Skip to main content

மெல்ல கொல்வேன் - E07

புது அத்தியாயத்தின் தொடக்கமாய் அந்த ஊட்டி பயணம் ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும் என நினைத்துகொண்டிருக்கும் வேளையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பாலா எங்களை அவருடன் ஊட்டியில் தங்குமாறு கேட்டுக்கொண்டார். அப்பாவின் நெருங்கிய நண்பர் என்பதாலும் , தற்போதைய சூழ்நிலை அவர் அறிந்ததாலும் அவர் எங்களை அழைத்திருப்பார் என யூகித்தேன். பொதுவாக பாலா அண்ணன் தன் கட்சி விஷயங்களை பெருமபலும் வீட்டில் பேச மாட்டார் , அது மிகவும் முக்கியமாக இருப்பின் மட்டுமே. மேலும் அவர் தன்னை சுற்றி யாரும் இருப்பதை விரும்பவும் மாட்டார் . அது தனக்கான ஆபத்தை தேடி போவது போல என்பது அவர் அனுமானம் .
தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் மும்மரமாக இருந்த அவர் , அவர் உதவியாளரின் மூலம் எங்களுக்கு அந்த தகவலை தெரிவிக்க, ஒரு வாரம் பயணமாக ஊட்டி சென்றோம் .
பாலா அண்ணன் மிகவும் கோபக்காரர் என்று நாங்கள் ஊடங்கங்கள் மூலம் அறிந்திருந்தாலும் எங்களை உபசரித்து நன்றாகவே கவனித்துக்கொண்டார் . எங்களுக்கு என தனித்தனி அறை அவர் ஒதுக்க ஏற்பாடு செய்து அவர் பிள்ளைகள் போல கவனித்துக்கொண்டார் . கட்சியின் தீவிர தொண்டரும் தலைவரும் அவரே என்பதால் தன் அரசியல் வாழ்க்கையில் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தார். மேலும் நாங்கள் தங்கி இருந்த அறையின் பெரும்பாலுமான நேரத்தில் தொலைகாட்சியில் அவர் பேட்டி தான் ஓடிக்கொண்டிருக்கும்.
மனதிற்கு ரம்மியமான இதமான அந்த ஊட்டி குளிரில் நன்றாக எங்கள் பொழுதுகளை கழித்தோம் . வினோத் அந்த துயரமான சம்பவத்தை மறந்திருந்தான் . அதே சமயம் தேர்தலுக்கான அனைத்து விஷயங்களும் மும்மரமாக நடந்துக்கொண்டிருந்த வேளையில், பாலா அண்ணனின் அறையில் இருந்து எதோ உடையும் சத்தம் வரவே நாங்கள் அந்த கதவு அருகே சென்று அந்த அறையில் நடக்கும் உரையாடல்களை கேட்க துணிந்தோம் .
“ என்னடா நினைச்சிகிட்டு இருக்கான் அவன் ?? நேத்து வந்த பையன் அவன்?? என்னை தோற்க்கடிச்சிடுவனா ?? “ என சீறிக்கொண்டிருந்தார்.
“ அண்ணன் , நான் வேணா நம்ம பசங்கள விட்டு ....?? “
“ வேணா ... நானே பாத்துக்குறேன் !! “
அவர்கள் கதவை நோக்கி நடக்கும் சத்தம் கேட்கவே நாங்கள் எல்லோரும் அமைதியாக தொலைக்காட்சி பார்ப்பது போல பாவ்லா செய்தோம் . எங்களை பார்த்து சிரித்துவிட்டு வேகமாக நடந்து காரில் ஏறி புறப்பட்டார் .
என்னவாக இருக்கும் என நாங்கள் குழம்புகையில் ,தொலைக்காட்சி அதற்கான விடையை கொடுத்தது . அந்த தொகுதியில் வேட்பாளராக நிற்கும் எதிர்கட்சியை சேர்ந்த ஆறுமுகம் என்பவன் கொடுத்த பேட்டி தான் அது
