திருந்தோம் .
“உனக்கு அமானுஷ்யத்துல நம்பிக்கை இருக்கா கார்த்தி ?? வாயில் கொண்டு போன போர்க் ஸ்பூனை மெதுவாக கீழே இறக்கி “ ஆமா “ என்று புரியாமல் தலையாட்டினேன்.
“ம்ம்ம்ம்” என்று அவர் சாப்பிட்டு கொண்டிருந்தார் . நானும் ஆரம்பித்தேன் .
“ஏன் கேக்குறிங்க ரிச்சர்ட் ??”
“ சும்மா தான் கேட்டேன். “
“ ஒரு கொலை நடந்தா கொலையாளி அவங்களுக்கு வேண்டாதவங்களா இருக்கணும் னு அவசியம் இல்லை . அவங்களை சுத்தி இருக்கறவங்களா இருந்தாலே போதும் ! “ என்று ரிச்சர்ட் முடிக்கும் பொழுது பில் வந்திருந்தது . பில்லுக்கான தொகையை தன் பர்சிலிருந்து அவர் கொடுத்தார், முதலில் அகிலனை கண்காணிக்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன். அவரிடம் சொன்னதும் அமோதித்தார். ரிச்சர்டிடம் நிறைய விஷயங்கள் நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது .
மணி இரவு ஒன்பதை தொட்டிருந்தது. மெல்ல வானம் சந்திரனை மறைக்க தொடங்கி இருந்த இரவு நேரம் . நானும் ரிச்சர்டும் ட்ரைனுக்காக காத்துக்கொண்டிருந்த வேளையில் அந்த கூட்டத்தில் வேகமாக ஒருவன் ரிச்சர்டை கத்தி கொண்டு தாக்க முயற்சிக்கும் நேரம் எதிர்பாராத விதமாக ரிச்சர்ட் கீழே குனிய,அது பக்கத்திலிருந்த ஒருவரின் வயிற்றை கிழித்துகொண்டு சென்றது .
அந்த நிமிடம் என்ன நடக்கிறது என என் மூளை உணர்ந்துகொள்ள சில நொடிகள் எடுத்துக்கொண்டலும், அந்த மொட்டைத்தலையன் வேகமாக படிக்கட்டுகளில் ஓட ,சற்றும் தாமதிக்காமல் ரிச்சர்ட் காயம்பட்டவரை மருத்துவனையில் அனுமதிக்க கட்டளையட்டு அந்த மொட்டை தலையின் பின்னால் ஓடினார்.
மங்கி இருந்த அந்த இரவு நேர பொழுதில் பழைய குண்டுபல்புகள் தங்கள் பங்கிற்கு மஞ்சள் ஒளியை உமிழ்ந்த பகுதியில் படிக்கட்டுகளை தாண்டி ஓட, விறுவிறுப்பாக அவனை பிடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பின் தொடர்ந்தார் . தெருக்கள் தாண்டி கூடத்தில் அவன் கலைந்துவிட்டாலும் அவனை தேடும் முயற்சியில் அவர் தீவரமாய் இருந்தார் . வாழ்க்கை மிகவும் சிறியது . அவன் திரும்ப கண்ணில் படுவான் என நினைத்து ரிச்சர்ட் நகர்ந்தாலும் ,அவன் கொல்ல வந்த காரணம் புரியாமல் குழம்பினர்.
இருவரும் போனில் பேசிக்கொண்டு விடைபெற்றோம் . வீட்டில் வயோவும் வினோத்தும் எனக்கு முன்னரே வந்திருந்தனர் . விஷயத்தை சொன்னதும் அவர்கள் அதிர்ச்சியடைந்து இதை இப்படியே விடக்கூடாது என மூவரும் எண்ணி கொண்டிருந்தோம் . இன்னும் ஒரு வாரத்தில் இந்த எல்லா விளையாட்டுக்கும் காரணம் கண்டுபிடித்து முற்று புள்ளி வைக்க குறியாய் இருந்தேன் என நினைத்துக்கொண்டிருந்த பொழுது வினோத் அப்பா சங்கரபண்டியின் பி.ஏ கிருஷ்ணன் கால் செய்தார்.
“ சொல்லுங்க கிருஷ்ணன்... “ என்றான் வினோத் .
“ சார் .. அகில் இண்டஸ்ட்ரீஸ் ஓனர் அகில் அவரோட டெண்டர் மூலமா பிடிச்சிருக்க பேக்டரி பங்கசனுக்கு உங்களை சீப் கெஸ்டா இன்வைட் செய்திருக்கார்.“
“ சரி ... எந்த தேதியில் ?? “
“ இன்றிலிருந்து இரண்டு நாள் தள்ளி சார் “
“ ம்ம்ம் .. ஓகே நானும் என் நண்பர்களும் வருவோம் . “
ரிச்சார்டுக்கு போன் செய்து விஷயத்தை கூறினேன் , தானும் வருவதாக சொன்னார்.
.........................................................................................................................................................................................
மறுநாள் இரவு ....
வண்டி ரிப்பேர் ஆன காரணத்தினால் ஷெட்டில் இருக்கும் நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு ,வீட்டிற்கு நடந்து நடந்து சென்று கொண்டிருந்தேன் .வயோவும் வினோத்தும், அந்த அகில் இண்டஸ்ட்ரிஸ் நிகழ்ச்சி விஷயமாக கிருஷ்ணனிடம் பேச வினோத்தின் அப்பா வீட்டிற்கு சென்றிருந்திருந்தனர். மறுநாள் காலை தான் வருவதாக சொல்லவே அன்றிரவு தான் தனிமையில் தான் என் பொழுதை கழிக்க வேண்டும் .
