Skip to main content

மெல்ல கொல்வேன் - E03

மூன்று நாட்களுக்கு முன்பு.............
அந்த வுட்லாண்ட்ஸ் ஷு காலடி சத்தம் கேட்டவுடன்  அலுவலகத்தில் உள்ள எல்லோரும் கம்ப்யுட்டர் திரையை உற்று பார்க்க தொடங்கினர். பயத்தில் கைகள் தானாகவே கீபோர்டில் டைப் அடிக்க தொடங்கியது. அந்த சத்தம் அவர்களை நெருங்க மேலும் அவர்கள் பதட்டம் அடைந்தார்கள் .
நேராக ஷு மற்றும் கோட் ஸுட் சகிதம் அந்த கால்கள் தன்னுடைய கேபினை அடைந்தது . “ சங்கரபாண்டி எம்.டி எஸ்.பி இண்டஸ்ட்ரீஸ்” என அந்த கேபின் கதவில் எழுதி இருந்தது. மொட்டை தலை, நாவல் பழ நிற கருமையான முகம் . அதற்க்கு திருஷ்டியாய் பற்களில் ஒன்று மட்டுமே வெள்ளையாய், மற்றது எல்லாம் மஞ்சளாய் அடுத்த வருட பொங்கல் வெள்ளையடிப்பிற்காக காத்து கொண்டிருக்கிறது. மீசை தாடி என காடு போல முகத்தில் படர்ந்து ,அதை மழிக்க கூட நேரமில்லா பிசியான அதே சமயம் வயதான தொழிலதிபர் என உணர்த்தியது . சங்கரபாண்டி, வினோத்தின் அப்பா என்பது அவர் வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் குடும்ப படம் மட்டுமே அவ்வப்போது அவருக்கு நினைவு படுத்தும். அதில் அவர் மனைவி மட்டும் உயிரோடு இல்லை .
வந்ததும் வாராததும் அவர் டேபிளில் இருக்கும் போனில் கிருஷ்ணனுக்கு அழைப்பு  சென்றது . அவர் அவனை அழைத்து  ரிசீவரை கீழே வைப்பதற்குள்  “ மே ஐ கம் இன் சார் ? “ என்ற குரல் கேட்டது.   
“ ம்ம்ம்...”
உள்ளே வந்து மெதுவாக கதவை சாத்திவிட்டு அவர் முன் பவ்யமாய் எண்ணெய் வைத்து சீவிய ஒரு சைடு வழுக்கையோடு பெரிய புட்டி கண்ணாடி அணிந்து நெற்றியில் நாமத்துடன் ஒரு முப்பதுவயதில் ஒரு ஆள் தென்பட்டான். அவன் தான் சங்கரபாண்டியின் பி.ஏ. சங்கரபாண்டி ஒன்னுக்கு போவதாய் இருந்தாலும் அவனுக்கு தெரியாமல் இருக்காது. நல்ல விசுவாசி.
“ கூப்பிடிங்களே சார் .... “
“ ம்ம்ம்... அந்த மைலோமல் இண்டஸ்ட்ரீஸ்க்கு டெண்டர் அமௌன்ட் கோட் பண்ண சொன்னனே, பண்ணிட்டியா ?? ”
“ம்ம்ம் பண்ணிட்டேன் சார் ... ஆனா ..”
“என்ன, ஆனா ?? “ அவனை முறைத்தார் சங்கரபாண்டியன்
“ நம்மள விட சின்ன கம்பெனி ஒன்னு, எப்படினே தெரியல..... கம்மியா கோட் பண்ணி டெண்டர் வாங்கிட்டாங்க “  என அன்றைய தின நாளிதழை காட்டி  மேலும் பேச தயங்கினான் கிருஷ்ணன்.
“ பிரபல எஸ்.பி இண்டஸ்ட்ரீசை நொறுக்கியது அகில் இண்டஸ்ட்ரீஸ்“
“ ஹஹஹா ... ம்ம்ம் .. குட் ... சின்ன கம்பனியா... பைன் ... வளர்ந்துட்டு போகட்டும் .”
அவர் இதை இவ்வளவு ரிலாக்சாக எடுத்து கொள்வார் என கிருஷ்ணன் எதிர்பார்க்கவில்லை .
“ அது மட்டும் இல்லாம இந்த வருஷம் நம்மளோட கம்பனி ஷேர்ஸும் கம்மி ஆகி விட்டது.” என மீண்டும் தயங்கினான் .   
“ ம்ம்ம்ம்... சரி நீ போகலாம் ...”
சங்கரபாண்டியனுக்கு தொழில் முறையாக எத்தனையோ எதிரிகள் இருந்தாலும் ஒரு சின்ன கம்பனி தனக்கு போட்டியாக வருவதை அவர் எதிர்பார்க்க வில்லை. அவர் இதைப்பற்றி நினைத்து கொண்டிருந்த போது  மதிய உணவு இடைவெளி என்பதை அந்த அறையின் கடிகாரம் ஒலி எழுப்பி அவருக்கு நினைவூட்டியது .
கேபினை விட்டு வெளியே வந்து
“ ப்ரண்ட்ஸ் ... இந்த வாரம் என்னோட வீட்ல உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய பார்ட்டி அரேன்ஞ் செய்திருக்கிறேன் . அதுக்கான இன்விடேஷன் உங்களுக்கு சீக்கிரமா கிடைக்கும் . ஹாவ் ய குட் டே “  