“ இந்த தொகுதியில் நிற்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் தோற்று எங்களிடம் அவமானப்படுவது உறுதி !! என தன் சொத்தை பற்கள் நிறைந்த சிரிப்பை வெளிப்படுத்தினார் ஆறுமுகம் .
இந்த அரசியலில் எதுக்குமே ஒரு சுமூக தீர்வு இருக்காதா என எண்ணி கொண்டு நான் என் அறையில் சென்று கதவை மூடிவிட்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து ஜன்னலில் பார்த்த பொழுது அந்த வானிலை மேலும் ஆழகாக தெரியவே வெளியில் வந்து என் மனதிற்கு புத்துயிர் அளித்தேன் .
தூரத்தில் யாரோ குடைபிடித்து இருவர் பேசிக்கொண்டிருந்தனர் . அநேகமாக அது வயோவும் வினோத்துமாக தான் இருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிகிறார்கள் என தனித்தனியே என்னிடம் கூறி இருந்த பின்னும் தனக்குண்டான நண்பர்கள் கோட்டிலிருந்து வெளிவந்து காதலை பரிமாற அவர்கள் இன்னும் தயக்கபட்டு கொண்டிருக்கிறார்கள்.
“ வினோத் ... நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் . ஆனா அதுக்கு முன்னாடி நீ ஆமா இல்லன்னு பதில் மட்டும் சொல்லணும் “ என்றாள் தயங்கி தயங்கி .
“ ம்ம்ம்.. “ என் புன்னைகத்துக்கொண்டே கையில் இருந்த கல்லை குளத்தில் எறிந்தபடி இருந்தான் வினோத் .
“ சொல்லு ... “
“ ம்ம்ம்ம் ... “ எனக்கு எப்பவுமே சரி தான் என்று சிரித்தான் வினோத்.
இருவருக்கும் புரிந்து விட்டது . அந்த மழைச்சாரல் நின்ற பிறகும் அந்த காதல் வாசம் அங்கே வீசிக்கொண்டிருந்தது.
ஒருவாரம் சென்றதே தெரியவில்லை. சரி மறுநாள் சென்னைக்கே கிளம்பலாம் என்று முடிவெடுத்து பாலா அண்ணனிடம் சொல்ல அவர் தேர்தலில் எப்படியும் ஜெயிப்பது நாம் தான். எனவே எல்லாக் கொண்டாட்டத்தையும் முடித்து விட்டு செல்லுங்கள் என்று அன்பு கட்டளையிடவே அதை எங்களால் மீற முடியவில்லை.
மறுநாள் இரவு பாலா அண்ணன் வீட்டு மொட்டைமாடியில் நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்க அந்த தெருவில் அகோரி போன்று ஒருவன் வீட்டை சுற்றி குறுக்கும் நெடுக்குமாக சந்தேகப்படும்படி நடக்கவே நாங்கள் இந்த விஷயத்தை பாலா அண்ணனிடம் கூறினோம் . இதை கேள்விப்பட்டவுடனே பாலா அண்ணன் வெளியே வந்து அந்த அகோரியை நோட்டமிட்டு அவனிடம் பேச்சுக்கொடுக்க நாங்கள் மூவரும் அவர் பின்னால் நின்றுக்கொண்டிருந்தோம்.
“ தயவு செய்து இந்த வீட்டை காலி செய்திடு ,உனக்கு யாரோ சூனியம் வச்சிருக்காங்க. உனக்கு சீக்கிரமா கெட்டது நடக்கும் “.
“ யோவ் ... யாருயா நீ... நான் யாரு தெரியுமா ?? “ என அண்ணன் கர்ஜித்தார்
அகோரி சிரித்தான் .
“ சரி நம்பிக்கை இல்லை என்றால் உன் வீட்டு பின்னாடி இருக்கும்  பாரங்கல்லிருந்து மூன்றடி தள்ளி தோண்டிப்பார் .“
“ போடாங் ..”. என்று கோபத்தில் அவனை அடிக்க பாலா அண்ணன் கையை ஓங்கவே , அவன் சிரித்து கொண்டே நகர்ந்து விட்டான். எங்களுக்கும் அது டிவியில் சீரியல் காட்சி போல இருந்தாலும் ,அந்த நொடி அது உண்மையாய் இருந்தால் என்னவாக இருக்கும் என்ற அதீத கற்பனைக்கு தள்ள பட்டோம் .