வழக்கம் போல் எதையோ நினைத்து கொண்டு ரோட்டில் நடந்து போய் கொண்டிருந்த போது முன்னே பத்தடி தூரத்தில் வேகமாக ஒருவன் இங்கும் அங்கும் பார்த்தபடி நடந்து முன்னேறிக்கொண்டிருந்தான். எனக்கு உள்ளுணர்வு எதையோ சொல்லவே அவனை பின் தொடர்ந்தேன். ஒரு குறிப்பிட்ட சந்தை அடைந்தததும் வேறு ஒருவனிடம் எதையோ கொடுத்து விட்டு வேகமாக நகர்ந்த போது அந்த தெருவின் மஞ்சள் விளக்கில் அவன் முகம் பளப்பளவென தெரிய ஒரு நிமிடம் உறைந்து போனேன் . அது ரிச்சர்டை கொலை செய்ய வந்த மொட்டை தலையன் .
அவன் பின்னால் சென்றால் நிச்சயம் எதாவது தகவல் கிடைக்கும் என பின் தொடர்ந்து மெதுவாக சென்றேன். ஒரு இடத்தில நின்று சுற்றி ஆராய்ந்து விட்டு மேலே நகர ஆரம்பித்து ஒரு இடிந்த சின்ன கட்டடத்தின் உள்ளே சென்றபோது அங்கே சிலர் சரக்கடித்து கொண்டிருந்தனர் .நான் அந்த சுவரோரம் ஒதுங்கி அவர்கள் பேசுவதை கவனித்தேன்.
“ டேய் ... என்ன வேலை முடிஞ்சிதா ?? “
“ அண்ணே .. ..அது ...”
“ என்னடா இழுக்கற ..” என்று எரிச்சலடைந்தது அந்த பெரிய உருவம். சீட்டு ஆடிக்கொண்டிருந்த மற்றவர்களின் பார்வையும் இருவரின் உரையாடல்களை தான் கவனித்துக்கொண்டிருந்து.
“ அவனை கொன்னுட்டு வாடா னா, ஸ்கூல் பசங்க மாதிரி காரணமா சொல்ற ... த்தா..கையாலாகாத தே.பசங்களா .. து .... “ என காரி உமிழ்ந்தது அந்த பெரிய உருவம்.
“ அண்ணே அவன் தனியா வருவான் தான் நெனச்சேன் ,ஆனா கூட யாரையோ கூட்டிட்டு வந்திருக்கான் . “ அந்த பெரிய உருவம் எழுந்து வந்து மொட்டையின் சட்டையை சரி செய்து மெல்ல புன்னகைத்தான் . எல்லோரும் ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தனர். “ எனக்கு அவன் சாகனும், இல்ல... நீ செத்துருவ “ என அழுத்தமாய் கூறி , கையில் இருந்த கத்தியால் அந்த மொட்டையை குத்திவிட்டு கத்தினான்.
“ த்தா...டேய் ரிச்சர்ட் ... உன் சாவு என் கையில தாண்டா !! “ என வழக்கமான சினிமா வசனம் என்றாலும் அதில் தெறித்த வன்மம் சினிமாவை விட கோடி மடங்கு அதிகமாய் இருந்தது .
எனக்கு இதயம் ஒருநிமிடம் நின்று துடிக்க தொடங்கியது. வந்த வழியே பதுங்கி பதுங்கி வீட்டிற்கு சென்றேன். இதை ரிச்சர்டிடம் சொல்லலமா வேண்டாமா என்று ஒரே குழப்பமாக இருந்தது . ஒரு வேலை அவர்கள் ரிச்சர்டின் பழைய விரோதிகளாக இருக்கலாம் என்று நினைத்து அமைதியாக இருந்தேன். நாளை மறுநாள் எல்லோரும் அகில் இண்டஸ்ட்ரீஸ் பேக்டரி விழாவிற்காக சென்றிருந்தோம் . ரிச்சர்ட் எங்கள் அருகில் தான் இருந்தார் .
விழா எல்லாம் முடிந்து அகில் சகஜமாக பேச ஆரம்பித்தபோது அந்த பேக்டரியின் யூனியன் தலைவர் மணிமாறன் என்று ஒருவரை அறிமுகம் செய்த போது அந்த நொடி என் மூளை வேலை செய்ய மறுத்தது . அது... அது ... அவன் தான் ... அந்த பெரிய உருவம். அப்போது...... இது அகில் வேலையா ??. ரிச்சர்டிடம் கூறினேன். அவரின் அதிர்ச்சியை அவர் வெளிக்காட்ட வில்லை . ஆனால் அவர் பயந்தது எனக்கு நன்றாக தெரிந்தது . வயோவிடமும் வினோத்திடம் நான் அதை பகிர்ந்துகொள்ள வில்லை.
ரிச்சர்ட் உடனடியாக என்னிடம் அடுத்த கட்ட பிளானை கூற அதன் படி லாவகமாக தனியாக இருந்த மணிமாறனை கடத்தி ரிச்சர்ட் வீட்டில் கட்டி போட்டு அவரை கொலை செய்ய என்ன காரணம் ,யார் என்று விசாரித்த போது வந்த பதில் அதிர்ச்சியானது !!
அது “ பாலா அண்ணனின் இளைஞர் பாசறை மருதபாண்டி !!
Comments
Post a Comment