அங்கே எல்லோரும், டீ கொடுக்கும் பையன் முதற்கொண்டு எல்லாரும் சங்கரபாண்டியை ஆச்சிரியமாய் பார்த்தனர் . அந்த டீ கொடுக்கும் பையனின் தலை கோதி  “ நீயும் வரணும் “ என்று சொல்லி விருட்டென தனது ஸ்கார்பியோவில் பரந்தார்.
அந்த அலுவலகம் ஆச்சிரியத்தில் இருந்து மீள சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
வீட்டிற்க்கு வந்ததும் உடைகளை களைந்து நேராக நீச்சல் குளத்தில் நீந்திவிட்டு தன்னுடைய ரகசிய அறையில் ஓய்வெடுத்தார் சாங்கரபாண்டி .
மாலை எழு மணியை தொட்டது . வானம் இருட்ட தொடங்கி ஒரு மணி நேரம் ஆகி இருக்கும் . டெலிபோன் அழைப்பு வந்தது .
“ ஐயா .. எல்லாம் ரெடி ... நீங்க வருவது மட்டும் தான் பாக்கி “  என்றது அந்த மறுமுனையின் குரல் . காலையில் சார் என அழைத்த குரல் இப்பொழுது ஐயா என அழைக்க ஆரம்பித்துள்ளது.
சங்கரபாண்டி நெற்றியில் பெரிய பட்டை அடித்து லுங்கி கட்டி அழகாக தங்க சங்கலிகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு பெரிய சுருட்டை பற்ற வைத்து தனது காரில் ஏறி விருட்டென சென்றான் . காலையில் பார்த்த சங்கர பாண்டியா இது என்ன அவரை அடையாளம் கண்டுபிடிக்க நமக்கே சிறிது நிமிடங்கள் பிடிக்கும்.
வண்டி நேராக ஒரு ஆள் அரவமற்ற இடத்திற்கு சென்றது . “எஸ்.பி குடவுன்“ என துருப்பிடித்த பலகை ஒன்று கீழே உடைந்து இளித்து கொண்டிருந்தது .
உள்ளே வேகமாக சங்கரன் வருவதை பார்த்த அவன் அடியாட்கள் , சங்கரனுக்கு மேஜை மற்றும் நாற்காலி போட்டு பிரியாணி பொட்டலத்தை எடுத்து வைத்தனர் .
ஆசுவாசமாக பிரியாணியின் எலும்பு துண்டுகளை கடித்து சுவைத்து கொண்டிருந்தான் .
“ அண்ணே ... வேணாண்ணே .. எனக்கேதும் தெரியாதுனே.. .” என ஒரு அலறல் சத்தம் உள்ளே நெருங்கி வந்தது .
கிருஷ்ணன் அந்த டீ கொடுக்கும் பையனுடன் வந்திருந்தான் .
மும்மரமாக  குனிந்து பிரியாணி சாப்பிடுகொண்டிருந்த சங்கரன் மெதுவாக நிமிர்ந்து  அவனிடம் “பிரியாணி சாப்பிடுறியா?? என்றார்.
அவனுக்கு வேர்த்து கொட்டிக்கொண்டிருந்து.
அந்த பையனை பார்த்து புன்னைகத்துவிட்டு மீண்டும் சாப்பிட ஆரம்பித்தார் .
“ அண்ணே .. நான் எதுவும் பண்ணலேனே... அகிலன் தான் நீங்க டெண்டர் பத்தி பேசுறத தெரிஞ்சிக்க உங்க ரூம்ல டீ வைக்கும் போது அப்பிடியே ஒட்டு கேக்கற மிஷின வைக்க சொன்னருனே...மத்தப்படி... “ என அவன் முடிக்கும் முன்பே கிருஷ்ணன் அவன் வாயைப்பொத்தி சங்கரன் முன் டேபிளில் உட்க்கார வைக்க, அவன் பயத்தில் மேலும் பதட்டமடைந்தான்.
பொறுமையாக எல்லாவற்றையும் சாப்பிட்டு கைக்கழுவி அவன் டேபிளில் மேல் கால் வைத்து பக்கத்திலிருந்து ஒரு கத்தியை வாங்கி அவன் வயிற்றில் கோலம் போட்டார் .
“ த்தா தே.பையா.... யாரு கிட்ட உன் வேலைய காட்டுற... இது என் கம்பனி. . எனக்கு எதிரியா நிக்க கூட உங்களுக்கு தைரியம் வர கூடாது டா . கவலைப்படாத.... அகிலனும் உன் கூட சீக்கிரம் வருவான்..”
அன்று அலுவலகத்தில் தற்செயலாக கீழே விழுந்த பென்சிலை எடுக்கும் பொழுது தான் அந்த மைக்கை தனது டேபிள் அடியில் ஓட்ட வைக்கப்பட்டிருப்பதை கவனித்தார். அவர் யூகித்து சரியாக இருந்தது .
“ இவனை எங்கயாவது டிஸ்போஸ் பண்ணிடுங்க ...”
அடியாட்கள் அந்த பையனின் உடலை அப்புறப்படுத்த தொடங்கியபோது மீண்டும் ஒரு சுருட்டை தன் வாயில் திணித்தார் சங்கரபாண்டி .
“அண்ணே ... நம்ம கம்பனி இருக்கற நிலைமைல இப்போ எதுக்குனே பார்ட்டி எல்லாம் ...??” என்றான் கிருஷ்ணன் .