முதலில் கொலை பின் அமானுஷ்யமா ? என எங்கள் மனது குழம்பி இருந்தாலும் அதை தெளிவாக்க காலை நாங்கள் நால்வரும் அந்த அகோரி கூறியதை போல் தோண்ட , ஒரு தகிடின் மேல் ஏதோ எரிக்கப்பட்டு அது புதைக்கபட்டிருந்தது. அதை கண்ட பாலா அண்ணன் ஒரு நிமிடம் ஆடி விட்டார் . கண்டிப்பாக அது ஆறுமுகத்தின் வேலையாக தான் இருக்கும் என நினைத்துகொண்டு அந்த அகோரி தென்பட்டால் பிடித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டு கிளம்பி விட்டார் .
எங்களுக்கும் அதன் முடிவு என்ன தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தோம் . அதற்குள் பாலா அண்ணன் பத்திரிக்கைகளுக்கு செய்தி சொல்லி ,தன் எதிர்க்கட்சி செய்கின்ற கிழ்த்தரமான வேலை இது என்று குறிப்பிட்டு அந்த விஷயத்தை மாலை தலைப்பு செய்தி ஆக்கினார். ஆறுமுகத்துக்கும் பாலா அண்ணனுக்கும் வார்த்தை அறிக்கை போர் ஊடகத்தில் வெடிக்க , அன்றிரவு அந்த அகோரி தென்படவே, நால்வரும் சென்று விஷயத்தை கூறி இதிலிருந்து எப்படி மீள்வது என கேட்க , அகோரியோ “ உன் மரணம் நெருங்கி விட்டது , தயவு செய்து அதிலிருந்து ஓட முயற்சிக்காதே “ என அண்ணனிடம் கூறி சென்றுவிட்டான் .
பாலா அண்ணனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . படப்படப்பு அதிகமாகியது.நாங்கள் மூவரும் அவரை சமாதானப்படுத்தி படுக்க வைத்து எங்கள் அறைக்கு செல்ல மணி இரவு ஒன்றை தொட்டிருந்தது. அமாவாசை இரவு நேர பொழுதில் காட்டுக்கு அருகே அமைந்துள்ள பாலா அண்ணனின் வீடு அவ்வளவு ரம்மியமாக அன்று எங்களுக்கு தெரியவில்லை .
மறுநாள் அவர் சகாக்களை அழைத்து விஷயத்தை கூறி அவருடன் இருக்குமாறு சொல்லி நாங்கள் கிளம்ப முடிவு செய்து மறுநாள் காலைக்காக காத்துக்கொண்டிருந்தோம். பூச்சிகளின் சின்ன சலசலப்பு சத்தமும் எங்களை ஆச்சதில் ஆழ்த்த, மூவரும் எங்கள் அறையில் தூங்காமல் இருந்து போர்வையை போர்த்துகையில் பவர் கட் ஆகியிருந்தது . இன்வர்ட்டர் ரிப்பேர் என மூன்று நாட்கள் முன்னால் தான் பாலா அண்ணன் குறிப்பிட்டு அதை சரி செய்ய சொல்லி கடைக்கு அனுப்பிருந்தார்.
கடிகாரத்தின் நொடி முள் நகரும் சத்தமும் பாத்ரூமில் வீணாக குழாயில் ஒழுகும் தண்ணிர் சத்தமும் தெளிவாக கேட்டது . அடுத்து என்ன நடக்கும் என யோசிக்கும் அந்த நிமிடம் டிவியின் மேல் வைக்கப்படிருந்த அண்ணனின் போட்டோ உடைந்த சத்தம் கேட்டு மூவரும் வெளியே வர எத்தனிக்கையில் பாலா அண்ணனின் அறையில் ஒலித்த செல்போன் ரிங்டோன்,எங்கள் இதயத்தை பிடுங்க முயற்சிக்க , தீடீரென்று வேகமாக கதவை திறந்து பாலா அண்ணன் தெருவை நோக்கி ஓடினார். அவர் பின்னாலே சென்ற நாங்கள் அந்த தெருமுனைக்கு சில நொடிகள் தான் தாமதம் .வேகமாக வந்த காரின் மீது மோதி அண்ணன் இறந்துவிட்டார்.

