“த்தா...டேய் ... அது யாரா இருந்தாலும் அவங்கள சாகடிக்காம விட மாட்டேண்டா , இங்க நான் தான் ராஜா , என்னை எதிர்த்து எவன் போட்டி போட்டாலும் அவனுக்கு சங்கு தான் .அது உன் தலைவனா இருந்தாலும் !! “ என அச்சில் வராத சில தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தப்பட்டு அந்த வாட்சப் ஆடியோ பரப்பரப்பாகியது. இந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆறுமுகம் என தெரிய வர , போலிஸ் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டது . மேலும் கொல்லப்பட்டவர் ஆளுங்ககட்சி என்பதால் அந்த கொலை வழக்கிற்கான விசாரிப்பும் தீர்ப்பும் வேகமாக வழங்கப்பட வேண்டும் என்று உறுதியாக அந்த கட்சிகாரர்கள் வலியுறுத்த ,அதற்கான பணிகள் துரிதமாக நடந்துக்கொண்டிருந்தன. இந்த விடுமுறை நாட்கள் இவ்வளவு வேகமாக , கணிக்க முடியாத விஷயங்கள் நடப்பது எங்களுக்கு அதுவே முதல் முறை .காவல்துறையிடம் வேண்டிய தகவலை கொடுத்துவிட்டு ,எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வருவோம் என உறுதி திரும்பினோம் . ஆனால் எங்கள் மூவருக்கும் ஒரே சிந்தனை . நாங்கள் கடந்துவந்த கொலைகள் யாவும் தற்செயலாக நடக்கிறதா அல்லது இதற்க்கு பின்னால் காரணம் இருக்கிறதா, அப்படி இருந்தால், யார் அது ?? , இனிமேலும் இது போன்ற கொலைக...