“ போடா மடையா ...இப்போ இந்த பார்ட்டி மூலமா தான் என்னோட செல்ல்வாக்க உயர்த்த போறேன் . ஊர்ல இருக்கற எல்லா பெரிய மனிஷங்களும் அவங்க பசங்களும் கண்டிப்பா இதுல கலந்துகனும். ஏன்னா விளையாட வேண்டிய விஷயம் நிறைய இருக்கு “ என சங்கர பாண்டி சிரிக்க ,அதன் அர்த்தத்தை உணர்ந்து கிருஷ்ணனும் சிரித்தான் .


இப்போது..............
இரவு பதினோரு மணி
தெருவிளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தன... மங்கலாக ! கதவுகளும் அடைப்பட்டு உறங்கி கொண்டிருந்த வேளையில் அந்த உருவத்துக்கு மட்டும் என்ன வேலை என மெலிதாக வருடிய காற்று கேட்டது . திருடன் போல கையுறை அணிந்தும், குளிருக்கு இதமான ஜாக்கெட் சகிதம் வேகமாக அவன் மனதில் இருக்கும் இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தான். கால்கள் பர பரவென கைகள் துருதுருவென கண்கள் மட்டும் இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருந்த நொடியில் நின்று விட்டது . இலக்கை அடைந்துவிட்டன போலும்.
ஒரு வீட்டின் பின் சுவரின் மீது பூனை போல சத்தமில்லாமல் அழாக ஏறி குதித்தான். வீட்டின் முன்புறம் எழுதியுள்ள வரதராஜன் – தொழிலதிபர் என்னும் போர்டு அவனுக்கு பிடிக்கவில்லை போலும். வீட்டின் ஒரு ரூமில் லைட் எரிந்து கொண்டிருந்த திசையை பதுங்கி பதுங்கி அடைந்தான் . கொண்டு வந்த பேக்கில் உள்ள ஒரு வித உபகரணத்தை எடுத்து ஜன்னல் கண்ணாடியில் அழகாக வட்டமாக ஒரு ஓட்டை போட்டு  கண்ணாடி பகுதியை வெளியே எடுத்து தன்னுடைய ஹான்ட்டி கேமிராவில் படம் பிடிக்க தொடங்கினான்.
“ இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன ..?? என்ன அவசரம் என்ன அவசரம் சொல்லு ?? “ என வரதராஜன் தன் கணக்கில் வராத “செல்லத்தோடு“ கொஞ்சி கொண்டிருந்தார் .
மெல்லமாக சிரிப்பை அடக்கி கொண்டு வீடியோவை அவன் தெளிவாக எடுக்க , அவர்கள் செய்த எல்லா சில்மிஷமும் அழகாக பதிவாகியது . எல்லாம் முடிந்த நிலையில் வந்த வழியே சென்று தூரத்தில் தான் நிறுத்திய  ட்யுக் வண்டியில் பறந்தான் .
ஒரு இடிந்த கட்டிடம் வந்ததும் வண்டியை நிறுத்தி வேகமாக உள்ளே சென்றது அந்த பரப்பர கால்கள் . துருத்துறு கைகள் ஒரு பழைய கணினியை ஆன் செய்து ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அந்த வீடியோ பதிவை அட்டாச் செய்து அனுப்பி விட்டு ஆயாசமாக சோபாவில் கண்ணயர்ந்தான்.
போன் மணி அடித்தது .
“என்ன வேலைய முடிச்சிட்டியா  ?? “ என்றது ஒரு பெண் குரல் .