உடனடியாக அந்த வண்டியின் டிரைவரை பிடிக்க பார்த்த பொழுது அவன் மிகவும் குடித்திருந்தான். போலிசுக்கு போன் செய்துவிட விஷயம் அறிந்து கட்சிக்காரர்கள் அனைவரும் ஒன்று கூட , அந்த குடிபோதை டிரைவர் ஆறுமுகத்தின் டிரைவர் என தெரியவந்தது !!! அதற்கும் மேலாக அந்த களேபரத்தில், எனக்கு வந்த அந்த வாட்ஸ்ஆப் ஆடியோ இந்த கேசையே திருப்பி போட்டது. இனிமேல் தான் எல்லாம் ஆரம்பம் என உணர்ந்தேன் !!    

CLICK HERE TO GO TO NEXT EPISODE http://karthikanavugal.blogspot.in/2017/09/e07_8.html

Comments

Popular posts from this blog

பாடல்கள் பலவிதம் - Songs i love

" பாடல்கள் பலவிதம் “  இசை என்பது உலகின் மொழி . அத்தகைய மொழியில் குறிப்பாக தமிழ் பாடல்கள்  நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. அவை யாவும் மனநிலை மாற்றும் போதை வஸ்துக்கள் . நாம் பெரும்பாலும் ரசித்த , சிலர் ரசிக்க தவறிய பாடல்களின் உணர்வுகளை வெளியே எடுத்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.   பாடல்கள் பலவிதம் #1 Song link - https://www.youtube.com/watch?v=v8eUuzElvX4 “ தென்றல் வந்து தீண்டும் போது “ - அவதாரம் முதல் பாடல் இசைஞானியின் பாடல் . எத்தனையோ பாடல்கள் அவர் கடந்து வந்திருந்தாலும் இந்த பாடல் ஒரு பிளாட்டினம் கிரீடம் . இந்த பாடலை சிலாகிக்க, வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் வறட்சி ஆகி இதயம் அந்த பாடலில் லயித்துவிட்டது .  அது தான் “ தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ, மனசுல “ பாடல்.   கண் பார்வை அற்ற நாயகி ,தனக்காக நாயகனும் கண்ணைக்கட்டி கொண்டு கஷ்டப்படுவதை அறிந்து , அவளுக்கு கண்ணாக இருந்து தன்னை வழிநடத்தும்படி கேட்க , அந்த ஒரு பரிவின், ஆசையின் புள்ளியில் தொடங்குகிறது பாடல். ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையின் சாரம்சத்தை கொண்டு  அன்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் -1

அன்று மாலை எமிக்கு எதுவுமே சரியாய் நடப்பதாய் தெரியவில்லை.சிறிது நேரம் யோசித்தவள் தலை வலிக்கவே  யோசிப்பதை நிறுத்திவிட்டு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு கிளம்பி சென்று கொண்டிருந்தாள் . “ மேடம் இந்த புக்கு ரொம்ப நல்லா இருக்கும் ... வாங்கி படிங்க எல்லாருடைய விருப்பத்துக்கு ஏத்தா மாதிரியும் இங்க கம்மி விலையில் புத்தகம் கிடைக்கும் “ என எமியை மட்டுமே ஒருவாறு உற்று நோக்கி கொண்டே தன் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தான் அந்த வியாபாரி கிழவன். அந்த கிழவனை கடந்து சென்றவள் , ஒரு நிமிடம் நின்று அவனை திரும்பி பார்த்தாள். அவன் கண்கள் அவளை " வா வா "  என்றது . அவளும் அவனிடம் வசியப்பட்டது போல அவனிடம் ஈர்க்கப்பட்டு அவனருகே சென்றாள் . வானிலை கருப்பு மேகங்களாய் மாற , மற்ற பறவைகள் எல்லா இடத்திலும் பறந்து செல்லும் போது அங்கே வித்தியாசமாய் கூட்டமான அண்டங்காக்கைகள் வட்டமிட்டு அமர்ந்து கொண்டு எமியை உற்று நோக்கி சூழ்நிலையை மோசமாக போவதை உணர்த்தியது. “ வா எமி ...” “ என் பெயர் அவனுக்கெப்படி தெரியும் ?? ” என அதிர்ந்தாள் . “ எனக்கு எல்லாம் தெரியும் எமி ...! “ என சிரித்தான் அந்த நரைத்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் - 4

மெல்ல மார்க்கை நோக்கி நடந்து வந்த லீமர் வான்ட் , தன் சாத்தான் படைகளை கை காட்டி சைகையில் நிறுத்தினான் . இருவருக்கும் பயத்தில் இதய துடிப்பு உசேன் போல்டுடன் போட்டி போட்டு கொண்டு ஓடியது . லீமர் வான்ட் மெதுவாக தன் கைகளை மார்க்கின் கழுத்தின் மீது வைத்து அவனை தூக்க ஆரம்பித்த போது  மார்க் அலறினான் !! “ என்ன விட்டுடு ....” லீமர் . “ ஆமா ... அவன விடு “ என கதறினாள் எமி. “ ஹாஹஹாஹாஹா..... “ என லீமர் சிரித்த போது அங்கே  அந்த மின்னல் வெளிச்சத்தில் அவன் கொடூரமாய் தெரிந்தான் . “ விட்டுடறேன்..... ஆனா நீ எனக்கு வேணும் எமி ...” என மீண்டும் வில்லத்தனமாக சிரித்தான் லீமர். அவனின் இறுக்கமான பிடியிலும் அந்த மழையிலும் மார்க்கால் வாயை திறக்க முடியவில்லை . “ சரி ... அவன விட்டுடு ... என்ன எடுத்துக்கோ ...” “ தட்ஸ் மை கேர்ள் ....கம் டு பாப்பா “ என மறு கையால் எமியை கழுத்தோடு தொட்டு தூக்கினான் லீமர் . அப்படி தூக்கும் பொழுது லீமரின் நகம் பட்டு எமிக்கு லேசாக கீறி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது .  இருவரையும் ஒரே மூச்சில் தின்றுவிட தன் நீண்ட நாக்கை தொங்க போட்டு எமியை நெருங்க ...