“ ம்ம்ம்... ஆனாலும் உங்க புருஷன் சாதாரண ஆள் இல்ல மேடம்“...என நக்கலாக சிரித்தான் .
“ ஹே ... என் புருஷன் மேல சந்தேகப்பட்டது சரியா போச்சி ..... நான் வீடியோவ பார்த்தேன் . அந்த மனுஷன என்ன பண்றேன் பாரு ..... சரி நீ கேட்டா மாதிரி காச அன்றைக்கு மீட் பண்ண இடத்துல கொடுத்துடறேன். “
“ ம்ம்ம்ம் சரி மேடம் ... என்ன தான் நான் ஒரு அரசு கிட்ட விருது பெற்ற டிடக்டிவா இருந்தாலும் , இப்போ என்கிட்டே காசு இல்லாத சூழ்நிலை. அதனால நீங்க சொல்றதுக்கு தலையாட்ட வேண்டியதா போச்சி .. இனிமே அந்த மாதிரி நான் எதுவும் பண்ண மாட்டேன், புரிஞ்சிதா ?? ”
“ சரி....நான் வைக்கிறேன் “
தொடர்பு துண்டிக்கப்பட்டதும் சோபாவில் படுத்துக்கொண்டு போர்வையை போர்த்தி கண்ணை மூடினான் . அங்கே அவனுடைய ரிச்சர்ட் என எழுதிய ட்யுக் பைக் மட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்தது !!
CLICK HERE TO GO TO NEXT EPISODE - http://karthikanavugal.blogspot.in/2017/09/e04.html

Comments

Popular posts from this blog

பாடல்கள் பலவிதம் - Songs i love

" பாடல்கள் பலவிதம் “  இசை என்பது உலகின் மொழி . அத்தகைய மொழியில் குறிப்பாக தமிழ் பாடல்கள்  நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. அவை யாவும் மனநிலை மாற்றும் போதை வஸ்துக்கள் . நாம் பெரும்பாலும் ரசித்த , சிலர் ரசிக்க தவறிய பாடல்களின் உணர்வுகளை வெளியே எடுத்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.   பாடல்கள் பலவிதம் #1 Song link - https://www.youtube.com/watch?v=v8eUuzElvX4 “ தென்றல் வந்து தீண்டும் போது “ - அவதாரம் முதல் பாடல் இசைஞானியின் பாடல் . எத்தனையோ பாடல்கள் அவர் கடந்து வந்திருந்தாலும் இந்த பாடல் ஒரு பிளாட்டினம் கிரீடம் . இந்த பாடலை சிலாகிக்க, வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் வறட்சி ஆகி இதயம் அந்த பாடலில் லயித்துவிட்டது .  அது தான் “ தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ, மனசுல “ பாடல்.   கண் பார்வை அற்ற நாயகி ,தனக்காக நாயகனும் கண்ணைக்கட்டி கொண்டு கஷ்டப்படுவதை அறிந்து , அவளுக்கு கண்ணாக இருந்து தன்னை வழிநடத்தும்படி கேட்க , அந்த ஒரு பரிவின், ஆசையின் புள்ளியில் தொடங்குகிறது பாடல். ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையின் சாரம்சத்தை கொண்டு  அன்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் -1

அன்று மாலை எமிக்கு எதுவுமே சரியாய் நடப்பதாய் தெரியவில்லை.சிறிது நேரம் யோசித்தவள் தலை வலிக்கவே  யோசிப்பதை நிறுத்திவிட்டு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு கிளம்பி சென்று கொண்டிருந்தாள் . “ மேடம் இந்த புக்கு ரொம்ப நல்லா இருக்கும் ... வாங்கி படிங்க எல்லாருடைய விருப்பத்துக்கு ஏத்தா மாதிரியும் இங்க கம்மி விலையில் புத்தகம் கிடைக்கும் “ என எமியை மட்டுமே ஒருவாறு உற்று நோக்கி கொண்டே தன் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தான் அந்த வியாபாரி கிழவன். அந்த கிழவனை கடந்து சென்றவள் , ஒரு நிமிடம் நின்று அவனை திரும்பி பார்த்தாள். அவன் கண்கள் அவளை " வா வா "  என்றது . அவளும் அவனிடம் வசியப்பட்டது போல அவனிடம் ஈர்க்கப்பட்டு அவனருகே சென்றாள் . வானிலை கருப்பு மேகங்களாய் மாற , மற்ற பறவைகள் எல்லா இடத்திலும் பறந்து செல்லும் போது அங்கே வித்தியாசமாய் கூட்டமான அண்டங்காக்கைகள் வட்டமிட்டு அமர்ந்து கொண்டு எமியை உற்று நோக்கி சூழ்நிலையை மோசமாக போவதை உணர்த்தியது. “ வா எமி ...” “ என் பெயர் அவனுக்கெப்படி தெரியும் ?? ” என அதிர்ந்தாள் . “ எனக்கு எல்லாம் தெரியும் எமி ...! “ என சிரித்தான் அந்த நரைத்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் - 4

மெல்ல மார்க்கை நோக்கி நடந்து வந்த லீமர் வான்ட் , தன் சாத்தான் படைகளை கை காட்டி சைகையில் நிறுத்தினான் . இருவருக்கும் பயத்தில் இதய துடிப்பு உசேன் போல்டுடன் போட்டி போட்டு கொண்டு ஓடியது . லீமர் வான்ட் மெதுவாக தன் கைகளை மார்க்கின் கழுத்தின் மீது வைத்து அவனை தூக்க ஆரம்பித்த போது  மார்க் அலறினான் !! “ என்ன விட்டுடு ....” லீமர் . “ ஆமா ... அவன விடு “ என கதறினாள் எமி. “ ஹாஹஹாஹாஹா..... “ என லீமர் சிரித்த போது அங்கே  அந்த மின்னல் வெளிச்சத்தில் அவன் கொடூரமாய் தெரிந்தான் . “ விட்டுடறேன்..... ஆனா நீ எனக்கு வேணும் எமி ...” என மீண்டும் வில்லத்தனமாக சிரித்தான் லீமர். அவனின் இறுக்கமான பிடியிலும் அந்த மழையிலும் மார்க்கால் வாயை திறக்க முடியவில்லை . “ சரி ... அவன விட்டுடு ... என்ன எடுத்துக்கோ ...” “ தட்ஸ் மை கேர்ள் ....கம் டு பாப்பா “ என மறு கையால் எமியை கழுத்தோடு தொட்டு தூக்கினான் லீமர் . அப்படி தூக்கும் பொழுது லீமரின் நகம் பட்டு எமிக்கு லேசாக கீறி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது .  இருவரையும் ஒரே மூச்சில் தின்றுவிட தன் நீண்ட நாக்கை தொங்க போட்டு எமியை நெருங்க ...